Paris Olympics 2024 : கோலாகலமாக முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் 2024.. இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்?
Paris Olympics 2024 : கோலாகலமாக நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024, இன்று அதிகாலை 12.30 மணிக்கு (இந்திய நேரப்படி) எரிந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டதோடு நிறைவடைந்தது.
Paris Olympics 2024 : 33-வது ஒலிம்பிக் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கடந்த மாதம் 24ஆம் தேதி தொடங்கி நேற்று [ஆகஸ்ட் 11-ம் தேதி வரை கோலகமாக நடைபெற்றது. இந்த ஒலிம்பிக் போட்டியில், சுமார் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வந்தனர்.
ஒலிம்பில் போட்டிகள் நேற்று நிறைவடைந்த நிலையில், 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் என மொத்தம் 126 பந்தகங்களை வென்று, அதிக பதக்கங்கள் வென்ற நாடாக அமெரிக்கா ஐக்கிய குடியரசு முதலிடத்தில் உள்ளது. 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் என 91 பதக்கங்களை வென்று சீனா மக்கள் குடியரசு இரண்டவது இடத்திலும், 20 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என ஜப்பான் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
அதேபோல 18 தங்கம், 19 வெள்ளி, 16 வெண்கலம் என 53 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 4ஆவது இடத்திலும், போட்டியை நடத்திய நாடான ஃபிரான்ஸ், 16 தங்கம், 26 வெள்ளி, 22 வெண்கலம் 64 பதக்கங்களுடன் 5ஆவது இடத்தையும் பிடித்தன. மொத்தம் 206 நாடுகள் பங்கேற்ற நிலையில், 84 நாடுகள் பதக்கப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்த பகக்கப் பட்டியலில் இந்தியாவுக்கு 71-ஆவது இடம் கிடைத்தது. ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் [Manu Bhaker] 10 மீ. ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்று பதக்க வேட்டையை தொடங்கி வைத்தார். மேலும், பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றார்.
அதேபோல், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர்களுக்கான போட்டியில், மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் இணை வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது. துப்பாக்கி சுடுதலில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவு தகுதிச்சுற்று போட்டியில், இந்தியாவின் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தார்.
தொடர்ந்து ஆண்கள் ஹாக்கிப் போட்டியில், ஸ்பெயினை வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. இப்போட்டியுடன் இந்திய அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஸ் ஹாக்கியில் இருந்து ஓய்வுப் பெறுகிறார்.
அதேபோல, ஆண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார். ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெண்கலப் பதக்கம் வென்றார்.
வினேஷ் போகத்:
50 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் இறுதிப்போட்டி முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றார். 50 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் பங்கேற்க இருந்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அவருக்கு தங்கம் கிடைக்கும். தோற்றாலும் வெள்ளி கிடைக்கும் என்ற பதக்க வாய்ப்பு அவருக்கு உருவாகி இருந்தது.
இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இருந்து வினேஷ் போகத் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத், 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் அவரை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தகுதி நீக்கம் செய்தது. இந்நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் சார்பில் மனு தொடரப்பட்டுள்ளது.
போட்டியின் கடைசி நாளான நேற்றைய தினத்திலும் சில போட்டிகள் நடைபெற்றன. போட்டிகள் முடிவடைந்ததும் இன்று அதிகாலை 12.30 மணிக்கு (இந்திய நேரப்படி) ஒலிம்பிக் போட்டி நிறைவு விழா(Paris Olympics 2024 Closing Ceremony) கோலாகலமாக நடந்தேறியது. விழாவின் கடைசி நிகழச்சியாக, எரிந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டு பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
What's Your Reaction?