மறைந்த பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் ஐகானிக் ஸ்டைல்.. அச்சு அசலாக மாறிய நடிகை வித்யாபாலன்

மறைந்த கர்நாடக பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் 108வது பிறந்தநாளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடிகை வித்யாபாலன் அவரது பாரம்பரிய பாணியை மறு உருவாக்கம் செய்திருக்கிறார்.

Sep 16, 2024 - 18:10
 0
மறைந்த பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் ஐகானிக் ஸ்டைல்.. அச்சு அசலாக மாறிய நடிகை  வித்யாபாலன்
ms subbulakshmi 108 birthday vidya balan

'பாரத் ரத்னா’ விருது பெற்ற பிரபல கர்நாடக பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் 108வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடிகை வித்யாபாலன், அவரது ஸ்டைலை மீண்டும் கொண்டு வந்திருக்கிறார். இதற்கு 'ரீ-கிரியேஷன் ஆஃப் ஐகானிக் ஸ்டைல்ஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதற்காக பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனு பார்த்தசாரதியுடன் இணைந்திருக்கிறார் வித்யாபாலன். 

இது குறித்து பகிர்ந்து கொண்ட நடிகை வித்யாபாலன், “நான் எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவைப் பார்த்து தான் வளர்ந்தேன். என் அம்மா தினமும் காலையில் அவர் பாடிய சுப்ரபாதம் பாடலை வீட்டில் ஒலிக்க விடுவார். என்னுடைய தினசரி நாட்கள் அவரது குரலில் தான் தொடங்குகிறது. என்னைப் பொறுத்தவரை எம்.எஸ். அம்மா ஒரு ஆன்மிக அனுபவம். அவர் மீதான என் அன்பின் வெளிப்பாடுதான் இது. இந்த வழியில் அவருக்கு அஞ்சலி செலுத்த முடிந்ததை நான் பெருமையாக உணர்கிறேன்” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த அம்சம் எம்.எஸ். அம்மா அணிந்திருந்த 60 மற்றும் 80களுக்கு இடையில் பிரபலமாக இருந்த நான்கு புடவைகளை காட்சிப்படுத்துகிறது. இது எம்.எஸ்.அம்மாவின் கச்சேரி ஆளுமையின் சித்தரிப்பு ஆகும். எம்.எஸ். அம்மாவின் தோற்றத்தில்  தனித்துவமான புடவைகளுடன், நெற்றியில் பாரம்பரிய குங்குமம் மற்றும் விபூதி, மூக்கில் இருபுறமும் 2 தனித்துவமான மூக்குத்திகள், கொண்டையில் அலங்கரிக்கப்பட்ட மல்லிப்பூ, உள்ளிட்ட எளிய அணிகலன்கள் என்று நடிகை வித்யா பாலன் குறிப்பிட்டுள்ளார்.

எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மாவின் பேத்தி சிக்கில் மாலா சந்திரசேகரின் வழிகாட்டுதலுடன், அவரின் ஐகானிக் புடவைகள், அணிகலன்கள் மற்றும் ஒட்டுமொத்த அழகியலை மீண்டும் அனு மறு உருவாக்கம் செய்துள்ளார். எம்.எஸ். சுப்புலட்சுமியின் இந்த ஐகானிக் புடவைகளை முத்து செட்டியார் மற்றும் நல்லி சின்னசாமி செட்டி ஆகியோர் உருவாக்கி கொடுத்துள்ளனர்.

இது குறித்து ஆடை வடிவமைப்பாளர் அனு பார்த்தசாரதி கூறுகையில், "பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் பாணியை மீண்டும் உயிர்ப்பித்தது எனக்குக் கிடைத்த பாக்கியம். வித்யாபாலன் இதற்கு சரியான தேர்வாக இருந்தார். இந்த அஞ்சலி இப்போதிருக்கும் தலைமுறைக்கு அவருடைய பாரம்பரியத்தை எடுத்து சொல்லும் ஒரு வாய்ப்பாகக் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow