Arjun Tendulkar : 9 விக்கெட்டுகள் கைப்பற்றிய அர்ஜூன் டெண்டுல்கர்.. உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தல்

Arjun Tendulkar Performance in KSCA Invitational Tournament : சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கர் உள்ளூர் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

Sep 17, 2024 - 22:53
Sep 17, 2024 - 23:12
 0
Arjun Tendulkar : 9 விக்கெட்டுகள் கைப்பற்றிய அர்ஜூன் டெண்டுல்கர்.. உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தல்
9 விக்கெட்டுகள் கைப்பற்றிய அர்ஜூன் டெண்டுல்கர்

Arjun Tendulkar Performance in KSCA Invitational Tournament : இந்திய அணிக்கு பரிசீலிக்கப்படுவதற்காக, நடைபெற்று கொண்டிருக்கும் டெஸ்ட் போட்டிகளில், பல கிரிக்கெட் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி, தங்களுக்கான அடையாளத்தை உருவாக்க விரும்புகிறார்கள், பெரும்பாலான வீரர்கள் ரஞ்சிக் கோப்பையில், தங்கள் சொந்த உள்ளூர் அணிகளில் செயல்படும் பட்சத்தில் இந்திய அணிக்கு தேர்வாகி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டெஸ்ட் தொடரான, திம்மபையா நினைவு தொடர் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கர்நாடகா அணியும், கோவா அணியும் மோதின. இதில், 24 வயதான அர்ஜூன் டெண்டுல்கர்(Arjun Tendulkar) அபாரமாக செயல்பட்டார். இதனால், கோவா அணி இன்னிங்ஸ் மற்றும் 189 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடகா அணியை வீழ்த்தியது.

முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணி தனது முதல் இன்னிங்ஸில்103 ரன்களுக்குள் ஆல்-அவுட் ஆனது. இதில், அபாரமாக பந்துவீசிய அர்ஜூன் டெண்டுல்கர்(Arjun Tendulkar) 41 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து களமிறங்கிய கோவா அணி 413 ரன்கள் குவித்தது.

சிறப்பாக பேட்டிங் செய்த அபினவ் தேஜ்ரனா 109 ரன்களும், மந்தன குட்கார் 69 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 310 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய கர்நாடகா அணி, 121 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டாவது இன்னிங்ஸிலும் அர்ஜூன் டெண்டுல்கர் 46 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அர்ஜூன் டெண்டுல்கர் தனது வயதுக்குட்பட்ட கிரிக்கெட்டின் பெரும்பகுதியை, மும்பையில் விளையாடியிருந்தாலும், 42 முறை ரஞ்சி டிராபி சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியில் அவரால் ஒருபோதும் இடம் பெற முடியவில்லை. 2022/23 ஆம் ஆண்டிற்கான ரஞ்சிக் கோப்பை தொடரில் கோவா அணிக்காக பங்கேற்று விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், முதல் தரக் கிரிக்கெட்டில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள அர்ஜூன் டெண்டுல்கர் 21 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். அதே சமயம் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர்களில் 4 போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். ஆனால், அதில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அந்த ஒரு விக்கெட்டை எடுத்தபோது, ‘அப்பாடா, ஒருவழியாக ஐபிஎல் விக்கெட்டை கைப்பற்றி விட்டார்’ என்று ரசிகர்கள் நகைச்சுவையாக விமர்சித்து இருந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow