பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தடை - தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையம் அதிரடி
ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையம் அறிவித்துள்ளது.
இந்திய மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா (வயது 30) டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார். இவர் கடந்த மார்ச் 10ம் தேதி தேசிய அணிக்கான தேர்வு சோதனையின் போது சோதனை மாதிரியை சமர்பிக்க மறுத்தற்காக தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை அவருக்கு 4 ஆண்டுகள் தடைவிதித்துள்ளது.
சோதனை மாதிரியை தர மறுத்த குற்றத்திற்காக தேசிய ஊக்கமருத்து தடுப்பு முகமை பஜ்ரங் புனியாவை ஏப்ரல் 23 ஆம் தேதி இடைநீக்கம் செய்திருந்தது.
ஊக்க மருந்து சோதனைக்கு மாதிரி வழங்க மறுத்ததை தொடர்ந்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் பஜ்ரங் புனியாவை கடந்த ஏப்ரல் 23 ஆம் தேடி இடை நீக்கம் செய்தது. அதைத் தொடர்ந்து உலக மல்யுத்த கூட்டமைப்பும் பஜ்ரங் புனியாவை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இடை நீக்கத்தை எதிர்த்து பஜ்ரங் புனியா தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் மேல்முறையீடு செய்தார்.
இதையடுத்து பஜ்ரங் புனியா மீதான குற்றச்சாட்டு அறிக்கையை தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையம் வெளியிடும் வரை இடை நீக்கத்தை ரத்து செய்வதாக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவித்தது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி பஜ்ரங் புனியாவுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு மையம் நோட்டீஸ் வழங்கியது.
இதனிடையே அண்மையில் பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். கடந்த ஜூலை 11ஆம் தேதி எழுத்துப்பூர்வமாக குற்றச்சாட்டு அறிக்கை தெரிவிக்கப்பட்டதை அடுத்து செப்டம்பர் 20ஆம் தேதி மற்றும் அக்டோபர் 4ஆம் தேதி விசாரணை நடைபெற்றது.
'நான் வேண்டுமென்றே சோதனை மாதிரியை வழங்க மறுப்பு தெரிவிக்கவில்லை. தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனத்தின் செயல்முறைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. இதனால் நான் மறுப்பு தெரிவித்தேன்' என பஜ்ரங் புனியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தேசிய ஊக்க மருந்து தடுப்பு பிரிவு தடை விதித்தது.
What's Your Reaction?