திருப்பதி 'லட்டு': தேவஸ்தானம் அதிரடி முடிவு.. பக்தர்களுக்கு கொண்டாட்டம்..

திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலுக்கு தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு தேவைக்கேற்ற எண்ணிக்கையில் லட்டுகள் வழங்கப்படும் என்று தேவஸ்தான தெரிவித்துள்ளது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Sep 2, 2024 - 08:37
Sep 2, 2024 - 18:03
 0
திருப்பதி 'லட்டு': தேவஸ்தானம் அதிரடி முடிவு.. பக்தர்களுக்கு கொண்டாட்டம்..
டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு தேவைக்கேற்ற எண்ணிக்கையில் லட்டுகள் வழங்கப்படும்

திருப்பதி என்றாலே வெங்கடாசலபதிக்கு பிறகு பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கு நினைவில் நிற்பது திருப்பதி லட்டுதான். ஆந்திரப் பிரதேச மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் உள்ள திருமலை வெங்கடேஸ்வரா கோயிலில் தரிசனம் செய்த பிறகு பக்தர்களுக்கு திருப்பதி லட்டு அல்லது ஸ்ரீவாரி லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

புகழ்பெற்ற இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அதுவும் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் திருப்பதி கோயிலில் கூட்டம் அலைமோதும். ஏழுமலையானை தரிசிக்க இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட ஆகும்.

தனித்துவ சுவை கொண்ட திருப்பதி லட்டுகள், சுவாமி ஏழுமலையானை போன்றே பக்தர்களிடம் மிகவும் செல்வாக்கு பெற்று விளங்குகின்றன. திருப்பதியில் நாள்தோறும் 2.8 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், சுவாமி தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு 2 லட்டுகள் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது தவிர கூடுதல் லட்டுகள் தேவை என்றால் தேவஸ்தான கவுண்ட்டர்களில் ரூ.50 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால் ஒரு நபருக்கு அதிகமாக லட்டுகளை இடைத்தரர்கள் மூலமாக, அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், திருப்பதியில் லட்டு வாங்க ஆதார் அட்டை கட்டாயம் என்று திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது.

சுவாமி தரிசனம் செய்யாமல் லட்டு மட்டும் கேட்கும் பக்தர்களுக்கு ஆதார் அடிப்படையில் ஒரு ஆதாருக்கு கூடுதலாக இரண்டு லட்டுகள் மட்டுமே வழங்கப்படும். லட்டுக்களை வாங்கி கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்து இருந்தது.

அதன்படி, சுவாமி கும்பிடாமல் லட்டு மட்டுமே தேவை என்ற வருபவர்கள் அவர்களுடைய ஆதார் அட்டையை கவுண்டர்களில் சமர்ப்பித்து இரண்டு லட்டுக்களை மட்டும் வாங்கிச் செல்லலாம் என்றும். கவுண்ட்டர்களில் லட்டுக்களை மட்டும் வாங்கி கள்ள சந்தையில் விற்பனை செய்யும் நபர்களில் ஆதார் எண்கள் அடிக்கடி பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், சாமி தரிசனம் செய்யாதவர்களுக்கு, ஆதார் அடிப்படையில் தலா 2 லட்டுகள் மட்டும் வழங்கப்படும் நடைமுறை இன்றுமுதல் அமலுக்கு வருகிறது. அதே சமயம், தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு தேவைக்கேற்ற எண்ணிக்கையில் லட்டுகள் வழங்கப்படும்” என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow