Bigg Boss Season 8 Tamil : “ஆளும் ஆட்டமும் புதுசு..” கமலை பங்கம் செய்த பிக் பாஸ் ப்ரோமோ... விஜய் சேதுபதி ராக்கிங்!
Actor Vijay Sethupathi Hosting Bigg Boss Season 8 Tamil Promo : பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார். இதனையடுத்து விஜய் சேதுபதியின் முதல் ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
Actor Vijay Sethupathi Hosting Bigg Boss Season 8 Tamil Promo : ஹாலிவுட், பாலிவுட்டை தொடர்ந்து கோலிவுட்டிலும் அறிமுகமான பிக் பாஸ் நிகழ்ச்சி, இதுவரை 7 சீசன்களை கடந்துவிட்டது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. என்னதான் ஒருபக்கம் கடும் விமர்சனங்கள் இருந்தாலும், நாளுக்கு நாள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான ஆதரவு பெருகிக்கொண்டே இருந்தது. வார இறுதி நாட்களில் கமல்ஹாசன் பங்கேற்கும் இரண்டு எபிசோட்களை பார்க்க ரசிகர்கள் ரொம்பவே ஆர்வம் காட்டினர். ஆனால், கடைசி இரண்டு சீசன்களில் கமல்ஹாசனின் ஹோஸ்டிங் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.
பிக் பாஸ் சீசன் 6ல்(Bigg Boss Season Tamil) அசீம்க்கு ரெட் கார்டு கொடுக்கவில்லை என பொங்கிய அதே ரசிகர்கள் தான், சீசன் 7ல் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு வழங்கியதை கண்டித்து கமல்ஹாசனை வெளுத்து வாங்கினர். இதனால் அப்போதே பிக் பாஸில் இருந்து கமல்ஹாசன் விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொஞ்சம் பொறுத்திருந்து சில தினங்களுக்கு முன்னர் பிக் பாஸில் இருந்து விலகுவதாக அறிவித்தார் கமல். இதனையடுத்து கமலுக்கு பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி கமிட்டானார். இதற்கான அறிவிப்பு சில தினங்களுக்கு முன்னர் வெளியான நிலையில், தற்போது முதல் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது பிக் பாஸ் டீம்.
இந்த ப்ரோமோவில் ஸ்டைலாக என்ட்ரி கொடுக்கும் விஜய் சேதுபதியிடம், பிக் பாஸ் நிகழ்ச்சியை(Bigg Boss Show) எப்படி ஹோஸ்ட் செய்ய வேண்டும் என பொதுமக்கள் அட்வைஸ் கொடுக்கின்றனர். இந்த லிஸ்ட்டில் குரூப்பிஸம், டாமினேட் பண்றவங்கள எல்லாம் சும்மா ஓட விடணும் என, ஆரம்பமே அமர்க்களமாக தொடங்குகிறது. அடுத்து “மனிதர்களில் நல்லவங்க யாரு, கெட்டவங்க யாருன்னு ஈஸியா கண்டுபிடிக்க முடியாது, யாருக்கு ரெட் கார்டு கொடுக்கணும், இளகிய மனசெல்லாம் பஸ்ல ஓகே, பிக் பாஸ்ல வேண்டாம், கேள்வி கேக்கும் போது சுறுக்குன்னு கேட்கணும், வீக் என்ட்ல எல்லாரும் பம்முவாங்க, ஆனா வீக் டேய்ஸ்ல எகிறுவாங்க” என அடுத்தடுத்து செம பஞ்சிங்காக உருவாகியுள்ளது இந்த ப்ரோமோ.
இதில் குரூப்பிஸம், டாமினேஷன், வீக் என்ட்ல நல்லவன் வேஷம் போடுறது, ரெட் கார்டு என இதற்கு முந்தைய சீசன்களில் சர்ச்சையான வைரல் கன்டென்ட்களை ப்ரோமோவாக கொண்டு வந்துள்ளனர். இது கமலை டார்க்கெட் செய்து வைக்கப்பட்டுள்ளதா என சமூக வலைத்தளங்களில் விவாதமே தொடங்கிவிட்டது. கடந்த சீசனில் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு வழங்கியதால் கமல் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. கமலுக்கு ரெட் கார்டு கொடுத்து பிக் பாஸ்(Bigg Boss House) வீட்டில் இருந்து வெளியே அனுப்புங்கள் என ரசிகர்கள் கொந்தளித்தனர்.
மேலும் படிக்க - மாரி செல்வராஜ்ஜின் வாழை ஓடிடி ரிலீஸ் தேதி
இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து, பிக் பாஸ் ரசிகர்களை கூல் செய்துள்ளது புதிய ப்ரோமோ.(Bigg Boss Season 8 Tamil Promo) அதேபோல் முதன்முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளதும் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் வெரைட்டியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அவரது ஸ்டைலில் ஸ்கோர் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?