சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2.. வெளியானது புது அப்டேட்

மூக்குத்தி அம்மன் 2 படத்தை நடிகரும் இயக்குநருமான சுந்தர் சி இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Sep 16, 2024 - 18:28
 0
சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2.. வெளியானது புது அப்டேட்
sundar c direct to nayanthara mookuthi amman 2

ஆர்ஜே பாலாஜி இயக்கி நடித்த படம் மூக்குத்தி அம்மன்.  கடந்த 2020ம் ஆண்டில் வெளியான இந்த படத்தில் அம்மனாக நயன்தாரா நடித்திருந்தார். அரசியல் நையாண்டி கலந்து வெளியான இந்த படத்தில்  மௌலி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடித்து மாஸ் காட்டிருந்தார். இப்போது மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

அரசியல் நையாண்டியுடன் மக்களின் வாழ்க்கை குறித்த பல விஷயங்களை பேசிய நிலையில் இந்த படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்திருந்தனர். இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் இந்த படத்தை பிரபல இயக்குனரும் நடிகரும் தயாரிப்பாளருமான சுந்தர் சி இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை வேல்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

சுந்தர் சி ஏற்கனவே அரண்மனை சீரிஸ் பேய் படங்களை இயக்கியுள்ளார். தற்போது பக்தி நிறைந்த மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்க உள்ளார். முன்னதாக அவர் தனது இயக்கம் மற்றும் தயாரிப்பில் கலகலப்பு 3 திரைப்படத்தையும் இயக்க உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் இந்த இரு படங்களில் எந்த படத்தை அவர் முதலில் இயக்குவார் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். 

 மூக்குத்தி அம்மன் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை அதே போன்ற அரசியல் நையாண்டி கலந்த ஜானரில் சுந்தர் சி கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow