Sri Thiruvalleswarar Temple : படி திருவலிதாயம் கோவில் குடமுழுக்கு கோலாகலம்.. பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம்

Sri Thiruvalleswarar Temple Kumbabisegam at Padi Thiruvalidayam : ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த திருவலிதாயம் சிவன் கோயிலில் குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவல்லீஸ்வரரை தரிசனம் செய்தனர்.

Aug 23, 2024 - 10:51
Aug 24, 2024 - 10:04
 0
Sri Thiruvalleswarar Temple : படி திருவலிதாயம் கோவில் குடமுழுக்கு கோலாகலம்.. பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம்
padi thiruvalleswarar temple kumbabisegam

Sri Thiruvalleswarar Temple Kumbabisegam at Padi Thiruvalidayam : சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாடியில் திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற, 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருவலிதாயம் சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலில் இன்று (ஆகஸ்ட் 23) மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.குரு ஸ்தலமாக போற்றப்படும் இந்த ஆலயத்தில் இன்று நடைபெற்ற கும்பாபிஷேக விழாவை பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.

தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம் பாடி திருவலிதாயம் திருத்தலம். தேவாரப்பாடல் பெற்ற 274 ஆலயங்களில் இது 254 வது தேவாரத்தலம்! தொண்டை நாட்டுத் தலங்களில் 21&வது தலம். திருவல்லீஸ்வரர், திருவலிதமுடையநாயனார் என்பது மூலவரின் திருநாமம். அம்பாளின் திருநாமம் & ஜெகதாம்பிகை. தல விருட்சமாக பாதிரியும், கொன்றை மரமும் இருக்க, ஸ்தல தீர்த்தமாக பரத்வாஜ தீர்த்தம் திகழ்கிறது. மூலவர் சுயம்பு மூர்த்தி. இவருக்கு மேல் உள்ள விமானம் கஜபிருஷ்ட அமைப்பு கொண்டது. அதாவது யானையின் பின்புறம் போல் அமைப்பு கொண்ட விமானம் அமைந்துள்ள தலங்களில் இதுவும் ஒன்று.

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்த இந்த அற்புதமான ஆலயத்தில் வலிதாயநாதர், வல்லீஸ்வரர் என்ற பெயர்களில் இறைவனும், தாயம்மை என்ற பெயரில் இறைவியும் அருள்பாலிக்கின்றனர்.திருவலிதாயம் திருத்தலத்தில் மேற்கு நோக்கியபடி தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறார் குரு பகவான். தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருள் வழங்கிக் கொண்டிருக்கிறார் குரு பகவான். நவ கிரகங்களில் தேவ குருவாக போற்றப்படும் குருபகவான் இங்கு எப்படி வந்தார் என்பதே புராண கதைதான்.

ஓர் தவறு செய்துவிட்டு, தன் சகோதரரின் மனைவியான மேனகையிடம் சாபம் வாங்கி நொந்துபோனார் குரு பகவான். சாபத்தில் இருந்து விமோசனம் பெறுவதற்காக, சிவனாரின் உத்தரவுக்கு இணங்க, இந்தத் தலத்துக்கு வந்து சிவனாரை நோக்கி கடும் தவமிருந்தார் குரு பகவான். சிவனருளைப் பெற்றார் குருபகவான். நீ.. திருவலிதாயம் திருத்தலம் சென்று என்னை நினைத்து தவம் செய்து வா உனக்கான பலன் கிடைக்கும்" என்றார் சிவபெருமான் அதன்படியே இத்திருத்தலம் வந்த குரு பகவான் இங்கேயே தங்கி ஆலயத்துக்கு வருவோருக்கெல்லாம் அருள்பாலித்து வருகிறார். திருஞானசம்பந்தர், வள்ளலார், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் ஆகியோர் இங்கு வந்து பாடிப் போற்றியுள்ளனர்.

பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த ஆலயத்தின் குடமுழுக்கு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு யாக சாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்றது.இந்த ஆலயத்தின் கோவில் குடமுழுக்கு இன்று காலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்த குழுமுழுக்கு விழாவில் பங்கேற்றார் பல்லாயிரக்கணக்கானோர் குடமுழுக்கு விழாவில் பங்கேற்று கோபுர தரிசனம் செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow