Vaazhai OTT Release : மாரி செல்வராஜ்ஜின் வாழை ஓடிடி ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்... எப்போன்னு தெரியுமா?
Vaazhai Movie OTT Release Date : மாரி செல்வராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான வாழை திரைப்படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், வாழை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

Vaazhai Movie OTT Release Date : பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அவரது 4வது படமான வாழை கடந்த மாதம் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. நிகிலா விமல், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். மாமன்னன் வெளியாகும் முன்பே வாழை படத்தை பாதி முடித்திருந்தார் மாரி செல்வராஜ். அதோடு இந்தப் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவு செய்திருந்தார்.
ஆனால், தனது பயோபிக் மூவியாக உருவாகியுள்ள வாழை படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதே மாரி செல்வராஜ்ஜின் ஆசையாக இருந்தது. அதன்படி இந்தப் படம் கடந்த மாதம் இறுதியில் திரையரங்குகளில் வெளியானது. அதற்கு முன்னதாகவே வாழை படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டியிருந்தனர். அதனால், இந்தப் படத்துக்கு திரையரங்குகளில் தரமான ஓபனிங் கிடைத்தது. தனது பள்ளிப் பருவத்தில் நடந்த உண்மை கதையை தத்ரூபமாக இயக்கியிருந்தார் மாரி செல்வராஜ். வாழை வெளியான பின்னர் ரசிகர்களிடமும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.
அதேநேரம் வாழை படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்களும் கிடைத்தன. முக்கியமாக எழுத்தாளர் சாரு, வாழை ஒரு ஆபாச படம் என மிக காட்டமாக விமர்சனம் செய்திருந்தார். அதாவது நிகிலா விமலுக்கும் பள்ளியில் படிக்கும் மாணவனுக்கும் இடையேயான காட்சிகள், ஆபாசமாக இருந்ததாகவும், அதுதான் வாழை படத்தின் வெற்றிக்கு காரணம் என்றும் குறிப்பிட்டு இருந்தார். எழுத்தாளர் சாருவின் இந்த விமர்சனம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து சாருவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் வாழை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி மாரி செல்வராஜ் இயக்கிய வாழை, வரும் 27ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மொத்தமே 8 கோடி ரூபாய் என மினிமம் பட்ஜெட்டில் உருவான வாழை, இதுவரை 20 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. அதனால் ஓடிடி ரசிகர்களிடமும் வாழை படத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க - அடிபொலி க்ரைம் த்ரில்லர் மூவி… தலைவன் விமர்சனம்!
விஜய்யின் கோட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அப்போதும் வாழை படத்துக்கு இன்னும் ஸ்க்ரீன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், திரையரங்குகளில் ரசிகர்கள் தொடர்ந்து வாழை படத்துக்கு ஆதரவு கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






