Sukran Peyarchi Palan 2024 : சுக்கிரன் பெயர்ச்சி பலன் 2024.. துலாம் ராசியில் ஆட்சி பெற்ற சுக்கிரனால் யாருக்கு விபரீத ராஜயோகம்

Sukran Peyarchi Palan 2024 : சுக்கிரன் காதல் நாயகன். கன்னி ராசியில் நீசம் பெற்ற நிலையில் இருந்து நகர்ந்து தனது ராசியான துலாமில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். ஆட்சி பெற்ற சுக்கிரனால் சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது.சில ராசிக்காரர்களுக்கு மாளவியா யோகம் தேடி வரப்போகிறது.

Sep 18, 2024 - 17:38
Sep 18, 2024 - 18:02
 0
Sukran Peyarchi Palan 2024 : சுக்கிரன் பெயர்ச்சி பலன் 2024.. துலாம் ராசியில் ஆட்சி பெற்ற சுக்கிரனால் யாருக்கு விபரீத ராஜயோகம்
sukran peyarchi palan 2024

Sukran Peyarchi Palan 2024 : சுக்கிரன் சுகபோகங்களின் அதிபதி. சந்தோஷங்களையும் சுகங்களையும் தரக்கூடியவர். இவர் ஆட்சி உச்சம் பெற்றிருக்கும் போது கொடுக்கும் பலன்கள் அலாதியானது. சில ஜாதகங்களில் நீசம் பெற்றிருந்தாலும் நீசபங்க ராஜயோக நிலையை பெறும் போது நல்ல பலன்களை தருவார். கடந்த ஒரு மாத காலமாக கன்னி ராசியில் பயணம் செய்த சுக்கிரன் தனது ராசியான துலாமில் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். இந்த சுக்கிர பெயர்ச்சி(Sukran Peyarchi) சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகத்தையும், சிலருக்கு மாளவியா ராஜயோகத்தையும் தரப்போகிறார். 

மேஷம்:

மேஷம் ராசிக்கு(Mesham Sukran Peyarchi Palan 2024) சுக்கிரன் 2ஆம் வீடான தனம் வாக்கு களத்திர ஸ்தான அதிபதி காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்வதால் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். நேரடியாக சுக்கிரன் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சந்தன பவுடரை தானம் செய்யுங்கள் நல்லதே நடக்கும். 

ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு(Rishabam Sukran Peyarchi Palan 2024) 6வது இடத்தில் மறைவதால் உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். பாக்கெட்டில் உள்ள பணத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். உங்கள் ராசி அதிபதியும் ஆறாம் வீட்டிற்கு அதிபதியுமான சுக்கிரன் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் விபரீத ராஜயோகம் கைகூடி வரப்போகிறது. அம்மன் கோவிலுக்கு அரிசியும் வெல்லமும் தானமாக கொடுப்பதன் மூலம் பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும். 

மிதுனம்:

உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வதால் உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். பண வருமானம் அதிகரிக்கும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு வேலைகள் கிடைத்து வாழ்க்கையில் செட்டில் ஆவார்கள். உங்களின் பொருளதார நிலை உயரும். படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது.வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மன் கோவில்களில் விளக்கேற்றி வழிபடலாம்.

கடகம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் பயணம் செய்வதால் வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.  நினைத்த காரியங்கள் நிறைவேறும். செயல்களால் புகழ் அடைவீர்கள்.அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். பணியிடத்தில் இருந்த பிரச்சினை விலகும். வேலைப்பளு குறையும் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். மாளவியா யோகம் கைகூடி வரப்போகிறது. பண வருமானம் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் சர்க்கரை தானமாக தரலாம். 

சிம்மம்

தன வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்து இருந்த சுக்கிரன் உங்கள் ராசிக்கு 3ஆம் இடமான முயற்சி(Sukran Peyarchi) ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும்.  சிறு ஆன்மீகப் பயணம் செல்ல வேண்டியிருக்கும். உடன் பிறந்தவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தங்கைகளுக்கு வரன் கூடி வரும் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். தொலைந்த விலை உயர்ந்த பொருட்கள் கிடைக்கும். அண்டை அயலாருடன் இருந்த பிரச்சினைகள் தீரும்.  காதல் ஜோடிகள் கவனமாக இருக்கவும். மருத்துவ செலவுகள் ஏற்படும். தூக்கமின்மை பிரச்சினை ஏற்படும்.  வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும்.

கன்னி 

உங்கள் ராசியில் நீசம் பெற்று பயணம் செய்த சுக்கிரன் 2ஆம் வீடான தன வாக்கு ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உங்களின் செல்வாக்கும், சொல்வாக்கும் அதிகரிக்கப் போகும் காலமிது. திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு குழந்தைபாக்கியம் ஏற்படும் காலமிது.கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். தன ஸ்தான சுக்கிரனால் பண வருமானம் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.  பெண்கள் விலை உயர்ந்த நகைகள் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow