இஸ்ரேல் வான்வழி தாக்குதல்.. அடி மேல் அடியால் கதிகலங்கிய லெபனான்!
லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ள சம்பவம் உலக நாடுகளை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் காஸாவில் இதுவரை 35,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டனர். மேலும் காஸா நகரில் வீடுகள், மருத்துவனைகள் என அனைத்து கட்டடங்களும் இடிந்து முற்றிலுமாக தரைமட்டமாகியுள்ளன.
இதனால் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் காஸாவில் இருந்து வெளியேறி உணவு, உடை, மருத்துவ வசதிகளில் இன்றி பரிதவித்து வருகின்றனர். இந்த போரை உடனடியாக நிறுத்தும்படி ஐநா சபை இஸ்ரேலை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் பல்வேறு உலக நாடுகள் வழியுறுத்தியும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த மறுத்து வருகிறது.
போர் விதிகளை தொடர்ந்து மீறி வரும் இஸ்ரேல் ராணுவம் மருத்துவமனைகள் மீதும், பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களிலும் தாக்குதல் நடத்தி வருவது உலக நாடுகளை கவலையடைச் செய்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கூட தெற்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் என்ற நகரில் உள்ள நிவாரண முகாம்களில் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து விட்டனர்.
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரையில் இந்த போரை நிறுத்த மாட்டோம் என்பதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாக உள்ளார். இதற்கிடையே ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஆயுதங்கள் வழங்கி வருகின்றனர்.
இதனால் இஸ்ரேலும் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் லெபனானில் பயன்பாட்டில் உள்ள பேஜர்கள் வெடித்து பெரும் சேதங்களை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் பின்னணியில் இஸ்ரேல் இருக்கலாம் என கருதப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் தற்போது வாக்கி டாக்கிகளும் லெபனானின் பல்வேறு இடங்களில் வெடித்து சிதறியுள்ளன. இதில் 34 பேர் பரிதாபமாக பலியானதோடு ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
மேலும் படிக்க: ’திமுகவை வழிநடத்த உதயநிதி ஸ்டாலின் ரெடி’..அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு!
இந்த சூழலில் இன்று லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. லெபனானின் தெற்கு பகுதியில் ஹிஸ்புல்லா கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் இந்த வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.
What's Your Reaction?