Coolie Movie Update : கூலி அப்டேட்.. மாஸ் லுக்கில் மொட்டை சத்யராஜ்.. பார்த்தாலே ஷாக் அடிக்குதே

Actor Sathyaraj in Coolie Movie Update : கூலி படத்தில் நடிக்கும் முக்கியமான கேரக்டர் போஸ்டரை வெளியிட்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். ராஜசேகர் என்ற கேரக்டரில் சத்யராஜ் நடிக்கிறார். இது பற்றிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

Aug 31, 2024 - 17:54
Sep 1, 2024 - 10:07
 0
Coolie Movie Update : கூலி அப்டேட்.. மாஸ் லுக்கில் மொட்டை சத்யராஜ்.. பார்த்தாலே ஷாக் அடிக்குதே
coolie sathyaraj update

Actor Sathyaraj in Coolie Movie Update : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார்.இந்தப் படத்தின் முதல் ஷெட்யூலில் ரஜினிகாந்த், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகர்ஜூனா தொடர்பான காட்சிகள் படமாக்கப்படுகின்றன.இவர்களின் கேரக்டர்கள் பற்றிய தகவல்கள் தினசரியும் வெளியாகி வருகின்றன. 

நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்திற்கு பிறகு வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். டிஜே ஞானவேல் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் அக்டோபர் 10ஆம் தேதி வேட்டையன் படம் ரிலீஸ் ஆகிறது. இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியானது. அதைத் தொடர்ந்து படம் சம்பந்தமான அப்டேட்டுகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன. 

இந்தப் படத்தின் முதல் ஷெட்யூலில் ரஜினிகாந்த், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்படுகின்றன. கூலி படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களின் பெயர்கள் தினசரியும் அறிமுகம் செய்யப்படுகின்றன. மலையாள சினிமாக்களில் (கும்பலாங்கி நைட்ஸ், மஞ்சுமெல் பாய்ஸ்) தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி பெரும் பாராட்டுகளைப் பெற்று வரும் நடிகரான 'சௌபின் சாஹிர்' கூலி படத்தில் 'தயாள்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா கூலி படத்தில் சைமன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை ஸ்ருதிஹாசன் பிரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்ற அறிவிப்பு நேற்று வெளியானது. 

நடிகர் சத்யராஜின் முதல் அதிகாரப்பூர்வ கேரக்டர் போஸ்டரை கூலி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று ( ஆகஸ்ட் 31) வெளியிட்டார். ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் சத்யராஜ்,  ராஜசேகர் என்ற வேடத்தில் நடிக்கிறார் இதனை லோகேஸ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். சத்யராஜ் போஸ்டரில் மொட்டை அடித்துள்ளார்.  கண்ணாடி அணிந்து, மின்சார கம்பியை  கோபத்தோடு முறைத்து பார்க்கிறார். டெரர் ஆக காட்சி அளிக்கிறார் சத்யராஜ். ரஜினியுடன் இணைந்து சத்யராஜ் பல படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது 38 வருடங்களுக்குப் பிறகு ரஜினி, சத்யராஜ் கூட்டணி மீண்டும் இணைய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow