Actor Soori Tamil Movie Kottukkaali : தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் தோன்றி, நகைச்சுவை நடிகராக வளர்ந்து, கதநாயனாக உருவெடுத்தது வரை நடிகர் சூரியின் வளர்ச்சி அபாரமானது, அவரது கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு என்றே சொல்லலாம். சங்கமம், நினைவிருக்கும் வரை, ஜேம்ஸ் பாண்டு, உள்ளம் கொள்ளை போகுதே, ரெட் வின்னர், தீபாவளி போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த வகையில் அவர் துணை நடிகராக நடித்த 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடரில் கூட மெக்கானிக் செட் ஊழியராக நடித்திருப்பார் நடிகர் சூரி. பின்னர் வெண்ணிலா கபடிக் குழு திரைப்படத்தின் காமெடி மூலம், பரோட்டா சூரி என பரவலாக அறியப்பட்டார். தொடர்ந்து, அஜித், விஜய், ரஜினி, சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். இப்படி படிப்படியாக முன்னேறி என்று ஒரு நாயகனாக உருவெடுத்து இருக்கும் சூரியின் வளர்ச்சி நிச்சயம் பாராட்டத்தக்கது.
இதனையடுத்து, காமெடி நடிகராக கலக்கி வந்த சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் நாயகனாக நடித்த, விடுதலை திரைப்படம் திரைப்பட வாழ்க்கையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது. முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தனக்கு கொடுத்திருந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து அசத்தினார், அவரது நடிப்பிற்கு மக்கள் மத்தியில் நல்ல பாராட்டு கிடைத்தது. விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் பலரும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தொடர்ந்து, சசிக்குமாருடன் இணைந்து நடித்த கருடன் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை கொடுத்திருந்தது. அதோடு மட்டுமல்லாமல், சூரி நடிப்பில் பிரமாதப்படுத்தி இருந்தார். குற்றவுணர்வு, அழுகை, கோபம், ஆற்றாமை என அத்தனை உணர்வுகளையும் அநாசியமாக வெளிப்படுத்தி இருந்தார். கருடன் திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் பி.எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் கொட்டுக்காளி திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் திரைப்படம் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்து நடிகர் சூரி, “என்னுடைய முந்தைய படங்களான விடுதலை, கருடனிலிருந்து முற்றிலும் வேறுப்பட்ட திரைப்படமாக #கொட்டுக்காளி இருக்கும். இது ஒரு Mainstream Content Oriented திரைப்படம். உண்மைக்கு மிக நெருக்கமான படம். இதில் வரும் என்னுடைய பாண்டி என்கிற கதாபாத்திரம் எல்லா குடும்பங்ளிலும் இருக்கும் ஒருவன் தான்.
இந்த சமூகம் சொல்லிக்கொடுத்த உறவு முறைகளையும், நம்பிக்கைகளையும் பெரிதும் நம்புகிற ஒரு கதாபாத்திரம் தான் பாண்டி. இந்த படத்தில் வரும் பயணத்தில், இந்த சமூகம் உருவாக்குன பாண்டிக்கும், பாண்டி என்கிற தனிப்பட்ட ஒருவனுக்கும் நடக்குற மன போராட்டத்த சரியா பிரதிபலிக்கனும்னு ரொம்ப கவனமா இருந்தேன். அதை சரியாவும் பண்ணி இருக்கேன்னு நம்புறேன். நீங்க அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படமாக கொட்டுக்காளி நிச்சயம் இருக்கும்” என்று கூறியுள்ளார்.