கோட் அப்டேட்..எங்க வந்து யாருகிட்ட.. மட்ட பாடல் மாஸ்.. விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

யுவன் சங்கர் ராஜா இசையில் கோட் படத்தின் மட்ட மட்ட பாடல் வெளியாகியுள்ளது. விஜய் படத்தில் எப்போதுமே இடம் பெறும் மாஸ் பாடல் வரிசையில் இடம் பெறும் என்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Aug 31, 2024 - 18:28
Sep 1, 2024 - 10:07
 0
கோட் அப்டேட்..எங்க வந்து யாருகிட்ட.. மட்ட பாடல் மாஸ்.. விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்
goat 4th single matta

நடிகர் விஜய்யின் கோட் (GOAT) படம் ரிலீசுக்கு பக்கா மாஸாக தயாராகி வருகிறது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படக்குழுவினர் அடுத்தடுத்த பிரமோஷன்களில் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர். விஜய் படங்களுக்கு பிரமோஷன்கள் தேவையில்லை என்ற போதிலும் படங்களுக்கு இயல்பாக செய்ய வேண்டிய பிரமோஷன்களை சிறப்பாக முன்னெடுத்து வருகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. படத்தின் மூன்று பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ள நிலையில், 4வது சிங்கிளும் இன்று வெளியாகியுள்ளது. 

கோட் படத்தின் 4வது சிங்கிள் குறித்த அறிவிப்பை படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட போது, இந்த படத்தின் பாடல்களிலேயே தனக்கு மிகவும் பிடித்தமான பாடல்  மட்ட பாடல் தான் என்று அவர் தெரிவித்துள்ளார். 

கோட் படத்தின் 4வது பாடலின் டைட்டில் மட்ட என்று வெளியான போது இது என்ன மட்ட என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். ரசிகர்களுக்கு பதிலளிக்கும்படியாக பாடலாசிரியர் விவேக் இந்த பாடலின் சில வரிகளை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு சிறப்பான விளக்கத்தை இந்த வரிகளின் மூலமாகவே கொடுத்துள்ளார். 

மச்சி கெடா மஞ்ச சட்ட, மம்டி வரான் பள்ளம் வெட்ட, மட்ட மட்ட ராஜ மட்ட, எங்க வந்து யாருகிட்ட என்பதாக வரிகள் அமைந்துள்ளன.பாடலை கேட்ட ரசிகர்கள்  உற்சாகத்துடன் கமெண்டுகள் பதிவிட்டு வருகின்றனர். இது டூயட் பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆக்சன் பாடலாக அமைந்துள்ளது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமே. இருந்தாலும் பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் உருவாகியுள்ள கோட் படத்தை இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் திருவிழாவாக கொண்டாடவும் விஜய் ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். கோட் படத்துடன் தளபதி 69 படத்தையும் நடித்து முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலக உள்ளதாக விஜய் முடிவெடுத்துள்ளார். இந்நிலையில் கோட் படம் விஜய்யின் கேரியர் பெஸ்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் பல மாஸான விஷயங்களை இயக்குநர் வெங்கட் பிரபு இணைத்துள்ளார்.செப்டம்பர் 5ஆம் தேதி கோட் படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் திரையரங்குகள் திருவிழா கோலம் காண உள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow