Actor Ajith Kumar AK 64 Movie Update : அஜித் நடித்து வந்த விடாமுயற்சி ஷூட்டிங் சில தினங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. மகிழ் திருமேனி இயக்கிய இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் அஜர்பைஜானில் நடந்தது. ரோட் ஜானர் மூவியாக உருவாகியுள்ள விடாமுயற்சி(Vidaamuyarchi), தீபாவளிக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார் அஜித். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் குட் பேட் அக்லி ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருவதோடு, இத்திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என்பதையும் படக்குழு அறிவித்துவிட்டது.
ஒரேநேரத்தில் இரண்டு படங்களிலும் பிஸியாக நடித்து வரும் அஜித், ஏகே 64(AK 64 Movie) இயக்குநரையும் டிக் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. பொதுவாக ஒரு படம் முடிந்த பின்னர் பைக் டூர் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் அஜித். அடுத்தப்படத்துக்கு கொஞ்சம் டைம் எடுத்து தான் கால்ஷீட் கொடுப்பார். ஆனால், ஏகே 64 படத்துக்காக இப்போதே ரெடியாகிவிட்டாராம் அஜித். அதேபோல், இப்படத்தை பிரசாந்த் நீல்(Prashanth Neel) இயக்கவுள்ளதும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அஜித் – பிரசாந்த் நீல் கூட்டணி பற்றி கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், இதுபற்றி அபிஸியலாக இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில், அஜித்தும் பிரசாந்த் நீலும் ஏகே 64-ல் இணையவுள்ளதாகவும், இப்படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு தொடங்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல், 2026ம் ஆண்டு ஏகே 64 ரிலீஸாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பான் இந்தியா ஜானரில் பல மொழிகளில் உருவாகவுள்ள ஏகே 64-ல் அஜித் கேங்ஸ்டராக நடிக்கவிருப்பதும் உறுதியாகியுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான கேஜிஎஃப், மெகா பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. அடுத்து பிரபாஸ் நடிப்பில் சலார் படத்தை இயக்கினார் பிரசாந்த் நீல், கடந்தாண்டு டிசம்பரில் வெளியான சலார் படத்துக்கும் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் தொடங்கும் எனவும், 2025ல் ரிலீஸாகும் என்றும் தெரிகிறது.
அதன்பின்னர் அஜித்தின் ஏகே 64 படத்தை இயக்கவுள்ளாராம் பிரசாந்த் நீல். முன்னதாக ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ஒரு படம் இயக்கவிருந்தார் பிரசாந்த் நீல். ஆனால் ஜூனியர் என்.டி.ஆர் கால்ஷீட் பிரச்சினையால் இப்போதைக்கு அந்தப் படம் உருவாக வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. அதேபோல், அஜித்தின் ஏகே 64-ஐ தொடர்ந்து ஏகே 65, ஏகே 66 படங்களையும் பிரசாந்த் நீல் இயக்கவுள்ளாராம். ஏகே 66 கிளைமேக்ஸில் இருந்தே கேஜிஎஃப் 3ம் பாகம் உருவாகும் எனவும், இது பக்கா சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இப்போதைக்கு ஏகே 64, ஏகே 65 இரண்டும் கன்ஃபார்ம் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது.
அஜித் - பிரசாந்த் நீல் கூட்டணி குறித்து விரைவில் அபிஸியலாக அறிவிக்கப்படவுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை இக்கூட்டணி உறுதியாகிவிட்டால் பாக்ஸ் ஆபிஸில் அஜித் தான் மாஸ்டராக இருப்பார். விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலுக்குப் போவதாக அறிவித்த நாள் முதல், அஜித் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். முன்னதாக அஜித்தின் ஏகே 64 படத்தை சிறுத்தை சிவா இயக்குவார் என சொல்லப்பட்டது. ஆனால், அவரோ கங்குவா இரண்டாம் பாகம் இயக்க பிளான் செய்திருப்பதால், அஜித்தும் பிரசாந்த் நீலுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கலாம் எனத் தெரிகிறது. இந்நிலையில், அஜித்தும் பிரசாந்த் நீலும் இணைந்துள்ளது ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.