ஆயிரம் கோடி வசூலிக்குமா.G.O.A.T.... விஜய் கனவு நிறைவேறுமா?
‘தமிழில் இதுவரை வெளியான 6 ஆயிரத்துக்கும் அதிகமான படங்களில் ரஜினியின் 2.0 படம்தான் 800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து முதலில் இடத்தில் இருக்கிறது. எந்த தமிழ் படமும் இதுவரை ஆயிரம் கோடி வசூலை ஈட்டவில்லை. தெலுங்கில் பாகுபலி, ஆர்ஆர்ஆர்,கல்கி2898ஏடி, கன்னடத்தில் கேஜிஎப், இந்தியில் தங்கல்,ஜவான், பதான் போன்ற படங்கள் ஆயிரம் கோடியை எட்டியுள்ளன
சினிமாவில் வெற்றி என்பது ஒரு படத்தின் வசூலை வைத்துதான் நிர்ணயிக்கப்படுகிறது.ஒரு படத்தில் வசூல் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாகிறதோ, அந்தளவு அந்த படம் பெரிய வெற்றி என்று கணக்கிடப்படுகிறது. ஒரு காலத்தில் சில கோடிகளை வசூலித்தாலே அது பெரிய வெற்றியாக பார்கப்பட்டது. இப்போது 100 கோடி வசூலித்தால்தான் ஒரு பெரிய வெற்றியாக கருதுகிறார்கள். தமிழில் இந்த ஆண்டு 150 படங்கள்வரை வந்தாலும், வந்த படங்களில் அரண்மனை4, மகாராஜா, தங்கலான் ஆகிய 3 படங்கள் மட்டுமே 100 கோடியை வசூலித்துள்ளது.
லேட்டஸ்ட்டாக வந்திருக்கம் கோட் படம் அந்த சாதனையை ஒரே நாளில் முறியடித்துவிட்டது. ஆம், கோட் படத்தில் முதல் நாள் வசூல் 126 கோடி. இந்த வாரத்துக்குள் 300 கோடி அல்லது 400 கோடியில் நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், லியோ சாதனையை கோட் முறியடிக்குமா? குறிப்பாக, ஆயிரம் கோடிவசூலை அள்ளுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
விஜய் சமீபத்தில் நடித்த படங்களில் பிகில், மெர்சல், லியோ, மாஸ்டர், வாரிசு படங்கள் நல்ல வசூலை ஈட்டின. விஜயின் பல படங்கள் 100 கோடி வசூலை தாண்டவிட்டன. இன்னும் சொல்லப்போனால் தமிழில் முதலில் 50 கோடி வசூலை தாண்டிய படம் கில்லி. விஜய் படங்களில் துப்பாக்கிதான் முதலில் 100 கோடி வசூலை அள்ளியது. ஆனாலும், அதற்கு முன்பு ரஜினியின் சிவாஜி, கமலின் தசாவதாரம் படங்கள் 100 கோடியை அள்ளின. விஜயின் லியோ படம் 500 கோடி வசூலை தாண்டிவிட்டது, 600 கோடி வசூல் என்று கூறப்படுகிறது. இதுவரை விஜய் நடித்த படத்தில் லியோ வசூல்தான் உச்சம்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோட் படத்தின் முதல் நாள் வசூல் லியோ வசூலை தாண்டவில்லை. காரணம், லியோ வசூல் என்பது 140 கோடிக்கு மேல். ஆனால், ஏகப்பட்ட நட்சத்திர பட்டாங்கள் நடித்தாலும், லியோவை விட பல கோடி பெரிய பட்ஜெட்டில் உருவானாலும் கோட் படம் 126 கோடிதான் வசூலித்தது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. ஆனாலும் சாதனை படைக்கவில்லை. இதுவரை படத்துக்கு ஓரளவு நல்ல வரவேற்பு கிடைக்கும்நிலையில், உலகம் முழுக்க 6 ஆயிரம் அதிகமான தியேட்டரி்ல் ரிலீஸ் ஆன நிலையில்,
இந்த மாதம், அடுத்த மாதம் பெரிய படங்கள் இல்லாத நிலையில், லியோ வசூலை கோட் தாண்டுமா அதாவது 600 கோடிக்கு அதிகமாக வசூலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து சிினிமா வட்டாரங்களில் விசாரித்தால், ‘‘தமிழில் இதுவரை வெளியான 6 ஆயிரத்துக்கும் அதிகமான படங்களில் ரஜினியின் 2.0 படம்தான் 800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து முதலில் இடத்தில் இருக்கிறது. எந்த தமிழ் படமும் இதுவரை ஆயிரம் கோடி வசூலை ஈட்டவில்லை. தெலுங்கில் பாகுபலி, ஆர்ஆர்ஆர்,கல்கி2898ஏடி, கன்னடத்தில் கேஜிஎப், இந்தியில் தங்கல்,ஜவான், பதான் போன்ற படங்கள் ஆயிரம் கோடியை எட்டியுள்ளன. அந்த நிலை கோட் வருமா தமிழ்சினிமா வருமா என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை. காரணம், வட இந்தியாவில், மற்ற மாநிலங்களில் அதிக வசூலை அள்ளினால்தான் ஆயிரம் கோடியை எட்டி முடியும். இப்போதைய நிலையில் கோட் ஆயிரம் கோடி என்பதை நினைத்து பார்க்க முடியவில்லை. ஆயிரம் கோடி என்பது விஜயின் கனவுகளில் ஒன்று. லியோ வசூலை தாண்டி, இந்த படம் சாதனை படைத்தாலே பெரிய சாதனைதான். ஒருவேளை கோட் ஆயிரம் கோடி வசூலித்தால் அது விஜய் அரசியல் வாழ்க்கைக்கு, அடுத்த கடைசியாக நடிக்கும் எச் வினோத் படத்தின் வியாபாரத்துக்கு பலவகைகளில் உற்சாகமாக அமையும். அது நடக்குமா என தெரியவில்லை’’ என்கிறார்கள்.
ஆனால் படக்குழுவோ, ‘‘கோட் படத்தை ரிலீஸ் செய்யும்போது 100கோடி லாபம். இனி வருவது எல்லாம் லாபம்தான். அதனால், படக்குழுவோ, விஜய் தரப்போ இவ்வளவு கோடி அள்ளணும்னு என்று டார்க்கெட் வைக்கவில்லை. ஆசைப்படவில்லை. ரஜினியின் 2.0 படத்தில் இந்தி நடிகர் அக் ஷய்குமார் இருந்தார். அதனால், இந்தியில் நன்றாக ஓடியது. இதுவரை ஆயிரம் கோடி வசூலித்த படங்கள் பான் இந்தியா படங்கள். இன்னமும் விஜய் பான் இந்தியா நடிகராக மாறவில்லை. அவரின் கடைசி படத்தில் கூட ஆயிரம் கோடி சாதனை அவர் நிகழ்த்துவாரா என தெரியவில்லை. அது நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது’’ என்கிறார்கள்.
**
What's Your Reaction?