Aavani Month 2024 : கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி.. கடவுள்கள் அவதரித்த ஆவணி மாதம்.. என்னென்ன விஷேசம்?

Krishna Jayanthi & Vinayagar Chathurthi Viratham in Aavani Month 2024 : ஆவணி மாதத்தில் பல முக்கிய விஷேச நாட்கள் வருகின்றன. கிருஷ்ணர் அவதரித்த ஜென்மாஷ்டமியும், விநாயகர் அவதரித்த விநாயகர் சதுர்த்தியும் கொண்டாடப்படும் மாதம் ஆவணி மாதம்.

Aug 12, 2024 - 08:33
Aug 13, 2024 - 09:38
 0
Aavani Month 2024 : கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி.. கடவுள்கள் அவதரித்த ஆவணி மாதம்.. என்னென்ன விஷேசம்?
Krishna Jayanthi & Vinayagar Chathurthi Viratham in Aavani Month 2024

Krishna Jayanthi & Vinayagar Chathurthi Viratham in Aavani Month 2024 : ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வார். இந்த மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, கல்கி ஜெயந்தி, வாமன ஜெயந்தி என கடவுள்களின் அவதார தினங்கள் கொண்டாடுகின்றனர். சித்தர்கள் அவதாரம் நிகழ்ந்ததும் இந்த மாதத்தில்தான். பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படும் இந்த மாதத்தில் எந்த நாளில் என்ன விஷேசம் வருகிறது என்று உங்கள் டைரியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். 

ஆவணி மாதம்(Aavani) விஷ்ணுபதி புண்ணியகாலமாகும் 1ஆம் தேதி விஷ்ணுபதி புண்ணியகாலம் ஆரம்பமாகிறது. சூரியன் சிம்ம ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார்.

ஆவணி 1 ஆகஸ்ட் 17 சனிக்கிழமை சனிப்பிரதோஷம்  சிவ ஆலயம் சென்று சிவன் நந்திக்கு அபிஷேக பொருட்கள் வாங்கித்தரலாம்.

ஆவணி 2 ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை நரசிம்ம சதுர்த்தசி சிவ ஆலயங்களில் நடராஜருக்கு அபிஷேகம்

ஆவணி 3 ஆகஸ்ட் 19 திங்கட்கிழமை பௌர்ணமி ஆவணி அவிட்டம்(Avani Avittam 2024) சிரவண விரதம் 

ஆவணி 4 ஆகஸ்ட் 20 செவ்வாய்க்கிழமை காயத்ரி ஜபம் 

ஆவணி 6 ஆகஸ்ட் 22 வியாழக்கிழமை  மகா சங்கடஹர சதுர்த்தி விரதம் - வாஸ்து நாள் வீடு கட்ட வாஸ்து பகவானை வணங்கி தொடங்கலாம்.

ஆவணி 8 ஆகஸ்ட் 24 சனிக்கிழமை ஆவணி முழக்கம் 

ஆவணி 9 ஆகஸ்ட் 25 ஞாயிற்றுக்கிழமை பானு சப்தமி அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சூரிய பகவானை வணங்கலாம்.

ஆவணி 10 ஆகஸ்ட் ஆகஸ்ட் 26 திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி(Krishna Jayanthi 2024) கோகுலாஷ்டமி விரதம். கிருஷ்ணரை வணங்க சகல நன்மைகளும் தேடி வரும்.

ஆவணி 11 ஆகஸ்ட் 27 செவ்வாய்க்கிழமை ஸ்ரீ சனி ஜெயந்தி

ஆவணி 12 ஆகஸ்ட் 28 புதன்கிழமை ஸ்ரீ சட்டமுனி சித்தர் ஜெயந்தி

ஆவணி 13 ஆகஸ்ட் 29 வியாழக்கிழமை காமிகா ஏகாதசி ஜீவ வார ஏகாதசி

ஆவணி 15 ஆகஸ்ட் 31 சனிக்கிழமை சனிப்பிரதோஷம் 

ஆவணி 17 செப்டம்பர் 2 திங்கட்கிழமை  சர்வ அமாவாசை சோமாவதி அமாவாசை முன்னோர்களுக்கு தர்பணம் தர சிறந்த நாள். 

ஆவணி 19 செப்டம்பர் 4 புதன்கிழமை சந்திர தரிசனம் 

ஆவணி 20 செப்டம்பர் 5 வியாழக்கிழமை கல்கி ஜெயந்தி, செவ்வாய் பகவான் ஜெயந்தி

ஆவணி 22 செப்டம்பர் 7 சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி(Vinayagar Chaturthi) கணபதி விரதம்

ஆவணி 23 செப்டம்பர் 8 ஞாயிற்றுக்கிழமை ரிஷி பஞ்சமி விரதம் 

ஆவணி 24 செப்டம்பர் 9 திங்கட்கிழமை சஷ்டி விரதம், குமார சஷ்டி சூரிய சஷ்டி விரதம்

ஆவணி 27 செப்டம்பர் 12 வியாழக்கிழமை ஆவணி மூலம் கேதாரேஸ்வர விரதம் ஆரம்பம் 

ஆவணி 29 செப்டம்பர் 14 சனிக்கிழமை விஷ்ணு பரிவர்த்தன ஏகாதசி, பத்மநாபா ஏகாதசி 

ஆவணி 30 செப்டம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை திருவோணம், வாமன ஜெயந்தி, ஸ்ரீஹயக்கிரீவ ஜெயந்தி, குரு ஜெயந்தி

ஆவணி 31 செப்டம்பர் 16 திங்கட்கிழமை  நரசிம்ம சதுர்த்தசி, ஸ்ரீ நடராஜர் அபிஷேகம் 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow