Periyar 146: கணீர் குரல், ஆழமான சமூக சிந்தனை..புரட்சியின் முகம் தந்தை பெரியார் உதிர்த்த பொன்மொழிகள்...
பலதரப்பட்ட ஆதிக்கத்திற்கு எதிராக சமரசமின்றி களமாடிய போராளியான தந்தை பெரியாரை அவரது 146வது பிறந்த தினத்தில் நினைவுக்கூறுவோம்..
தீண்டாமை ஒழிப்பு, சுயமரியாதைம், மூடநம்பைக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை, பெண் கல்வி, கடவுள் மறுப்பு ஆகியவற்றுக்கு முன்னோடியாக இருந்து இன்று தமிழகத்தின் அடையாளமாக இருப்பவர் என்றால் அவர் தந்தை பெரியார் தான். கணீர் குரல், ஆழமான சமூக சிந்தனைகளால் பல புரட்சிகளை வித்திட்டவர் அவர். பலதரப்பட்ட ஆதிக்கத்திற்கு எதிராக சமரசமின்றி களமாடிய போராளியான தந்தை பெரியாரை அவரது 146வது பிறந்த தினத்தில் நினைவுக்கூறுவோம்..
பெரியாரின் பொன்மொழிகள்...
➤ நான் சொல்கிறேன் என்பதற்காக எதையும் நீங்கள் ஒப்புக்கொள்ளாதீர்கள். பிறகு, மதவாதிகள் புராணத்தை முன்வைத்து பேசுவதை நீங்கள் ஒப்புக் கொள்வதற்கும், இதற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். நான் பேசியதை வைத்து உங்களுக்குள் நிறைய கேள்விகளை எழுப்புங்கள், அதன் பின்னர் நான் சொன்னது சரியென்கும் பட்சம் ஒப்புக் கொள்ளுங்கள்
➤ நம்முடைய மனம் நோகாமலிருக்கப் பிறர் நம்மிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறோமோ அதேபோல் நாம் பிறரிடம் நடந்துகொள்வது தான் ஒழுக்கம்
➤ ஒழுக்கம் என்பது சமுதாயத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே தன்மையாக இருக்க வேண்டும்
➤ ஒரு சமூகத்திற்குச் சுயமரியாதை வேண்டுமானால் தொழிற்கல்வி மிக அவசியமானது
➤ தன் இனத்தையே அடிமைப்படுத்தி அதைக் கொடுமைபடுத்தி வாழும் கெட்ட குணம் மனித ஜீவனிடத்திலயே அதிகமாய் இருந்து வருகிறது
➤ மனிதன் உலகில் தன்னுடைய சுயமரியாதையை தன் மானத்தை உயிருக்கு சமமாக கொள்ள வேண்டும்
➤ பெண்களுக்கு படிப்பு சொத்துரிமை ஆகியவை இருந்து விட்டால் நாடு கண்டிப்பாக முன்னேற்றமடைந்து விடும்
➤ தீண்டாமை ஓழிய வேண்டுமானால் சாதி ஓழிய வேண்டும்.
➤ மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்; மானமற்ற ஒருவருடன் போராடுவது கஷ்டமான காரியம்
➤ ஓய்வு ,சலிப்பு என்பவற்றைத் தற்கொலை என்றே கருதுகிறேன்.
➤ தெரியாததை, இல்லாததை நம்ப வேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்றவனாக ஆகி விடுகின்றான்.
➤ ஒரு காலத்து முறைகளே எக்காலத்துக்கும் என்றால் மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்பதுதான் பொருள்
➤ நாத்திகம் என்றால் தன் அறிவுகொண்டு எதையும் ஆராய்ந்து பார்ப்பவன்
➤ எவனுக்கு பொய் சொல்ல தைரியம் இருக்கின்றதோ எவனுக்கு பொருள் செலவு செய்ய சக்தி இருக்கிறதோ எவனுக்கு பொய் பிரச்சாரம் செய்ய சௌகரியம் இருக்கிறதோ அவனுக்கு வெற்றி கொடுக்க நம்நாடு தயாராக இருக்கிறது
➤ கடவுள் மறுப்பாளன் என்று என்னை குறிப்பிடாதீர்கள். அதனையும் தேடி அலைந்து அலுத்துக் களைத்து ஓய்ந்தவன் என்று வேண்டுமானால் என்னை குறிப்பிடுங்கள். ஏனெனில் நான் கடவுள் வேண்டாம் என்று அது இருக்கக் கூடாது என்று கூறவில்லையே
➤ மூட நம்பிக்கையும், குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்
What's Your Reaction?