ஆடி மாத ராசி பலன் 2024: ஆடியில் சேதி சொல்லி ஆவணியில் தேதி வைக்கும் 4 ராசிக்காரர்கள்

Aadi Month Rasi Palangal 2024 : ஆடி மாதம் அற்புதங்கள் நிறைந்த மாதம் ஆன்மீக அலைகள் நிரம்பிய மாதம். ஆன்மீக அலைகள் நிறைந்த ஆடி மாதத்தில் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Jul 15, 2024 - 10:32
Jul 25, 2024 - 13:12
 0
ஆடி மாத ராசி பலன் 2024:  ஆடியில் சேதி சொல்லி ஆவணியில் தேதி வைக்கும் 4 ராசிக்காரர்கள்
Aadi Month Rasi Palangal 2024

Aadi Month Rasi Palangal 2024 :  தமிழ் ஆண்டின் நான்காவது மாதமான ஆடி மாதம் முதல் தட்சிணாயண புண்ணிய காலம் தொடங்குகிறது.  ஆடி மாதத்தில் கடக ராசியில் சூரியன் பயணம் செய்வார். ஆன்மீக அலைகள் நிறைந்த அற்புதமான ஆடி  மாதத்தில் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது என்று பார்க்கலாம். 

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் லாபகரமான மாதமாக அமையப்போகிறது. விரைய ஸ்தானமான 12வது வீட்டில் 3 கிரகங்கள் கூடியுள்ளன. திடீர் விரைய செலவுகள் வர வாய்ப்புள்ளது. எந்த காரணத்திற்காகவும் கோபப்படாதீர்கள். பொறுமையாக நிதானமாக பேசுங்கள்.  தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் பங்குச்சந்தை முதலீடுகளில் பல மடங்கு லாபம் வரும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால் நீங்க மறக்காமல் இந்த மாதம் அதற்கான முயற்சி செய்யலாம். திருமணத்திற்கு வரன் பார்க்க ஆரம்பிக்கலாம் வெற்றிகரமாக முடியும். உடல் நலத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.  பெண்களுக்கு இல்லத்தரசிகளுக்கு நன்மைகள் நடைபெறும். உறவினர்களுடன் கூடி மகிழ்வீர்கள். ஆடி மாதத்தில் அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுங்கள் நல்லதே நடக்கும். 

கன்னி: 

கன்னி ராசிக்கு இந்த மாதம் நிறைய நல்ல விசயங்கள் நடக்கப் போகிறது. ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், ராசி நாதன் புதன், குடும்ப ஸ்தான அதிபதி சுக்கிரன் இணைந்து பயணம் செய்வது சிறப்பான யோகத்தை தரப்போகிறது. தொழில் வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கப்போகிறது. மன நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். இதுநாள்வரை வேலை போய்விடுமோ ஏதும் பிரச்சினை வந்து விடுமோ என்ற பயத்தோடும் பதற்றத்தோடும் இருந்திருப்பீர்கள். இனி உங்களுக்கு மனதில் இருந்த பயமும் பதற்றமும் தீரும். குரு பார்வை கோடி நன்மையை தரப்போகிறது உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். திருமணம் தொடர்பாக நல்ல செய்தி தேடி வரப்போகிறது. நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்த மாதமாக ஆடி மாதம் அமைந்துள்ளது குல தெய்வத்தை வணங்குங்கள்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் அற்புதமான மாதம். செய்யும் தொழிலில் லாபம் வரும். வெற்றிகள் தேடி வரும். சூரியன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பத்தில் சூரியன் பதவி யோகத்தை தரப்போகிறார். சூரியன், சுக்கிரன், புதன் பத்தாம் வீட்டில் கூட்டணி சேர்ந்திருப்பது ராஜ யோகம். இந்த மாதம் நிறைய அதிசயங்களும் அற்புதங்களும் நடக்கப் போகிறது. உடல் ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்கள். குடும்ப உறுப்பினர்களிடம் பொறுமையாகவும் நிதானமாகவும் பேச வேண்டும். வண்டி வாகனம் வாங்கும் யோகம் வரும். சமூகத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதை கூடும். பெண்கள், இல்லத்தரசிகளுக்கு நன்மைகள் நடக்கும். திருமண வயதில் காத்திருப்பவர்களுக்கு கல்யாண யோகம் கைகூடி வரப்போகிறது. 

விருச்சிகம்: 

ஆடி மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அற்புதங்களை அள்ளித்தரப்போகிறது. காரணம் கிரகங்களின் சஞ்சாரம் மனதில் உற்சாகத்தை தரப்போகிறது. பாக்ய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், புதன் இணைந்திருப்பதால் பணவருமானம் அபரிமிதாக இருக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சமுதாயத்தில் செல்வம் செல்வாக்கு உயரும். கணவன் மனைவி உறவில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். இல்லத்தரசிகள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.  பணம் விசயத்திலும், விலை உயர்ந்த பொருட்களிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஆடி மாதத்தில் குல தெய்வ செல்வது நன்மையை அதிகரிக்கும். குரு பார்வை குடும்பத்தில் மகிழ்ச்சியை தரப்போகிறது. திருமண சுப காரியம் கை கூடி வரப்போகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow