இந்தியா vs வங்கதேசம் முதல் டெஸ்ட் : சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர்கள்

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள நிலையில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

Sep 16, 2024 - 18:43
 0
இந்தியா vs வங்கதேசம் முதல் டெஸ்ட் : சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர்கள்
வலை பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர்கல்

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. 2வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27ம் தேதி தொடங்கி அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து முதல் டி20 போட்டி அக்டோபர் 7ம் தேதியும், 2வது டி20 போட்டி அக்டோபர் 10ம் தேதியும், 3வது டி20 போட்டி அக்டோபர் 13ம் தேதியும் நடைபெற உள்ளன. வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி போட்டிக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

தற்போது இரண்டு அணி வீரர்களும் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா-வங்கதேசம் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.

வருகிற 19 ஆம் தேதி இந்தியா - வங்கதேச அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். அதேபோல, ஜாஸ்பிரிட் பும்ரா, மொஹமது சிராஜ், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் பந்துவீச்சு பயிற்சியிலும் ஈடுபட்டனர்.

இதற்கான டிக்கெட் ஆன்லைன் மூலம் (Paytm insider) கடந்த  ஆம் தேதி முதல் விற்பனை செய்யபட்டு வருகிறது...குறைந்தபட்சம் 1000 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு முறை எடுக்கும் டிக்கெட்டை 5 நாட்கள் போட்டியை காண்பதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow