நடிகர் அஜித்குமாரின் திரைப்படங்களில், ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட 'மங்காத்தா' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னணி நடிகர்களின் பழைய பிளாக்பஸ்டர் படங்கள் தற்போது மீண்டும் வெளியாகி வசூல் சாதனை படைத்து வரும் நிலையில், இந்தச் செய்தி அஜித் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபுவின் பதிவு
'மங்காத்தா' படத்தின் மறுவெளியீடு குறித்துப் பல ஆண்டுகளாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், இந்தப் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் "கிங் மேக்கர்" என்று பதிவிட்டுள்ளார். இந்த ஒரு வரிக்கான பதிவுதான், 'மங்காத்தா' ரீ-ரிலீஸ் குறித்த பேச்சுவார்த்தைகளை உறுதிப்படுத்துவதாகச் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரீ-ரிலீஸ் திட்டம்
கிளௌட் நைன் மூவிஸ் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், 2011 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் 'மங்காத்தா'. இது அஜித்தின் 50வது படமாகும். இப்படத்தில் அஜித், விநாயக் மகாதேவ் என்ற முழுக்க முழுக்க நெகட்டிவ் கதாபாத்திரத்தில் மாஸ் காட்டி இருப்பார்.
திரையரங்குகளில் ரசிகர்கள் அஜித்தின் ஸ்டைலான வில்லத்தனத்தையும், யுவன் ஷங்கர் ராஜாவின் மிரட்டலான பின்னணி இசையையும் மீண்டும் திரையில் பார்ப்பது வேற லெவல் அனுபவமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
மேலும், இந்த படத்தை புத்தாண்டை ஒட்டி ரீ-ரிலீஸ் செய்யப்படலாம் என்றும் அல்லது பொங்கல் பண்டியையை முன்னிட்டு வெளியிடப்படலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அப்படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரீ-ரிலீஸ் செய்யப்பட்டால், நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்துடன் நேரடி மோதலாக இருக்கும்.
ரீ-ரிலீஸ் டிரெண்ட்
சமீபத்தில் விஜய் நடித்த 'கில்லி', ரஜினிகாந்தின் 'படையப்பா' போன்ற படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டுப் பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் 'மங்காத்தா' இணையும் பட்சத்தில், முந்தைய ரீ-ரிலீஸ் படங்களின் வசூல் சாதனைகளை இது முறியடிக்கக்கூடும் என்றும் சினிமா வர்த்தக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.

LIVE 24 X 7