Raayan : ஆஸ்கருக்கு சென்ற ராயன்..? ரவுசு காட்டும் தனுஷ் ரசிகர்கள்... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
Actor Dhanush Raayan Tamil Movie : தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள ராயன், ஆஸ்கர் வரை என்ட்ரி கொடுத்து ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.
Actor Dhanush Raayan Tamil Movie : தனுஷின் 50வது படமாக உருவான ராயன் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ரிலீஸானது. தனுஷே இயக்கியுள்ள இப்படத்தில் அவருடன் துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், பிரகாஷ்ராஜ், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ராயன் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். அதிக எதிர்பார்ப்புடன் வெளியான ராயன், பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதுபற்றி படக்குழு தரப்பில் அபிஸியல் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநராக 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துள்ள தனுஷுக்கு ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தனுஷின் ராயனுக்கு சர்வதேச அளவிலும் அங்கீகாரம் கிடைத்துள்ளது கோலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அதுவும் ஆஸ்கர் விருது குழுவில் இருந்தே ராயனுக்கு பெரிய சர்ப்ரைஸ் கிடைத்துள்ளது, பலரையும் வியக்க வைத்துள்ளது. அதாவது ராயன் படத்தின் திரைக்கதை ஆஸ்கர் அகாடமியின் நூலகத்தில் இடம்பெற தேர்வாகி உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ராயன் படத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு இருந்தாலும், கதை, திரைக்கதை இரண்டுமே சொல்லிக்கொள்ளும்படி இல்லை என விமர்சனங்கள் எழுந்தன. தனுஷின் மேக்கிங், துஷாரா விஜயனின் நடிப்பு, ஏஆர் ரஹ்மானின் மிரட்டலான பிஜிஎம் ஆகியவை தான் ராயன் படத்தின் வெற்றிக்கு கை கொடுத்ததாக விமர்சகர்கள் கூறியிருந்தனர். ஆனால், ராயன் படத்தின் திரைக்கதை ஆஸ்கர் அளவிற்கு சென்றுள்ளது தான் தனுஷ் ரசிகர்களை ரவுசு விட வைத்துள்ளது. ராயன் திரைக்கதைக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரத்தால், இன்னும் பல சர்வதேச சினிமா விழாக்களில் இத்திரைப்படம் ஸ்க்ரீனிங் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க - தனுஷ் மீதான நடவடிக்கை... தயாரிப்பாளர் சங்கம் மீண்டும் அதிரடி!
முன்னதாக தனுஷ் நடிப்பில் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியான கேப்டன் மில்லர் படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன. அதேபோல், பாக்ஸ் ஆபிஸிலும் இந்தப் படம் ரொம்பவே தடுமாறியது. ஆனால், கேப்டன் மில்லர் திரைப்படம் சமீபத்தில் நடைபெற்ற லண்டன் தேசிய திரைப்பட விழாவில் விருது வென்றிருந்தது. அதாவது சிறந்த அயல்மொழி திரைப்படத்துக்கான பிரிவில் கேப்டன் மில்லருக்கு விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அருண் மாதேஸ்வரன் இயக்கிய இத்திரைப்படத்திலும் ராயன் போல அதிகளவில் வன்முறை காட்சிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படத்தின் திரைக்கதை ஆஸ்கர் அகாடமியின் நூலகத்தில் இடம்பெற தேர்வாகி உள்ளதாக படக்குழு அறிவிப்பு#Kumudamnews | #kumudam | #Kumudamnews24x7 | #Raayan | #Oscars | @dhanushkraja @TheAcademy@arrahman pic.twitter.com/Y6DRQjU2YC — KumudamNews (@kumudamNews24x7) August 2, 2024
What's Your Reaction?