Mahalakshmi Padugai : எளியவர்களை எட்டி உதைக்காதீங்க.. செருப்பால் அடிக்காதீங்க.. செல்வம் வீட்டில் தங்காது

Goddess Mahalakshmi Padugai : இந்துக்களுக்கு பாதுகை புனிதமானது. எனவேதான் பல கோவில்களிலும் நினைவு இல்லங்களிலும் பாதுகைகளை வணங்குகின்றனர். அந்த பாதுகை கட்டைகளில் செய்யப்பட்டிருக்கும். இன்றைக்கும் பல பணக்காரர்களின் வீட்டில் விலை உயர்ந்த செருப்பை வரதட்சணையாக வாங்கும் வழக்கம் உண்டு.

Aug 2, 2024 - 12:20
Aug 3, 2024 - 10:11
 0
Mahalakshmi Padugai : எளியவர்களை எட்டி உதைக்காதீங்க.. செருப்பால் அடிக்காதீங்க..  செல்வம் வீட்டில் தங்காது
mahalakshmi padugai

Goddess Mahalakshmi Padugai : நாம் யாரையாவது செருப்பால் அடித்தாலோ செருப்பால் அடிப்பேன் என்று சொன்னாலோ, நம்முடைய செருப்பை அடுத்தவர்களை தூக்க வைத்தாலோ நம்முடைய செல்வம் செல்வாக்கு எல்லாம் செருப்பால் அடிபட்டவர்களுக்கும், நம்முடைய செருப்பை தூக்கிக்கொண்டு நடந்தவர்களுக்கும் போய் விடுமாம். 

ராமரின் பாதுகை: 

சிலர் வீட்டில் மகாலட்சுமியின் பாதுகைகளை வரைந்து வைத்திருப்பார்கள். பகவான் கிருஷ்ணரின் பாதுகையை வீட்டில் வரைந்து வைத்திருப்பார்கள். ராமரின் பாதுகைதான் 14 ஆண்டுகள் சிம்மாசனத்தில் ஆட்சி செய்திருக்கிறது. நமது பாதத்தை கல்லிலும் முள்ளிலும் இருந்து பாதுகாக்கும் செருப்பினை நாம் பாதுகாப்பாக வைத்திருந்தால் நம்முடைய செல்வம் பெருகுமாம்.  பெருமாள் கோவில்களில் சடாரி சாற்றுவார்கள். அதில் பெருமாளின் பாதங்கள் வைக்கப்பட்டிருப்பதை கவனித்திருக்கலாம். அந்த அளவிற்கு புனிதமானது செருப்பு. ஆனால் பலரோ அரசியல் தலைவர்களை அவமானப்படுத்துவதாக நினைத்து செருப்பால் அடிக்கின்றனர் அது தவறான செயல் என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. 

தோஷங்கள் தொலையுமா:

கோவிலுக்கு போனாலோ, கல்யாண வீட்டிற்குப் போனாலோ நினைப்பு எல்லாம் நம்முடைய செருப்பு மீதுதான் இருக்கும். ஆயிரம் ரூபாய் போட்டு வாங்கின செருப்பு யாரும் தூக்கிட்டு போயிடக்கூடாதே என்றுதான் நினைப்பு வரும். நம்முடைய செருப்பு தொலைந்து போனால் நம்முடைய தோஷங்களும் தொலைந்து போய் விட்டதாக கூறுவார்கள். அதே நேரத்தில் நம்முடைய செருப்பு தொலைந்தாலோ நம்முடைய செல்வமும் செல்வாக்கும் தொலைந்து போகுமாம். 

மகாலட்சுமியின் அம்சம்:

நம்முடைய பாதங்களில் மகாலட்சுமி, மகாவிஷ்ணும் வாசம் செய்வதாக ஐதீகம். நாம் போட்டிருக்கும் செருப்பானது, நம்முடைய பாதங்களுக்கும் மட்டும் பாதுகாப்பு அல்ல. நம் பாதங்களில் வசிக்கும் விஷ்ணு பகவானுக்கும், மகாலட்சுமிக்கும் பாதுகாப்பை கொடுக்கிறதாம். எனவேதான். எனவேதான் நம்முடைய செருப்பை நாம் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். 

அதிர்ஷ்டம் தேடி வரும்: 

இரண்டு செருப்பையும் ஜோடியாக கழற்றி விட வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்வார்கள். நம்முடைய செருப்பை நாம் பத்திரமாக வைத்துக்கொண்டால் நமக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். யாரையாவது நாம் செருப்பால் அடித்தால் நம்முடைய அதிர்ஷ்டம் நம்மிடம் செருப்பால் அடி வாங்கியவருக்கு சென்றுவிடுமாம். செருப்பால் அடி வாங்கியவர் உயர்ந்த நிலைக்கு சென்று விடுவார். செருப்பால் அடித்தவர் தாழ்ந்த நிலைக்கு சென்று விடுவாராம். 

யாரையும் உதைக்காதீர்கள்:

நாம் யாரையும் காலால் மிதிக்கக் கூடாது யாரையும் எட்டி உதைக்கக்கூடாது என்று சொல்வார்கள். ஏனெனில் நம்முடைய பாதங்களில் வசிக்கும் மகாலட்சுமியும், மகாவிஷ்ணுவும் நம்மிடம் மிதி வாங்கியவர்களிடம் சென்று விடுவார்களாம். அதே போல நம்முடைய செருப்பை யாரையும் தொட விடுவதுகூட தவறுதான் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow