களைக்கட்டப் போகும் ஆட்டம்.. தமிழ் தலைவாஸ் அணிக்கு கேப்டனாக சாகர் ரதி நியமனம்

ப்ரோ கபடி லீக் 11ஆவது சீசனில் தமிழ் தலைவாஸ் அணிக்கு கேப்டனாக சாகர் ரதி நியமிக்கப்பட்டு உள்ளார்.

Sep 11, 2024 - 14:58
Sep 11, 2024 - 15:13
 0
களைக்கட்டப் போகும் ஆட்டம்.. தமிழ் தலைவாஸ் அணிக்கு கேப்டனாக சாகர் ரதி நியமனம்
தமிழ் தலைவாஸ் கேப்டனாக சாகர் ரதி நியமனம்

2024ல் தொடங்கவுள்ள ப்ரோ கபடி சீசனி விளையாடவுள்ள தமிழ் தலைவாஸ் அணிக்கு சாகர் ரதி கேப்டனாக செயல்படுவார் என செய்தியாளாகள் சந்திப்பின்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ் தலைவாஸ் அணியின் தலைவராக சாகர் ரதி 3வது முறையாக அறிவிக்கப்பட்டு உள்ளார். இதனால், அணியின் ஒட்டுமொந்த வீரர்களின் ஆற்றல், திறன்கள் என அனைத்தும் ஒருசேர வெளிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.

ப்ரோ கபடியின் 9வது சீசனில் முதன்முதலாக அணியின் தலைவராக செயல்பட்டார் சாகம் ரதி. தமிழ் தலைவாஸ் அணியை வெற்றிகமாக வழி நடத்தி ப்ளே ஆஃப் சுற்றுக்கு கொண்டு சென்றதோடு, அரையிறுதி வரை அணியை அழைத்துச் சென்றார். இதனை தொடர்ந்து, 10ஆவது சீசன் மற்றும், தற்போது சீசன் 11ஆவது சீசனிலும் அணியை வழி நடத்தும் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.

தற்காப்பு விளையாட்டு, களத்தில் வியூகம் வகுப்பது, அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றால் சாகர் ரதி தன்னை பலமுறை நிரூபித்து உள்ளார். இதுவே சாகர் ரதி, மீண்டும் தமிழ் தலைவாஸ் அணியின் தலைவராக நியமிக்கப்படுவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.

தமிழ் தலைவாஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சாகர் ரதி கூறுகையில், தமிழ் தலைவாஸ் அணி கடந்த 2 சீசன்களாக தனித்திறமையுடன் செயல்பட்டு, முன்னணியில் இருந்து வருவதாகவும், அந்த அணிக்கு 3வது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பெரிய கௌரவமாக இருப்பதாக கூறினார். அணியினர் அனைவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு பணியாற்றி வருவதாகவும், இந்த புரிதல் ஆட்டத்தின்போது எதிரொலிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் தலைவாஸ் அணியின் வியூக பயிற்சியாளர் கூறுகையில், ப்ரோ கபடி சீசன் 11இல் விளையாடவுள்ள நிலையில் எங்கள் அணியின் கவளம் தெளிவாக உள்ளதாக தெரிவித்தார். ஆட்டத்தில் வெளிப்படுத்தவுள்ள நிறனை அதிகரிக்கவும். வலுப்படுத்தவும் தேவையான அனைத்து வியூகங்களையும் வகுத்திருப்பதாக கூறினார். இந்த சீசனில் விளையாடும் எங்கள் அணியின் ஒவ்வொரு வீரரும் உறுதியான மனதிலையுடன் விளையாடுவதற்கு அனைத்து விதமான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், இது ஆட்டத்தின் போது முழு வீச்சில் வெளியாகும் என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow