செப்டம்பர் 2024 ஏகாதசி: செல்வம் செழிக்க வாழ்வதற்கு உதவும் விரதம்!
நடப்பாண்டின் செப்டம்பர் மாதம் வரும் ஏகாதசிகளின் தேதி, நேரம், சிறப்புகள், விரதம் மற்றும் வழிபாடு குறித்து கீழே பார்க்கலாம்.
பெருமாளின் அருளைப் பெறுவதற்கும் முன் ஜென்மங்களிலும் இந்த ஜென்மத்திலும் செய்த பாவங்களில் இருந்து விடுபடுவதற்கும் கடைபிடிக்க வேண்டிய மிக உன்னதமான விரதம் ஏகாதசி விரதம் ஆகும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு ஏகாதசிகள் வருவதுண்டு. அதாவது அமாவாசை மற்றும் பெளர்ணமிக்கு பிறகு வரும் 11 வது திதி ஏகாதசி ஆகும். ஒரு வருடத்தில் வரும் 24 ஏகாதசிகளுக்கும் தனியான பெயர்களும், கதைகளும், சிறப்புகளும், வெவ்வேறு விதமான விரத பலன்களும் உண்டு. அவற்றில் செப்டம்பர் மாதத்தில் வரும் ஏகாதசிகள் மிக முக்கியமானவைகளாகும்.
அதன்படி இந்த மாதத்தில் (செப்டம்பர்) இரண்டு ஏகாதசி தினங்கள் வருகிறது. செப்டம்பர் மாதம் என்பது தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் மாதமாகும். இந்த மாதத்தின் தேய்பிறையில் வரும் ஏகாதசி, புரட்டாசி மாதத்தில் வரக் கூடிய ஏகாதசி ஆகும். புரட்டாசி மாதம் பெருமாளை வழிபடுவதற்கு மிகவும் ஏற்ற மாதமாகும். இந்த மாதத்தில் ஏகாதசியும் இணைந்து வருவதால் இரட்டிப்பு பலன் தரும் விரத நாளாக இந்த நாள் அமையும் என ஆன்மிக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
செப்டம்பர் 2024 ஏகாதசி தேதி:
இந்த மாதம் வளர்பிறை ஏகாதசி 14ம் தேதியும் தேய்பிறை ஏகாதசி 28ம் தேதியும் வருகிறது. வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு பரிவர்தினி ஏகாதசி என்ற பெயர். செப்டம்பர் 13ம் தேதி மாலை 06.19 மணிக்கு துவங்கி, செப்டம்பர் 14ம் தேதி மாலை 05.05 வரை ஏகாதசி திதி உள்ளது. அதேபோல தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு இந்திர ஏகாதசி என்று பெயர். செப்டம்பர் 27ம் தேதி மாலை 05.35 மணி துவங்கி, செப்டம்பர் 28ம் தேதி மாலை 06.09 மணி வரை ஏகாதசி திதி உள்ளது.
மேலும் படிக்க: ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு.. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க
ஏகாதசி விரதம்:
இந்த மாதம் வரும் இரண்டு ஏகாதசிகளுமே சனிக்கிழமையில் வருவது மிகவும் சிறப்பாகும். இந்த நாட்களில் பெருமாளை வேண்டி விரதம் இருந்து, துவாதசி திதியில் விரதத்தை நிறைவு செய்வதால் மகிழ்ச்சியான, செல்வ வளம் மிக்க, அனைத்து வசதிகளுடன் கூடிய நிறைவான வாழ்க்கை கிடைக்கும். வாழும் போது கிடைக்கும் சுக நலன்கள் மட்டுமின்றி, அவர்கள் இறந்த பிறகும் நேரடியாக வைகுண்டத்திற்கு சென்று, மகாவிஷ்ணுவின் திருவடிகளை அடையும் பாக்கியத்தை பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
What's Your Reaction?