உலகின் மிக வயதான மனிதர் காலமானார்..!

உலகின் மிக வயதான மனிதராக அறியப்பட்ட பிரிட்டனை சேர்ந்த ஜான் டின்னிஸ்வுட் தன்னுடைய 112 வயதில் காலமானார்.

Nov 28, 2024 - 04:49
Nov 28, 2024 - 05:38
 0
உலகின் மிக வயதான மனிதர் காலமானார்..!
ஜான் டின்னிஸ்வுட்

உலகின் மிக வயதான மனிதராக அறியப்பட்ட பிரிட்டனை சேர்ந்த ஜான் டின்னிஸ்வுட் தன்னுடைய 112 வயதில் காலமானார். அவர் தனது கடைசி காலத்தில் வாழ்ந்த சவுத்போர்ட் கேர் ஹோமில் கடந்த திங்கள்கிழமை வயதுமூப்பு  காலமானதாக உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

டைட்டானிக் மூழ்கிய ஆண்டான  1912-ல் ஆகஸ்ட் 26 ஆம் தேதி பிறந்தார். அடா மற்றும் ஜான் பெர்னார்ட் டின்னிஸ்வுட் தம்பதிக்கு மகனாக பிறந்த டினிஸ்வுட் ராயல் ஆர்மி பே கார்ப்ஸில் பணியாற்றினார். டின்னிஸ்வுட் கணக்காளராகவும், தபால் சேவை ஊழியராகவும் பணியாற்றியவர்.

ஒருமுறை அவரது நீண்ட ஆயுளுக்கான ரகசியம் பற்றி கேட்கப்பட்டபோது , ​​டினிஸ்வுட் தன்னுடைய இளமை நாட்களில் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையே காரணம் என்று கூறினார். 

டைட்டானிக் கப்பல் மூழ்கியது, இரண்டாம் உலகப்போர்கள் உள்ளிட்ட பல வரலாற்று நிகழ்வுகள் இவரின் காலத்தில் நிகழ்ந்துள்ளன.  மேலும், 24 பிரிட்டிஷ் பிரதமர்களின் பதவிக்காலம் போன்ற குறிப்பிடத்தக்க நிகழ்வுகளைக் கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2022ஆம் ஆண்டில் உலகின் மிகவும் வயதான மனிதர் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா தனது 114 வயதில் அண்மையில் காலமானார். அவர் காலமானதை அடுத்து, உலகில் தற்போது வாழ்ந்து வருபவர்களில் மிக வயதான ஆண் என்ற பெருமையைப்  பிரிட்டனைச் சேர்ந்த ஜான் டின்னிஸ்வுட் பெற்றார்.  இதனைத்தொடர்ந்து, ஏப்ரல் 2024 இல் உலகின் வயதான மனிதராக டினிஸ்வுட் கின்னஸ் சாதனை புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்டார் . 

டினிஸ்வுட்டிற்கு மகள் சூசன் மற்றும் பேரக்குழந்தைகள் அன்னூச்கா, மரிசா, டோபி மற்றும் ரூபர்ட் மற்றும் கொள்ளுப் பேரக்குழந்தைகள் தபிதா, கால்லம் மற்றும் நீவ் ஆகியோர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அவரது குடும்பத்தினர் அவரை "பல சிறந்த குணங்கள்" கொண்ட நபர் என்றும், அவரை புத்திசாலி, தைரியமானவர், உறுதியானவர், நெருக்கடியில் அமைதியானவர், கணிதத்தில் புத்திசாலி என்று பாராட்டினர். மேலும், அவர் ஒரு சிறந்த உரையாடலாளராகவும் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow