Aadhaar Card Update : ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு.. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க

Aadhaar Card Renewal Deadline Extended By UIDAI : ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 14ஆம் தேதி உடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் 3 மாத கால அவகாசத்துடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Sep 12, 2024 - 13:22
Sep 12, 2024 - 13:56
 0
Aadhaar Card Update : ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு.. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க
Aadhaar Card Renewal Deadline Extended By UIDAI

Aadhaar Card Renewal Deadline Extended By UIDAI : ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 3 மாதம் நீட்டித்து ஆதார் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான அவகாசம் நாளை மறுநாள் முடிய இருந்த நிலையில் மேலும் 3 மாத காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்டு, இந்திய மக்களின் அடையாளமாக இருக்கிறது. வங்கி கணக்கு தொடங்குவது முதல் பான் கார்டு, டிரைவிங் லைசென்சு உள்ளிட்ட அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஆதார் கார்டு அவசியமாகும். ஆதார் தொடர்பான மோசடிகளைத் தடுக்க, 10 வருடங்களாக ஆதார் வைத்திருப்பவர்களை, சமீபத்திய தகவலுடன் விவரங்களைப் புதுப்பிக்குமாறு UIDAI வலியுறுத்தி உள்ளது.

மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்டு முக்கியம் ஆகி உள்ளது. இந்த நிலையில்தான் ஒருவேளை ஆதார் அட்டையில் மாற்றங்களை செய்ய மத்திய அரசு இலவச ஆன்லைன் வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. 10 ஆண்டுகளாக ஆதார் கார்டை அப்டேட் செய்யாதவர்கள், விலாசம் மாறியவர்கள், ஆதார் கார்டில் தவறான விவரங்கள் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும். புதுப்பிப்பு என்பது பலரும் தங்களது முகவரி மற்றும் செல்போன் எண்களை மாற்றி இருப்பார்கள். முகங்கள் மாறி இருக்கும்.

ஆதாரில் பழைய புகைப்படங்கள் இருக்கும். அதேபோல் கைரேகை மாறி இருந்தால், அவர்களால் ரேஷன் கடை, வங்கிகள் மற்றும் சிம்கார்டு வாங்கும் இடங்களில் சுயசான்று செய்வதில் பிரச்சினை இருக்கும். இந்த பிரச்சினைகளை தவிர்க்க தான் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் ஆணையம் கூறுகிறது.

தனிப்பட்ட கணக்குகளை பயன்படுத்தி இந்த ஆண்டு டிசம்பர் 14ஆம்(Aadhaar Card Renewal Last Date) தேதி வரை விவரங்களைத் திருத்தலாம். இ சேவை மையங்களில் கூட்டம் அலைமோதிய நிலையில் தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.myAadhaar பக்கம் மூலம் எளிதாக இவர்கள் விலாசத்தை மாற்றலாம்.மை ஆதார் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை வைத்து லாகின் செய்து, அதிலேயே பணம் செலுத்தாமல் விவரங்களை மாற்ற முடியும் முடியும்.

10 ஆண்டுகளாக ஆதார் கார்டை அப்டேட் செய்யாதவர்கள், விலாசம் மாறியவர்கள், ஆதார் கார்டில் தவறான விவரங்கள் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் டிசம்பர் 14ஆம் தேதிவரை இலவசமாக அப்டேட் செய்ய முடியும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow