நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோர் நடித்துள்ள 'பராசக்தி' திரைப்படத்துக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கதை திருட்டுக் குற்றச்சாட்டு - வழக்கு விவரம்
சுதா கொங்கரா இயக்கத்தில், ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'பராசக்தி' திரைப்படம் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இணை இயக்குநர் ராஜேந்திரன் என்பவர், தனது 'செம்மொழி' கதையைத் திருடி இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
ராஜேந்திரன் தரப்பில், 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட 'செம்மொழி' கதை 2010 இல் எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டதாகவும், அதை இயக்குநர் சுதா கொங்கரா பயன்படுத்தியுள்ளதால் அவர் படத்தின் கதாசிரியர் பெயரைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில், படத்தின் கதை 2020 ஆம் ஆண்டிலேயே பதிவு செய்யப்பட்டதாகவும், மனுதாரரின் கதைக்கும் 'பராசக்தி' திரைக்கதைக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என்றும் வாதிடப்பட்டது. மேலும், பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படத்துக்குத் தடை விதித்தால் பெரிய இழப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, படம் தயாரிப்பது குறித்து 2024 ஆம் ஆண்டிலேயே தகவல் தெரிந்தும், 2025 டிசம்பரில் தாமதமாகவே மனுதாரர் வழக்குத் தாக்கல் செய்திருக்கிறார் எனக் கூறி, 'பராசக்தி' திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க முடியாது எனத் தீர்ப்பளித்து மனுவைத் தள்ளுபடி செய்தார்.
எழுத்தாளர் சங்கத்துக்கு உத்தரவு
இதற்கிடையில், 'பராசக்தி' படத்தின் கதையையும் 'செம்மொழி' கதையையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஏற்கனவே உத்தரவிட்டும், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யாததால், அந்த அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட முறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். பிரதான வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 28 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.

LIVE 24 X 7