சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் அஜித், தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார். இதில் விடாமுயற்சி படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாகவும், விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார் அஜித். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பெயினில் நடைபெற்று வரும் நிலையில், அஜித்தும் அதில், தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் லுக் எப்படி இருக்கும் என்பதை ஏற்கனவே போஸ்டராக படக்குழு வெளியிட்டிருந்தது. இப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட அஜித்தின் போட்டோ ஒன்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. கைகளில் கலர்ஃபுல்லான டாட்டூவுடன், வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்தபடி செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார் அஜித். அவரது இந்த கெட்டப் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுத்துள்ளது. அதேபோல் அஜித்துடன் தெலுங்கு நடிகர் சுனில் எடுத்துக்கொண்ட செல்ஃபியும் ட்ரெண்டிங்கிள் உள்ளது.
இதனிடையே அஜித்தின் வீடியோவும் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ஸ்பெயினில் தனது காதல் மனைவி ஷாலினியுடன் பொடி நடையாக வலம் வருகிறார் அஜித். சால்ட் அன்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில், கூலர்ஸ் அணிந்துள்ள அஜித், ஷாலினியுடன் ரொமாண்டிக்காக வாக் போகிறார். இந்த வீடியோவை ஷாலினியே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருதினங்களுக்கு முன்னர் தனது மகனுடன் கால்பந்து போட்டியை கண்டு ரசித்த போட்டோவையும் ஷாலினி ஷேர் செய்திருந்தார்.
அடுத்தடுத்து அஜித்தின் வீடியோவும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருவது, அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் பைக் டூர் குறித்து அஜித் பேசிய வீடியோ படு வைரலானது. அதில், மதமும் சாதியும் மக்களை வெறுக்க வைக்கும். ஆனால் அவர்களை சந்தித்த பிறகு அது மாறும் என கூறியிருந்தார். அதேபோல், மதம், இனத்தை வைத்து நாம் ஒரு முடிவோடு மனிதர்களை சந்திக்கிறோம், ஆனால் அவர்களை நேரில் சந்தித்த பின்னர் தான் உண்மை நிலை என்னவென்று தெரியும். ஒரு பயணம் அங்குள்ள மக்களை பற்றி அறிந்துகொள்வது மட்டுமின்றி, அவர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, மத நல்லிணக்கம் ஆகியவற்றையும் தெரிந்துகொள்ள உதவும். பயணங்கள் மூலம் தேசம், மதம், கலாச்சாரம் கடந்து பலதரப்பட்ட மனிதர்களை உணர முடிவும்.
இதுபோன்ற பயணங்கள் தான் ஒரு சாதரண நபரை, சிறந்த மனிதராக மாற்றும் என்றும் அஜித் தனது அனுபவத்தை கூறியிருந்தார். இந்த வீடியோவை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வந்த நிலையில், இப்போது அஜித்தும் ஷாலினியும் “அன்பே இருவரும் பொடிநடையாக ஐரோப்பாவை வலம் வருவோம்” என்பதாக ரொமாண்டிக் வாக் சென்றுள்ளது பலரையும் கவர்ந்துள்ளது.
View this post on Instagram