ஆடி மாத ராசி பலன் 2024: ஆடியில் மகாலட்சுமி யோகம் தேடி வரப்போகும் 4 ராசிக்காரர்கள்!

Aadi Month Rasipalan 2024 : ஆடி மாதம் அற்புதங்கள் நிறைந்த மாதம் ஆன்மீக அலைகள் நிரம்பிய மாதம். ஆடி மாதத்தில் ஆடித்தபசு, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை என பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஆன்மீக அலைகள் நிறைந்த ஆடி மாத ராசிபலன்களைப் பார்க்கலாம்.

Jul 15, 2024 - 10:28
Jul 15, 2024 - 10:52
 0
ஆடி மாத ராசி பலன் 2024:  ஆடியில் மகாலட்சுமி யோகம் தேடி வரப்போகும் 4 ராசிக்காரர்கள்!
Aadi Month Rasipalan 2024

Aadi Month Rasipalan 2024 : ஆடி மாதம் முழுவதும் சூரியன் கடகம் ராசியில் பயணம் செய்கிறார். தமிழ் ஆண்டின் நான்காவது மாதமான ஆடி மாதம் முதல் தட்சிணாயண புண்ணிய காலம் தொடங்குகிறது.  ஆடி மாதம் அற்புதங்கள் நிறைந்த மாதம் ஆன்மீக அலைகள் நிரம்பிய இந்த மாதத்தில் மேஷம்,ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது என்று பார்க்கலாம். 


மேஷம்:

மேஷம் ராசிக்கு ஆடி மாதம் அற்புதமான மாதம். சூரியன் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்களின் வருமானம் அதிகரிக்கும்.  பணப்பிரச்சினை தீரும், தன லாபம் வருவதால் வங்கி சேமிப்பு உயரும்.  கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் இருந்த வீண் பழி நீங்கும். சிலருக்கு மாத பிற்பகுதியில் புதிய வேலை கிடைக்கும். சிலர் புதிய தொழில் தொடங்க முயற்சி செய்வீர்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.  மனமும் உடம்பும் உற்சாகமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். சொல்வாக்கும் செல்வாக்கும் உயரும். இல்லத்தரசிகளுக்கு நன்மையான மாதம். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். ஆடி அமாவாசையில் தானம் பண்ணுங்க. அன்னையின் ஆசி கிடைக்கும். சுபகாரியத்தில் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கும். 

ரிஷபம்:

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு புது முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நோய் பாதிப்புகள் நீங்கும். வருமானம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சூரியன், புதன் மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் இணைவது சிறப்பு. புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். உங்களின் தன்னம்பிக்கை தைரியம் கைகூடி வரும். திடீர் மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்படும். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உற்சாகம் அதிகரிக்கும். பெண்கள் இல்லத்தரசிகளுக்கு சிக்கல்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும். பயம் பதற்றம் நீங்கும். வீட்டில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சமூகத்திலும் குடும்பத்திலும் மதிப்பு மரியாதை கூடி வரும். வேலைக்கு செல்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும் தலைமை பதவி தேடி வரும். சிலருக்கு திடீர் வேலை வாய்ப்பு வரும், கல்யாண யோகம் கை கூடி வரப்போகிறது. பண வரவு நன்றாக இருக்கும். 

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் உங்களுக்கு நிறைய நன்மைகள் நடைபெறப் போகிறது. சுகமும் சந்தோஷமும் அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும் உற்சாகமும் சந்தோஷமும் அதிகரிக்கும். சிலருக்கு திடீர் வேலை வாய்ப்புகளும் தேடி வரும். உங்களுக்கு இதுநாள் ஏற்பட்டிருந்த தடைகள் தாமதங்கள் நீங்கும். மாத பிற்பகுதியில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பெண்களுக்கு இந்த மாதம் அற்புதமாக இருக்கப் போகிறது. அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் இருந்த பிரச்சினைகள் நீங்கும். விஐபிக்களின் அறிமுகம் தேடி வரும். கடன் பிரச்சினைகள் தீரும்.  திருமண யோகம் கைகூடி வரப்போகிறது. சிலருக்கு புத்திர பாக்கியமும் கிடைக்கும். ஆடி வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை விளக்கேற்றி வழிபடுங்கள் உங்களுக்கு நிறைய நல்லது நடைபெறும். 

கடகம்: 

கடகம் ராசிக்குள் சூரியன்,சுக்கிரன், புதன் இணைந்து பயணம் செய்வதால் உங்களுடைய புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இதுநாள்வரை பட்ட கஷ்டங்கள் தீரும்.  வருமானம் அதிகரிக்கும் பணக்கஷ்டம் முடிவுக்கு வரும். சிலருக்கு பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும் அதன் மூலம் நன்மைகள் நடைபெறும்.  பதவி உயர்வுடன் சம்பள உயர்வு கிடைக்கும். வருமானம் வருவது போல செலவுகளும் தேடி வரும். சிக்கனமாக செலவு செய்வது நல்லது. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன உரசல்கள் வந்து நீங்கும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து அவர்களை நினைத்து வழிபடுங்கள் நல்லதே நடக்கும்.  சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்க. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow