Brahmapureeswarar Temple : தலையெழுத்தை மாற்றும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் - ஜாதகம் வைத்து வணங்கினால் நிகழும் அதிசயம்

Tirupathur Brahmapureeswarar Temple Dharsan Special : வாழ்வில், உங்கள் நட்சத்திர நாளிலோ, வியாழக் கிழமையிலோ, அல்லது ஏதேனும் ஒருநாளிலோ… திருப்பட்டூர் திருத்தலத்துக்கு சென்று வாருங்கள். அதையடுத்து மிக நல்ல நல்ல திருப்பங்களை வாழ்வில் பெறுவீர்கள் என்பது சத்தியம்!

Aug 22, 2024 - 15:53
Aug 22, 2024 - 16:55
 0
Brahmapureeswarar Temple : தலையெழுத்தை மாற்றும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் - ஜாதகம் வைத்து வணங்கினால் நிகழும் அதிசயம்
Tirupathur Brahmapureeswarar Temple Dharsan Special

Tirupathur Brahmapureeswarar Temple Dharsan Special : படைப்புக்கடவுள் பிரம்மாவை, பிரமாண்ட வடிவில் அருள்பாலிக்கும் பிரம்மாவை, பத்ம பீடம் என்று சொல்லப்படும் தாமரை பீடத்தில் இருந்தபடி கம்பீரமாகக் காட்சி தரும் பிரம்மாவைப் பார்த்தால் பரவசமாகிவிடுவோம். நமக்கு நடக்கும் செயல்கள் அனைத்துமே நம் தலைவிதிபடி தான் நடக்கும் என கூறுவார்கள். அப்படி நம் தலையெழுத்தையும் மாற்றி அமைக்கக்கூடிய பிரம்மா கோவில் அமைந்துள்ள இடம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி பார்க்கலாம்.

படைக்கும் சக்தி கொண்ட பிரம்மாவிற்கு ஒரு சில இடங்களில் தான் தனி சன்னதி அமைக்கப்பட்டு கோவில் இருக்கும். திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகில் சிறுகனூர் என்ற ஊரிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் திருப்பட்டூர்   அமைந்துள்ளது. இங்குதான் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

கர்வம்தான், பிரம்மாவுக்கு எதிரியானது. அலட்டலுடன் பேசிய பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்தார் சிவபெருமான். வேலையையும் அதாவது படைப்புத் தொழிலையும் பிடுங்கிக் கொண்டார். கலங்கிப் போனார் பிரம்மா. கர்வம் தொலைத்தேன். மன்னியுங்கள் என்றார். அம்பாளும், பிரம்மாவை மன்னிக்கச் சொல்லி சிபாரிசு செய்தாள். அம்பாளின் அறிவுரைப்படி, 12 தலங்களில் உள்ள சிவலிங்கத் திருமேனிகளை மானசீகமாக இங்கே ஸ்தாபித்து, வழிபட்டார். சிவ பெருமானும் சாப விமோசனம் தந்தருளினார். கூடவே பிரம்மாவிடம், இந்தத் தலத்துக்கு வரும் அடியவர்களின் தலையெழுத்தை திருத்தி, நல்லவிதமாக எழுது என உத்தரவிட்டார். அதன்படி இன்றளவும் அங்கேயே இருந்து கொண்டு, வருவோருக்கெல்லாம் நல்லவிதமாக தலையெழுத்தை திருத்தி எழுதி அருள்கிறார் பிரம்மா.

திருச்சி  சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியில் இருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் உள்ளது சிறுகனூர். இங்கிருந்து உள்ளே கிளை பிரிந்து செல்லும் சாலையில், 5 கி.மீ. பயணித்தால், திருப்பட்டூர் எனும் அற்புதமான தலத்தை அடையலாம். 

பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் முன்பே காசி விஸ்வநாதர் ஆலயத்திற்குச் சென்று பிறகுதான் பிரம்மா கோவிலுக்கு செல்ல வேண்டும். காசி விஸ்வநாதர் கோவில் சென்று அங்கு உள்ள வியக்ரபாரதர் ஜீவா சமாதியை வணங்கி சிறிது தியானம் செய்து பின்பு சிவன் மற்றும் பார்வதியை தரிசனம் செய்து பின்பு அங்கு இருந்து பிரம்மபுரீஸ்வரர் கோவில் வர வேண்டும் .

அதன் பின்பு சிவன் கோவில் சென்று முதலில் சிவனை மனம் உருகி பிரார்த்தனை செய்ய வேண்டும் அதன் பிறகு பிரம்மனுக்கு அர்ச்சனை தட்டு வாங்கி அதன் உடன் உங்களது ஜாதகத்தையும் சேர்த்து அய்யர் இடம் கொடுத்து உங்கள் பெயர் சொல்லி அர்ச்சனை செய்து தரும் படி கொடுக்கவும் அவர் உங்கள் ஜாதகத்தை பிரம்மன் மடியில் வைத்து அர்ச்சனை செய்து பின்பு உங்களிடம் கொடுப்பார்.

 அர்ச்சனை செய்யும் போது உங்கள் குறைகள் எல்லாம் சொல்லி பிரம்மனை மனதார வேண்டி கொள்ளுங்கள் பின்பு அங்கு இருக்கும் பதஞ்சலி முனிவர் உள்ள ஜீவ சமாதி சென்று மனம் உருக பிரார்த்தனை செய்து கொஞ்ச நேரம் தியானம் செய்து பின்பு அங்கு உள்ள அம்பாள் வழிபட்டு பின்பு அங்கு உள்ள சிவலிங்கம் எல்லாவற்றையும் கும்பிட்டு வரவும் . அப்புறம் உங்கள் குறைகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம்மாக குறையும் அதை நீங்கள் கண்டிப்பாக உணரலாம்.  

இங்கு பிரம்மன் வழிபட்டதால் சிவனை பிரம்மபுரீஸ்வரர் என்றும் அம்பாளை பிரம்ம  நாயகி என்றும் கூறுவர். பிரம்மா பிரபாண்டமாக மஞ்சள் காப்புடன் தனி சன்னதியில் அமைந்து காட்சி தருகிறார். பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்திற்கு சென்றதும் முதலில் ஈசனை வழிபட்டு பிறகு பிரம்மாவை வழிபடவும் ஏனென்றால் பிரம்மா அங்கு சாப விமோசனம் பெற்ற ஸ்தலம். நம் ஜாதகத்தை எடுத்துச் சென்றாள் பிரம்மாவின் பாதத்தில் வைத்து பூஜை செய்து கொடுப்பார்கள்.

பிரம்மாவிற்கு  பூஜைக்கு மஞ்சள் வாங்கி கொடுப்பது சிறப்பாக கருதப்படுகிறது.அதன் பிறகு பதஞ்சலி முனிவரின் மணிமண்டபத்திற்குச் சென்று தியானம் செய்யவும், பிறகு அம்பாளை  தரிசிக்கவும்,கடைசியாக ஆயுளை  மாற்றும் சக்தி கொண்ட வரதராஜ பெருமாள் ஆலயத்திற்கும் சென்று வழிபடவும்.

பிரம்மன் படைக்கும் தொழிலை கொண்டுள்ளதால் இங்கு குழந்தை பாக்கியம் வேண்டியவர்களும் வந்து வழிபாடு செய்வது மிகச் சிறப்பாகும். தொழிலில் பிரச்சனை,  கடன்,  திருமணம் விரைவில் நிறைவேற, புத்திர பாக்கியம் உண்டாக, கணவன் மனைவி பிரிவினைகள் நீங்கி ஒன்று சேர,  நல்ல வேலை கிடைக்க மற்றும் உத்தியோக உயர்வு, வீடு மனை கிடைக்க, குழந்தைகள் நன்றாக படிக்க,  சகல செல்வங்களும் சேர  அருள்மிகு திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் சென்று வழிபடுங்கள் உங்கள் பிரச்சனை எல்லாம் கண்டிப்பாக தீரும் .

இங்கு வந்து தரிசித்தால், 12 தலங்களைத் தரிசித்த புண்ணியம். குரு பிரம்மாவின் சந்நிதியில் நின்றபடி, பிரம்மாவை தரிசிக்கலாம். அப்படியே ஞானகுரு ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் வணங்கலாம். கொஞ்சம் திரும்பிப் பார்த்தால், தூணில் உள்ள ஸ்ரீசனீஸ்வரரையும் பார்த்து பிரார்த்தித்துக் கொள்ளலாம். அதேபோல், பிரதோஷ தரிசனம் பெரும் புண்ணியம். சைவத்தில் சிவனாருக்கும் வைணவத்தில் ஸ்ரீநரசிம்மருக்கும் உகந்த அற்புதமான நாளில், பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் உள்ள நந்திக்கு அருகில் உள்ள தூணில், ஸ்ரீநரசிம்மரின் சிற்பத்தையும் தரிசிக்கலாம்.

வியாழன் அன்று தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இங்கு திருவாதிரை, புனர்பூசம், சதயம் போன்ற நட்சத்திரத்தன்று செல்வது நல்ல பலன்களை கொடுக்கும் என நம்பப்படுகிறது ,அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்று சென்று வழிபடலாம். வியாழக்கிழமைகளில் செல்வது மிகச் சிறப்பாகும். கோவில் நடை திறக்கும் நேரம் காலை 7 மணி முதல் முற்பகல் 12 மாலை வரை தரிசிக்கலாம். மாலை 4  மணி முதல் இரவு 8  மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow