Lakshmy Ramakrishnan : அம்மா நடிகைக்கு மட்டுமல்ல, பாட்டி நடிகைக்கும் கூட... பாலியல் புகார் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன்

Actress Lakshmy Ramakrishnan About Sexual Harassment in Film Industry : ஹீரோயின்களை விட, வாய்ப்புதேடி வருபவர்கள், துணைக்கு ஆட்கள் இல்லாதவர்கள், குறிப்பாக, பணபலம் இல்லாதவர்கள் இந்த வலையில் வீழ்கிறார்கள். நடிகைகளை விட பல பெண்கள் இந்த பாதிப்புக்கு ஆளாகிறார்கள். சினிமா என்பதால் வெளியே தெரிகிறது. ஹேமா கமிட்டியால் கே ரளாவில் புயல் கிளம்பியுள்ளது. மற்ற இண்டஸ்ரியில் அந்தபுயல் கிளம்பினால் அது சுனாமியாக இருக்கும். இந்த புயல், சுனாமி பல விஷயங்களை சுத்தம் செய்யும் என்பது நிஜம்

Sep 17, 2024 - 16:24
Sep 17, 2024 - 17:26
 0
Lakshmy Ramakrishnan : அம்மா நடிகைக்கு மட்டுமல்ல, பாட்டி நடிகைக்கும் கூட...  பாலியல் புகார் குறித்து  லட்சுமி ராமகிருஷ்ணன்
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்
நடிகை, இயக்குனர், டிவி தொகுப்பாளர் என மல்டிடெலன்ட் ஆக இருந்தாலும், மனதில் பட்டதை தைரியமாக பளீச்சென பேசுவர் என்ற சிறப்பு குணம் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு(Lakshmy Ramakrishnan) எப்போதும் உண்டு. ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து கேரளா, தமிழகத்தில் பூகம்பம் வெடித்துள்ள நிலையில், அவரை சந்தித்தோம். சினிமாவில் மட்டுமல்ல, பல துறைகளில் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் மீதான தாக்குல் உடல்ரீதியாக, மனரீதியாக நடந்துகொண்டேதான் இருக்கிறது. அவ்வப்போது அது வெளியில் தெரிகிறது. ஆனாலும் தெரியாத விஷயங்கள், மறைக்கப்பட்ட சம்பவங்கள் அதிகம் என்று கொதிப்புடன் பேச ஆரம்பித்தவரிடம், கேள்விகளை முன் வைத்தோம்

இத்தனை வருஷ சினிமா வாழ்க்கையில நீங்க கற்றது என்ன? இழந்தது என்ன?

Actress Lakshmy Ramakrishnan About Sexual Harassment in Film Industry : நான் சினிமாவுக்கு வந்து 18 வருஷம் ஓடிப்போச்சு, கடின உழைப்புக்கும், திறமைக்கும் எப்போதும் அங்கீகாரம் உண்டு. அதை யாராலும் பறிக்க முடியாது என்பதை கத்துகிட்டேன்.  சினிமா பின்னணி உள்ள குடும்பத்தில் வந்தால்தான் ஜெயிக்க முடியும். நம்மை பிரபலப்படுத்த பேக்அப் தேவை என்பதெல்லாம் இப்ப இல்லை. நடிகையாக, இயக்குனராக எனக்கு அவ்வளவு அனுபவம் கிடைச்சு இருக்குது. அதுதான், நான் சம்பாதித்தது பெரிய சொத்து. என்ன, சினிமாதுறைக்குள் வந்துவிட்டால், ஓரளவு பிரபலம் ஆகிவிட்டால் சாதாரணமானவர்கள், மற்றவர்கள் அனுபவிக்கிற சுதந்திர வாழ்கை நம்மகிட்ட இருந்து பறிக்கப்படும். நாம என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதை மற்றவர்கள் ரொம்பவே உன்னிப்பாக கவனிப்பாங்க, மற்றவர்கள் பார்வை நம் மீது பட்டுக்கொண்டே இருக்குதுனு உஷாராக இருக்கணும். அது மைனஸ். சினிமாவில் நான் ரொம்ப கஷ்டப்பட்டது.எழுத்து பணி, டை ரக் ஷனுக்குதான். ஆனால்  அதைதான் ரொம்பவே ஆர்வமாக ரசித்து செய்தேன். தொகுப்பாளராக பல வீடுகளில், பலர் இதயங்களின் என்டரி ஆனது ஹேப்பி.

நிகழ்ச்சி தொகுப்பாளர் பணி எப்படி இருந்தது?

2013 முதல் நான் டிவி ஷோ தொகுப்பாளராக மட்டும் இருக்கலை. அது ஒளிபரப்பானபின்னரும், அந்த ஷோவில் கலந்துகிட்டவர்கள், அவங்க பிரச்னை, தீர்வுகளில் பங்குபெற்றேன். அவங்களுக்கு ஏதாவது ஒருவகையில் உதவி செய்தேன். சில மாற்றங்களை கொண்டு வர முடிந்தது. அந்தவகையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக எனக்கு ரொம்பவே மனநிறைவு. எனக்கும் அந்த நிகழ்ச்சி பல பாடங்களை கற்றுக்கொடுத்தது

சரி, நிஜத்தை சொல்லுங்க, நீங்க சினிமா வர  கஷ்டப்பட்டீங்களா? இப்போதுள்ள தொல்லைகளை அனுபவிச்சீங்களா?

நான் சினிமாவுக்கு வந்தது ஒரு ஆக்சிடென்ட்தான். இப்ப ஹேமா கமிட்டி ரிப்போர்ட், அதை தொடர்ந்து நடக்கிற விஷயங்களை பார்க்கும்போது, அந்த காலத்தில் இருந்தே பெண்களுக்கு, வாய்ப்பு தேடுபவர்களுக்கு பல பிரச்னைகள் இருந்து இருக்குதுனு எனக்கு புரிகிறது. காஸ்ட்டிங் கவுச் என்பது பல விதங்களில் இருந்து இருக்குதுனு புரிகிறது.  அந்த காலத்தில் சினிமாவை பற்றி மோசமாக பேசுவாங்க. உண்மையை சொன்னால் நான் 42வயதை தாண்டிய,லைப்பில் செ ட்டில் ஆனபின்  சினிமாவுக்கு வந்தேன். என் கணவர் துணை இருந்தது.ஆனாலும் வெளியிடங்களில், குடும்பத்தில் பல விமர்சனங்கள் வந்தது. தனி மனித ஒழுக்கம் இருந்தால் நம்மை காப்பாத்திகிடலாம்னு நம்பிக்கை எனக்கு இருந்துது. ஆனா, டீன் ஏஜ்ல வரும் பெண்கள் எவ்வளவு கட்டுப்பாடுடன் வந்தாலும் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியது இருக்கும்.  எனக்கு ஆரம்பத்தில் பிரச்னை இல்லை.

சினிமாவில் மட்டும் இவ்வளவு புகார்கள் வரக்காரணம் என்ன?

 ஹீரோயின்களை விட, வாய்ப்புதேடி வருபவர்கள், துணைக்கு ஆட்கள் இல்லாதவர்கள், குறிப்பாக, பணபலம் இல்லாதவர்கள் இந்த வலையில் வீழ்கிறார்கள். சினிமா துறையில் நடிகைகளை விட பல பெண்கள் இந்த பாதிப்புக்கு ஆளாகிறார்கள். சினிமா என்பதால் வெளியே  தெரிகிறது. ஹேமா கமிட்டியால் கே ரளாவி்ல் புயல் கிளம்பியுள்ளது. மற்ற இண்டஸ்ரியில் அந்தபுயல் கிளம்பினால் அது சுனாமியாக இருக்கும். இந்த புயல், சுனாமி பல விஷயங்களை சுத்தம் செய்யும் என்பது நிஜம். இப்படி பேச தைரியம் தேவை. அவர்களுக்கு மற்றவர்கள் துணையாக இருக்கணும். நான் பல இடங்களில், பல பாலியல் பிரச்னைகளுக்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறேன். கண்டிச்சு பேசியிருக்கிறேன். நடிகைகளின்  ரொம்ப குறைவான புகாரில் மட்டுமே பொய் அல்லது சுயநலம் இருக்குது..

நீங்க வளைகுடாநாடுகளில் இருந்தீங்க. அங்கே இந்த கு ற்றச்சாட்டுகளுக்கு தண்டனை அதிகமாச்சே. அந்த நிலை இந்தியாவுக்கு வரணுமா? இந்த கமிட்டியால் தீர்வு உண்டா?

குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்றால் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டுக்கு போயிருப்பாங்க. இந்த கமிட்டி, மீடியாவில் சொல்வலெ்லாம் வேறு காரணம். இப்படி சொல்வதால் மற்ற பெண்களுக்கு தை ரியம் வரும். பாலியல் புகார் சொன்னால் அந்த பெண்ணை குற்றவாளி கூண்டில் ஏற்றுவதுதான் நடக்கிறது. அந்த மனநிலை மாறவே இவ்வளவு போராட்டம்.

நீங்க அம்மா நடிகை என்றாலும் அழகான அம்மா நடிகை. உங்களுக்கு சீண்டல், டார்ச் பிரச்னை வந்து இருக்குதா?

அம்மா நடிகை என்றாலும், பாட்டி நடிகை என்றாலும், சினிமாவுக்கு வரும் பெண்களை பப்ளிக்பிராப்பர்டி என நினைக்கும் சில ஆண்கள் இருக்காங்க. எனக்கு தமிழ்சினிமாவில் அப்படிப்பட்ட மோசமான அனுபவம் வந்தது இல்லை.  ஒரு மலையாள இயக்குனர் மோசமான மெமேஜ் அனுப்பினாரு. அதற்கு என்பாணியில் பதில்
சொன்னேன்.  அது பெரிய படம். அந்த படத்தில் இருந்து நான் நீக்கப்பட்டேன்.  இன்னொரு மலையாள இயக்குனரின் மோசமான பிகேவியரை கண்டிக்க, என்னை படப்பிடிப்பில் அவமானப்படுத்தினார். அதிக டேக் எடுக்க வைத்தார். நான் செட்டிலேயே அவர் மன்னிப்பு கேட்கணும்னு முரண்டு பிடிக்க, அது நடந்தது. அந்த சமயத்தில் பலரால் குற்றசாட்டுக்கு ஆளான மலையாள நடிகர் சித்திக், அப்போது எனக்கு ஆதரவாக இருந்தார்.  ஆனா, என் அக்கா மகள் ஒரு காலத்தில் சினிமாவில் அவ்வளவு பெரிய கொடூரத்தை அனுபவித்து இருக்கிறார். அப்ப அது எனக்கு தெ ரியலை. அவங்க சினிமா விட்டு போயிட்டாங்க. இப்ப, நல்ல நிலையில இருக்காங்க. அவங்களுக்கு நடந்த கொடுமைகளை இப்ப கேள்விப்பட்டு மனம் உடைந்துவிட்டேன்.
 
லட்சுமிராமகிருஷ்ணன் எப்ப அரசியலுக்கு வரப்போறாங்க?

என் அப்பா அடிமட்டத்தில் இருந்து உழைத்து அரசியலுக்கு வந்தவர், மூதறிஞர் ராஜாஜியுடன் இருந்தவர். தேர்தல் அரசியலி்ல் இருந்தவர்.  என் அத்தை மத்திய மந்திரியாக இருந்து இருக்கிறார். எனக்கு அரசியல் ஆசை இல்லை.  தொண்டராக இருந்து கடுமையாக உழைத்து, மக்களுடன் பழகி, அரசியல்வாதியாக ஆக வரணும்னு நான் நினைக்கிறேன்.

நடிகர் விஜயை, திருமாவளவனை பார்த்தால் என்ன கேட்பீங்க?

தம்பி விஜய்,  நீங்க ரொம்ப நல்ல பையன், உங்க அம்மாவை நல்லா தெரியும். மக்களுடன் மக்களாக இருந்து மக்கள் சேவை பண்ண மட்டும்தான் நீங்க அரசியலுக்கு வர்றீங்களா?, நீங்க அரசியல்ல ஜெயித்தால் இதே மனநிலையில், மக்களுக்கு தொடர்ந்து  தொண்டு  செய்வீங்களா? மக்களுக்கு நல்லது பண்ண நினைக்கிறாரு தலைவர் திருமாவளவன். அவர் அறிவாளி. அண்ணாவிடம் நான் நேரடியாக பல கேள்விகள் கேட்டுவிட்டேன்.

இயக்குனர் மிஷ்கின் பற்றி?

அவர் பரபரப்பாக பேசுவாரு, அவரும் என்னை மாதிரிதான். படப்பிடிப்பில் என்னை மரியாதையாக நடத்தினாரு. அவர் என்னை தாய் ஆக பார்த்தாரு. நான் அவரை நல்ல நண்பராக பார்த்தேன்.*

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow