23 மணி நேரம் 23 நிமிடத்தில் உருவான சாதனைப்படம் சம்பளம் வாங்காமல் நடித்த ஹீரோயின்
Pitha Movie : 23 மணி நேரம், 23 நிமிடத்தில் படப்பிடிப்பு முடிந்தது என்பது புது சாதனை. நான் ஒருவன் மட்டுமே இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். அடுத்து கலைஞர்நகர் என்ற படத்தை உருவாக்கினோம். அதை 23 மணி நேரத்தில் முடித்து இருக்கிறோம்.
Pitha Movie : தமிழ் சினிமா சரித்திரத்தில் மிகக்குறைவான நேரத்தில் எடுக்கப்பட்ட படம் என்ற சாதனையை சுயம்வரம் படைத்தது. 24 மணி நேரத்தில் அந்த படம் உருவாக்கப்பட்டது. 1999ம் ஆண்டு எடுக்கப்பட்ட அந்த படத்தை பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்.சி உட்பட 14 பேர் இயக்க, பிரபு, சத்யராஜ், குஷ்பு, ரோஜா, கஸ்துாரி உட்பட ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம் நடித்தது.
ஒவ்வொரு இயக்குனரும் குறிப்பிட்ட காட்சியை எடுத்து, பின்னர் ஒருங்கிணைப்பட்டு அந்த படம் உருவானது. சுயம்பரம் சாதனையை பிதா என்ற படம் உடைத்துள்ளது. பிதா படத்தை 23 மணி நேரம், 23 நிமிடத்தில் எஸ்.சுகன்
இயக்கியுள்ளார்.
இந்த சாதனை குறித்து இயக்குனரிடம் கேட்டால் ‘‘வாய் பேச முடியாத ஒரு சிறுவன், திருவிழா சமயத்தில் காணாமல் போன தனது அக்காவை தேடி அலைகிறான். ஒரு தொழிலதிபரை கடத்தி வைத்துவிட்டு 25 கோடி பணம் கேட்டு மிரட்டும் ஒரு கும்பல் பிடியில் அக்கா சிக்குகிறார். கணவரை மீட்க 25 கோடி கொடுக்க தயாராகிறார் தொழிலதிபர் மனைவி. அப்போது என்ன நடக்கிறது என்பது கதை.ஆதேஷ் பாலா, சாம்ஸ், மாஸ்டர் தர்ஷித், ஸ்ரீராம் சந்திரசேகர், அனு கிருஷ்ணா, ரெஹனா, மாரீஸ் ராஜா, அருள்மணி ஆகியோர் நடித்துள்ளனர்.என் மகனே அந்த வாய் பேச முடியாத சிறுவன் வேடத்தில் நடித்தார். ரம்யாகிருஷ்ணன் நீலாம்பரி மாதிரி கலக்கியிருக்கிறார் ரெஹைனா
பக்காவாக திட்டமிட்டு இந்த படப்பிடிப்பை தொடங்கினோம். முதலில் நடிகர்களுக்கு பயிற்சி கொடுத்தோம். 23 மணி நே ரம், 23 நிமிடத்தில் படத்தை முடிக்க வேண்டும் என்பதால், கடத்தல் கும்பல் காட்சிகளை ஒரு யூனிட்டும், கோயில் திருவிழா காட்சிகளை இன்னொரு யூனிட்டும் படமாக்க நினைத்தோம். ஆனால், சில மணி நே ரத்துக்கு முன்னால் தயாரிப்பாளர் விலகியதால் படப்பிடிப்பு நிற்க வேண்டிய நிலை. நான் அழுது கொண்டிருந்தேன்.
அப்போது கடைசி நே ரத்தில் இன்னொரு தயாரிப்பாளர் வந்து உதவினார். திட்டமிட்டடப்படி படப்பிடிப்பை தொடங்கினோம். ஒரு பக்கம் படப்பிடிப்பு, லை வ் சவுண்டு, எடிட்டிங், இசைப்பணிகளை ஒரே இடத்தில் நடத்தி சாதனையை முடித்தோம்.
ஆனால், லை ட் யூனியன் ஆட்களுக்கு சம்பளம் கொடுப்பதில் பிரச்னை ஏற்பட, அவர்கள் எங்களை சுற்றி வளைத்தனர். படப்பிடிப்பு முடிந்தும் படப்பிடிப்பு நடந்த வீட்டில் இருந்து வெளியேறாத படி பார்த்துக்கொண்டனர். கடைசியில் போலீஸ் வந்து பே ச்சு வார்த்தை நடத்தியது. பின்னர் சம்பளம் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து வெ ளியேறினோம். பணபிரச்னையால் பட ரிலீஸ் தடைபட்டபோது, கடன் பிரச்னை வந்தபோது உயிரை விட நினைத்தேன். அப்போது சிவராஜ் என்பவர் தயாரிப்பாளராக வந்து படத்துக்கு உதவினார்
காமெடி நடிகர் சாம்ஸ் கடத்தல் கும்பலில் முக்கியமான வே டத்தில் வருகிறார். அவர்தான் சம்பள பிரச்னைக்காக நாங்கள் சுற்றி வளைக்கப்பட்டபோது போலீசை வரவழைத்து காப்பாற்றினார். இதில் ஹீரோயினாக நடித்த அனுகிருஷ்ணா சம்பளம் வாங்கவில்லை. அவர் என் தங்கை போன்றவர். பலர் குறைவான சம்பளம் வாங்கி நடித்தனர். 23 மணி நே ரம், 23 நிமிடத்தில் படப்பிடிப்பு முடிந்தது என்பது புது சாதனை. நான் ஒருவன் மட்டுமே இந்த படத்தை இயக்கியிருக்கிறேன்.
படப்பிடிப்பு நடந்தபோதேபோஸ்ட் புரடக் ஷன் பணிகளையும் முடித்தோம். ஆனாலும், அதை முறியடிக்க நினைத்தோம். இதே தயாரிப்பு நிறுவனம் சார்பில், அடுத்து கலைஞர்நகர் என்ற படத்தை உருவாக்கினோம். அதை 23 மணி நே ரத்தில் முடித்துவிட்டோம். அது குறித்த அறிவிப்பு விரைவில் வரும். 50பேர் குழுமி இருந்த கோயில் திருவிழாவில் படப்பிடிப்பு நடத்தியது சவாலான விஷயம். . ஜூலை 26ல் படம் ரிலீஸ். ’’ என்கிறார்
*
What's Your Reaction?