சினிமா

RAJINI 173: டெய்லர் வேடத்தில் நடிக்கும் ரஜினி.. இயக்குநர் யார் தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்தின் 173வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

RAJINI 173: டெய்லர் வேடத்தில் நடிக்கும் ரஜினி.. இயக்குநர் யார் தெரியுமா?
Rajini 173
நடிகர் ரஜினிகாந்தின் 173வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இந்தப் படத்தினை இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரம்மாண்டத் தயாரிப்பில் 'தலைவர் 173'

ரஜினிகாந்த் நடிக்கும் இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம், கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோருடன் இணைந்து தயாரிக்கிறது. 'தலைவர் 173' படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படம் பொங்கல் 2027 அன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போஸ்டர் சொல்லும் கதை

வெளியிடப்பட்ட முதல் பார்வை போஸ்டர், படத்தின் கருப்பொருள் குறித்துச் சுவாரஸ்யமான கேள்விகளை எழுப்பியுள்ளது. போஸ்டரில் டெனிம் துணி பின்னணியில், தையல் ஊசிகள், துப்பாக்கி குண்டுகள் மற்றும் காணப்படுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, நட்சத்திர வடிவில் அடுக்கப்பட்டுள்ள, நுணுக்கமான வேலைப்பாடு கொண்ட தங்க நிறக் கத்திரிக்கோல்கள் மைய அம்சமாக உள்ளன. மேலும், போஸ்டரில் "EVERY FAMILY HAS A HERO" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

இந்த போஸ்டர் வடிவமைப்பைப் பார்க்கும்போது, 'தலைவர் 173' திரைப்படம், தையல் கலை அல்லது துணிகளை மையப்படுத்திய ஒரு குடும்பப் பின்னணிக் கதையுடன், ஆக்ஷன் நிறைந்த திரில்லராகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், ரஜினிகாந்த் டெய்லர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.