விளையாட்டு

Cristiano Ronaldo : யூடியூப் சேனல் தொடங்கினார் ரொனால்டோ.. 1 மணி நேரத்தில் 1 மில்லியன் சப்ஸ்கிரைப் பெற்று சாதனை!

Cristiano Ronaldo YouTube Channel : விளையாட்டு வீரர்களில் சமூகவலைத்தளங்களில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு மட்டும் ரூ.26.7 கோடி வருமானம் பார்த்து வருகிறார். புதிய யூடியூப் சேனலில் ரொனால்டோ இதுவரை 19 வீடியோக்களை போட்டுள்ளார். இதில் ஒவ்வொரு வீடியோவும் 1.5 மில்லியன் பார்வைகளுக்கு மேல் (views) பெற்றுள்ளது.

Cristiano Ronaldo : யூடியூப் சேனல் தொடங்கினார் ரொனால்டோ.. 1 மணி நேரத்தில் 1 மில்லியன் சப்ஸ்கிரைப் பெற்று சாதனை!
Footballer Cristiano Ronaldo YouTube Channel

Cristiano Ronaldo YouTube Channel : உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் அணிக்காக கால்பந்து போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்த ரொனால்டோ, தற்போது சவுதி அரேபியா லீக் தொடரில் அல் நசர் அணிக்காக விளையாடி வருகிறார். 39 வயதான ரொனால்டோ விளையாட்டில் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறார்.

அதாவது இவர் எக்ஸில் 112.5 மில்லியன் ஃபாலோயர்களும், பேஸ்புக்கில் 170 மில்லியன் ஃபாலோயர்களும்,  இன்ஸ்டாகிராமில் 636 மில்லியன் ஃபாலோயர்களும் உள்ளனர். இந்நிலையில், கிறிஸ்டியானோ ரொனால்டோ, 'யு ஆர் கிறிஸ்டியானோ' (UR Cristiano) என்ற பெயரில் புதிய யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த சேனலுக்கு அவரது ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

அதாவது யூடியூப் சேனல் தொடங்கிய 24 மணி நேரத்துக்குள் 10 மில்லியன் பேர் 'யு ஆர் கிறிஸ்டியானோ' யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் (subscribe) செய்துள்ளனர். இதன்மூலம் மிக விரைவில் அதிக சப்ஸ்கிரைப் பெற்ற hamster kombat என்ற யூடியூப் சேனலின் சாதனையை ரொனால்டோ முறியடித்துள்ளார். அதாவது  hamster kombat யூடியூப் சேனல் தொடங்கிய 7 நாளில் 10 மில்லியன் சப்ஸ்கிரைப் பெற்றுள்ளது. 

ஆனால் ரொனால்டோவின் UR Cristiano சேனல் 24 மணி நேரத்துக்குள் 10 மில்லியன் சப்ஸ்கிரைகளை கடந்துள்ளது. அதுவும் சேனல் தொடங்கிய 1 மணி நேரத்துக்குள் 1 மில்லியன் சப்ஸ்கிரைப் பெற்று கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை படைத்துள்ளார். இதுவரை 16.4 மில்லியன் பேர் ரொனால்டோவின் யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். 

விளையாட்டு வீரர்களில் சமூகவலைத்தளங்களில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு மட்டும் ரூ.26.7 கோடி வருமானம் பார்த்து வருகிறார். புதிய யூடியூப் சேனலில் ரொனால்டோ இதுவரை 19 வீடியோக்களை போட்டுள்ளார். இதில் ஒவ்வொரு வீடியோவும் 1.5  மில்லியன் பார்வைகளுக்கு மேல் (views) பெற்றுள்ளது. 

யூடியூப் சேனல் தொடங்கி ரொனால்டோ போட்ட முதல் வீடியோவை மட்டும் 10 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர். ரொனால்டோ மனைவி, மகன் குறித்த வீடியோக்களை பதிவு செய்துள்ளார். மேலும் கால்பந்து போட்டி குறித்தும், விளையாட்டில் தான் சந்தித்த சுவாரஸ்ய அனுபவங்கள் குறித்தும், எதிர்கொண்ட நெருக்கடி குறித்தும் ரொனால்டோ தனது யூடியூப் சேனலில் பகிர்ந்து கொள்ள உள்ளார்.

இது தவிர தனக்கு பிடித்த மற்ற விஷயங்கள், கல்வி, தொழில் ஆகியவை குறித்தும் ரொனால்டோ விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே ரொனால்டோ, ஃபிட்னஸ் செயலி, சிஆர்7 பிராண்ட் உள்ளிட்ட தொழிலை செய்து வருகிறார். வாசனை திரவியம், ஆடை விற்பனை, ஷூ விற்பனை உள்ளிட்ட ஏராளமான தொழில்களில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.