மிலாடி நபி நாளில் மகிழ்ச்சியும் செழிப்பும் பரவட்டும்.. மோடி, மு.க ஸ்டாலின்,இபிஎஸ் வாழ்த்து

மிலாது நபியை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இஸ்லாமிய மக்களின் பாதுகாவலனாக, அவர்களது சகோதரனாக திமுக அரசு என்றும் நிற்கும். திமுக அரசின் சார்பில் மீண்டும் மிலாது நபி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

Sep 17, 2024 - 09:55
 0
மிலாடி நபி நாளில் மகிழ்ச்சியும் செழிப்பும் பரவட்டும்.. மோடி, மு.க ஸ்டாலின்,இபிஎஸ் வாழ்த்து
pm modi cm stalin milad un nabi

மிலாது நபியை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இஸ்லாமிய மக்களின் பாதுகாவலனாக, அவர்களது சகோதரனாக திமுக அரசு என்றும் நிற்கும். திமுக அரசின் சார்பில் மீண்டும் மிலாது நபி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.


இறைத்தூதர் முகமது நபிகள் பிறந்த தினத்தை, மிலாது நபி விழாவாக உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர்.கற்றவண்ணம் நடப்பவரே உண்மையில் கற்றவர் என வாழ்க்கைக்கான நெறிமுறையை வகுத்துக் காட்டினார் முகமது நபிகள். அதன்படியே அவர் வாழ்ந்தும் காட்டினார்.
மிலாது நபியை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மிலாது நபி திருநாளில் வாழ்த்துகள். நல்லிணக்கமும் ஒற்றுமையும் எப்போதும் நிலவட்டும். மகிழ்ச்சியும் செழிப்பும் பரவட்டும்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் இந்த அருமையான நாள், நம் இதயங்களிலும் இல்லங்களிலும் அமைதி, மகிழ்ச்சி், இரக்கத்தை கொண்டு வரட்டும். அனைவருக்கும் மகிழ்ச்சியுடனும் செழிப்புடனும் இருக்க வாழ்த்துகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின்:

 நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது இனிய மிலாது நபி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனிதர்களிடையேயான வேற்றுமைகளைக் களைந்தெறியவும், அடிமை வணிகம் உள்ளிட்ட சமூக அநீதிகளுக்கு எதிராகவும் அன்றே குரல் கொடுத்தவர் நபிகள் நாயகம் ஆவார்.

அவரது போதனைகள் அமைதியான, சமத்துவ உலகுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் ஆகும்.

“உழைப்பவர்களின் கூலியை அவர்களது வியர்வை உலரும் முன்பே கொடுத்து விடுங்கள்” என எளியவர்களுக்காகப் பேசினார்.

“உங்களை நீங்களே பெருமைப்படுத்திக் கொள்ள வேண்டாம்” எனப் பணிவுடைமையை வலியுறுத்தினார்.

“கற்றவண்ணம் நடப்பவரே உண்மையில் கற்றவர்” என வாழ்க்கைக்கான நெறிமுறையை வகுத்துக் காட்டினார். அதன்படியே வாழ்ந்தும் காட்டினார் நபிகள் நாயகம்.

இஸ்லாமிய மக்களின் பாதுகாவலனாக, அவர்களது சகோதரனாக திமுக அரசு என்றும் நிற்கும். திமுக அரசின் சார்பில் மீண்டும் மிலாது நபி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி:

நபிகள் நாயகத்தின் பிறந்தநாள் அன்று, அவரது போதனைப்படி அன்பு பெருகவும், அமைதி தவழவும், சமரசம் உலவவும், சகோதரத்துவம் தழைக்கவும் அயராது உழைத்திட உறுதி ஏற்போம். இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது இனிய மிலாது நபி வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

ஓ.பன்னீர்செல்வம்: 

நபிகள் நாயகம் பிறந்த இந்த நன்னாளில் அவரது போதனைகளை பின்பற்றி அனைவரும் நல் உள்ளத்தோடு, கருணை, பொறுமை, ஈகை, மனிதநேயம் ஆகியவற்றை கடைபிடித்து வாழ உறுதியேற்போம்.

ராமதாஸ்: 

அன்பு, அமைதி, சமய நல்லிணக்கம் ஆகியவற்றை உலகுக்கு போதிப்பதற்காகவே அவதாரம் எடுத்தவர் நபிகள் நாயகம். அவரது பிறந்தநாளை மிலாது நபி திருநாளாகக் கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு எனது வாழ்த்துகள்.

வைகோ: 

சமூக ஒற்றுமை, சமய நல்லிணக்கம், பிற சமூகங்களோடு இணங்கி வாழ்வோம் என அறிவுறுத்தி வாழ்ந்த நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை, உலகெங்கும் கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு எனது வாழ்த்துகள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். 

கு.செல்வப்பெருந்தகை:

நபிகள் நாயகம் தனது வாழ்நாள் முழுவதும் மத நல்லிணக்கம், சகோதரத்துவம், சமத்துவம் ஆகிய உயரிய நோக்கங்களுக்காக இறுதி மூச்சுவரை வாழ்ந்து காட்டியவர். மிலாது நபி நன்னாளில் அவரது கொள்கைகளை பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.

அன்புமணி ராமதாஸ்:

உண்மையின் வடிவமாக திகழ்ந்த இறைத்தூதர் முகமது நபியின் பிறந்த நாளை மிலாடி நபி திருநாளாகக் கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, உலகில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக அவர் திகழ்ந்தார்.

இறை நம்பிக்கை, பாவமன்னிப்பு கோருதல், தொழுதல், உதவி புரிதல், பிறரை ஏமாற்றாமல் இருத்தல் மற்றும் செல்வத்தில் நாட்டம் இல்லாமல் இருத்தல், கற்பு மற்றும் பெண் சிசுவதைக்குத் தடை என்ற வழியில் பயணித்த நபிகள் நாயகத்தின் வாழ்க்கை என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமே போற்றத்தக்க பாடம் ஆகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow