சுக்கிரன் பெயர்ச்சி பலன்.. துலாம் ராசியில் ஆட்சி பெற்ற சுக்கிரன்..விபரீத ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள்

துலாம் ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் சுக்கிரனால் சில ராசிக்காரர்களுக்கு மாளவியா யோகம் கிடைக்கப்போகிறது.சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரப்போகிறது.

Sep 18, 2024 - 18:04
 0
சுக்கிரன் பெயர்ச்சி பலன்.. துலாம் ராசியில் ஆட்சி பெற்ற சுக்கிரன்..விபரீத ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள்
sukran peyarchi palan 2024

சென்னை:  கன்னி ராசியில் கடந்த ஒரு மாத காலமாக நீச்சம் பெற்று பயணம் செய்த சுக்கிரன் இன்று முதல் ( செப்டம்பர் 18) துலாம் ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார்.சுக்கிரன் சுகபோகங்களின் அதிபதி. சந்தோஷங்களையும் சுகங்களையும் தரக்கூடியவர். இவர் ஆட்சி உச்சம் பெற்றிருக்கும் போது கொடுக்கும் பலன்கள் அலாதியானது. சில ஜாதகங்களில் நீசம் பெற்றிருந்தாலும் நீசபங்க ராஜயோக நிலையை பெறும் போது நல்ல பலன்களை தருவார். கடந்த ஒரு மாத காலமாக கன்னி ராசியில் பயணம் செய்த சுக்கிரன் தனது ராசியான துலாமில் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். இந்த சுக்கிர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகத்தையும், சிலருக்கு மாளவியா ராஜயோகத்தையும் தரப்போகிறது. சுக்கிரனால் யாரெல்லாம் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகிறார்கள் என்று பார்க்கலாம். 

துலாம்:

உங்கள் ராசி நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் ஆட்சி பயணம் செய்வதால் பெற்று பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. பெண்கள் தங்க நகைகள் வாங்கலாம். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரமான பொருட்களை வாங்குவீர்கள்.  சுப செலவுகள் ஏற்படும். சத்தான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் வயிறு கோளாறுகள் வந்துவிடும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று சிவப்பு ரோஜா வைத்து வணங்கி வர நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்:

உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்வதால் சுப விரையம் ஏற்படும் வீட்டிற்குத் தேவையான  ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். 12ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் டிவி பிாிட்ஜ் ஏசி பொருட்கள் வாங்கலாம். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பை எற்படுத்தி கொடுக்கும். வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு மல்லிகை பூக்களை வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்ய நன்மைகள் அதிகரிக்கும்.

தனுசு:

உங்கள் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் சுக்கிரனால் வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். பண வருமானம் அதிகாிக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். வாகன வசதி மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமண வாழ்க்கையில் உற்சாகமடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது. அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். திருமண வாழ்க்கையில் உற்சாகமடைவீர்கள்.  மகிழ்ச்சியடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது. பண வருமானம் அதிகாிக்கும்.வீட்டில் துளசி செடிகளை வளர்க்க சுக்கிரன் பலம் அதிகமாகும். 

மகரம்:

உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் பயணம் செய்வதால் உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். வேலை செய்யும் இடத்தில் வார்த்தைகளில் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. கோபப்பட்டு பேசி நல்லதை கெடுத்துக்கொள்ள வேண்டாம். குடும்பத்தில் மனைவி அல்லது காதலியுடன் சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். பத்துக்கு அதிபதி பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது மாளவியா யோகம் தரும் அமைப்பு என்பதால் நன்மைகளும் சந்தோஷங்களும் ஏற்படும்.

கும்பம்:

உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பாக்ய ஸ்தான அதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். சுக்கிரன் உங்க சுக ஸ்தான அதிபதியும் ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியும் ஆவார். வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி உறவில் சந்தோஷங்கள் ஏற்படும். வெளிநாடு யோகம் கைகூடி வருகிறது.  பாஸ்போர்ட் எடுத்தவர்கள் விசாவிற்கு முயற்சி செய்யலாம். பணவரவும் அதிகரிக்கும். துர்க்கை அம்மனுக்கு குங்குமம் வாங்கிக் கொடுங்கள் நல்லதே நடக்கும்.

மீனம்:

உங்க ராசிக்கு எட்டாம் வீடான துலாம் ராசியில் சுக்கிரன் ஆட்சி பெற்று பயணம் செய்வது விபரீத ராஜயோக காலமாகும். எட்டிற்கு உரியவன் எட்டில் மறையப்போவது ராஜயோகம்தான். இருந்தாலும் எட்டாம் இடத்தில் சுக்கிரன் மறைவதால் வீட்டில் மனைவியின் உடல் நலத்தில் கவனம் வைக்கவும். இருவருமே கவனமாக இருந்தால் பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால் மருத்துவ செலவுகள் எற்படும்.  வெள்ளிக்கிழமை பால் பாயாசம் குங்குமப்பூ சேர்த்து துர்க்கை அம்மனுக்கு படைக்க நன்மைகள் நடைபெறும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow