ஆவணி மாத ராசி பலன் 2024: சிம்ம ராசியில் சூரியன் ஆட்சி.. யாருக்கெல்லாம் அதிகாரம் கைகூடும்

Aavani Month Rasi Palan 2024 in Tamil : ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். சிலருக்கு அதிகார பதவி தேடி வரும். ஆவணி மாதத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு பதவி யோகம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Aug 13, 2024 - 15:22
Aug 15, 2024 - 11:30
 0
ஆவணி மாத ராசி பலன் 2024: சிம்ம ராசியில் சூரியன் ஆட்சி.. யாருக்கெல்லாம் அதிகாரம் கைகூடும்
Aavani Month Rasi Palan 2024 in Tamil

Aavani Month Rasi Palan 2024 : ஆவணி மாதத்தில் நவ கிரகங்களின் நாயகன் சூரியன் சிம்ம ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வார். நவ கிரகங்களின் பயணத்தால் சில ராசிக்காரர்களுக்கு யோகங்கள் கைகூடி வரும். சுக்கிரன், புதன், சூரியன் இணைந்து சிம்ம ராசியில் பயணிப்பது சிலருக்கு சாதகமான அம்சத்தை தரப்போகிறது. இந்த கிரகங்களின் பயணம் பார்வையால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்  ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். 

துலாம்: 

உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் புதனோடு இணைந்திருப்பது சிறப்பு.  பணவரவு பல வகையில் இருந்து வரும். தடைபட்டு வந்த சுபகாரியங்கள் தடையில்லாமல் நடைபெறும்.  நினைத்த காரியம் நல்ல முறையில் நிறைவேறும். திருமண தடை நீங்கி நன்மைகள் நடைபெறும். சுப செய்திகள் தேடி வரும். உங்க பேச்சிற்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வருமானம் ஏதாவது ஒரு வகையில் வரும் கையில் கிடைக்கும் பணத்தை பத்திரப்படுத்துங்கள். ஆவணி மாதம் பெண்களுக்கு மனம் மகிழ்ச்சி தரும் மாதமாக அமையப்போகிறது. கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி அன்பும் ஆதரவும் அதிகரிக்கும்.  ஆவணி மாதம் தொட்டது துலங்கக்கூடிய அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக துலாம் ராசிக்காரர்களுக்கு அமையப்போகிறது. 

விருச்சிகம்: 

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே இனி உங்களுக்கு அதிர்ஷ்டம்தான். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். உங்களின் பலம் அதிகரிக்கும். குல தெய்வ அருளினால் நன்மைகள் நடைபெறும். திருமணத்தடையில் இருந்த சிக்கல்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். உங்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கும்.  மாத பிற்பகுதியில் சுக்கிரன் இடமாற்றம் அடைவதால் மன நிம்மதி ஏற்படும். திடீர் பணவரவு வரும். உங்களின் அன்பும் பாசமும் அதிகரிக்கும். நண்பர்களிடத்தில் பழகும் போது எச்சரிக்கையும் கவனமாகவும் இருங்க. மாத பிற்பகுதியில் திருமணம் சுப காரிய முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆவணி மாதத்தில் சூரிய நமஸ்காரம் செய்வது சிறப்பு. குல தெய்வ அருளினால் பாதிப்புகள் நீங்கி நன்மைகள். உயர்பதவி யோகம் வரும் உங்களின் தற்போதய வேலையில் இருக்கும் பிரச்சினைகள் தீரும்.  

தனுசு

தனுசு ராசிக்காரர்களே  இந்த மாதம் உங்களுக்கு அற்புதமான மாற்றங்கள் ஏற்படும். மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் உற்சாகமாக இருப்பீர்கள். செல்வ வளம் பெருகும். நீண்ட கால பிரார்த்தனைகளுக்கு பலன் கிடைக்கும். திருமணம் சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.  பூர்வீக சொத்து விற்பனையில் நல்ல லாபம் வரும். மாத பிற்பகுதியில் சுக்கிரன் இடமாற்றம் ஆகி 10ஆம் வீட்டிற்கு வரும் போது பதவியோகம் வரும். வேலையில் இருந்த பிரச்சினை நீங்கும். சிலருக்கு பதவி உயர்வு வரும். பிசினஸ் இந்த மாதம் சராசரியான மாதம் என்பதால் பெரிய அளவில் முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். அப்பாவின் மூலம் நல்ல செய்தி தேடி வரும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சமாளித்து விடுவீர்கள். 

மகரம்

 இந்த மாதம் உடலில் இருந்த மந்தநிலை மாறி ஒரு வித சுறுசுறுப்பு அதிகரிக்கும் நிதி நிலைமை நன்றாக இருக்கும் பணத்தட்டுப்பாடு நீங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். எதையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். சகோதர சகோதரிகள் மூலம் உதவிகள் தேடி வரும். சிறு தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். காதல் திருமணம் செய்பவர்களுக்கு மன மகிழ்ச்சி அதிகரிக்கும். அவசியம் இல்லாமல் கடன் வாங்காதீர்கள். கணவன் அல்லது மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பார்க்கும் வேலையை விடாதீங்க. எவ்வளவு சம்பாதித்தலும் வீண் விரைய செலவுகள் வந்து கொண்டேதான் இருக்கும். அம்மா அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமணம் சுப காரியங்கள் கைகூடி வரும். 

கும்பம்

கும்ப ராசிக்கு 7ஆம் வீட்டில் சூரியன், சுக்கிரன், புதன் பயணம் செய்வதால் எதையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நிறைய பணவரவு வரும். உங்களுக்கு இருந்த நெருக்கடி நிலைகள் நீங்கும். பெண்களுக்கு எதிர்காலம் பற்றிய பயம் நீங்கும். ஆடை ஆபரணச்சேர்க்கை ஏற்படும். வீடு மாற்றம் இடமாற்றம் ஏற்படும். திருமணம் சுப காரிய முயற்சிகள் நல்ல முறையில் நடக்கும். முகப்பொலிவு அதிகரிக்கும். திருமணம் முடிந்து புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும். ஜென்ம ராசியில் சனி வக்ர நிலையில் பயணம் செய்வதால் திடீர் செலவுகள் வரும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கிறதே என்று கடன் நிறைய வாங்கதீர்கள் கஷ்டப்பட வேண்டியிருக்கும். 

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிறைய நன்மைகள் நடைபெறப்போகிறது. இதுநாள் வரைக்கும் பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினைகள் நீங்கும். உங்க பணம் இல்லாவிட்டாலும் யாருடைய பணமாக இருந்தாலும் உங்கள் கைகளில் இருக்கும். உங்களுக்கு இதுநாள் வரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். இரவு நேர பயணங்களை தவிர்த்து விடுங்கள். அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டு. ஏற்கனவே தேர்வு எழுதி ரிசல்ட் வரலையே என்று கவலையில் இருந்தவர்களுக்கு இந்த மாதம் நல்ல செய்தி தேடி வரும். உங்களின் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். மனதில் உற்சாகமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். ராசியில் ராகு ஏழாம் வீட்டில் கேது பயணம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow