Government Job : மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? ஜாதகம் சொல்வதென்ன?

Mesha Lagnam will get Government Job : மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் என்ன தொழில் செய்யலாம் என்ன தொழில் செய்யக்கூடாது என்று வேத ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது. அரசு பதவி கிடைக்குமா? அதிர்ஷ்டம் மூலம் செல்வம் சேருமா? மேஷ லக்ன காரர்களுக்கு என்ன வேலை கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Aug 22, 2024 - 14:53
Aug 22, 2024 - 17:32
 0
Government Job : மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? ஜாதகம் சொல்வதென்ன?
mesham lagna can you get a government job what does horoscope say

Mesha Lagnam will get Government Job : உத்யோகம் புருஷ லட்சணம் என்று சொல்வார்கள். ஒருவர் என்ன தொழில் செய்ய வேண்டும் என்ன தொழில் செய்யக்கூடாது என்று அவரவர் பிறந்த ஜாதகமும் லக்னமும் நிர்ணயிக்கிறது. மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அரசு பதவி கிடைக்குமா? அதிர்ஷ்டம் மூலம் செல்வம் சேருமா? மேஷ லக்ன(Mesha Lagnam) காரர்களுக்கு என்ன தொழில் செய்யலாம் என்ன தொழில் செய்யக்கூடாது என்று பார்க்கலாம். 

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பத்தாம் அதிபதி தொழில் காரகன் சனி, லாப ஸ்தான அதிபதியும் சனிதான். தொழில் மற்றும் வருமான காரகனாக சனி பகவான் இருப்பதால் பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன், புதன், வியாழன் ஆகிய கோள்களின் சேர்க்கை பத்தாம் வீட்டில் ஏற்பட்டால், அந்த ராசிக்காரர் சுய தொழில் செய்து அதன் மூலம் நிறைய லாபம் சம்பாதிப்பார்.

மேஷ லக்கினத்தில் பிறந்தவர்கள், உடலுழைப்பு சார்ந்த, வேர்வை சிந்தும் தொழிலை செய்வார்கள்.  அத்தகைய தொழில் செய்வோர் தமது வாழ்வில் பொருளாதார வெற்றியை உறுதியாக பெறுவர். பொதுவாக இவர்கள் இரும்பு, நிலம், இயந்திரங்கள், வண்டிகள், பழைய பொருட்களை வாங்கி விற்றல் போன்ற தொழில்களைச் செய்தால் நல்ல வருமானமும் லாபமும் கிடைக்கும். 

லக்கனத்துடன், ராசி லக்ன அதிபதியான செவ்வாய் இணைந்து வலுப்பெற்று இருந்தால், அவர்கள் ராணுவம், காவல்துறை, தீயணைப்புத்துறை,- போக்குவரத்து துறை போன்றவற்றில் உயர் பதவிகள் கிடைக்கும். லக்கனத்துடன் புதன் அல்லது சுக்கிரன் போன்ற கிரகங்கள் சேர்ந்து இருந்தால், ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் மேற்கொண்டு, பல நூறு பேரை வேலைக்கு அமர்த்தி, பெரிய அளவிலான தொழில் செய்வார். 

செவ்வாயும் சூரியனும் சேர்ந்து லக்னத்துடன் அமைந்து இருப்பவர்கள் அரசுத்துறைகளில் பெரிய பதவி பெற்று இருப்பர். சந்திரன் அல்லது ராகு அல்லது கேது இந்த அமைப்புடன் சேர்ந்து இருந்தால், அத்தகைய ராசிக்காரர்கள், மருத்துவத் துறையில் சிறந்து விளங்குவார்கள்.

லக்கனத்துடன், குருபகவான்  சேர்ந்து வலுப்பெற்று இருந்தால், அத்தகைய அமைப்பு கொண்டோர், கடல்கடந்த தொழில் அமைப்புகள் பெறுவர்.  அவர்கள் சட்ட ஆலோசகர், நிதித்துறையின் ஆலோசகர், பாதுகாப்பு ஆலோசகர் என பிறருக்கு அறிவுரை வழங்கும் அளவிற்கான சிறந்த வேலையில் இருப்பார்கள். 

லக்கனத்துடன், குரு மற்றும் புதன் கிரகங்கள் சேர்ந்து வலுப்பெற்று இருந்தால், அத்தகைய ராசிக்காரர்கள், கல்லூரி பேராசிரியர், பள்ளி தலைமை ஆசிரியர், வங்கிப் பணியில் உயர்ந்த பொறுப்பு என சிறந்து விளங்குவர். 

செவ்வாய் மற்றும் சூரியனுடன், வியாழன் சேர்ந்து இருந்தால், உயர்ந்த பதவிகளை தனியார் அல்லது அரசு துறைகளில் பெற்றிருப்பர்.
பிறந்த ஜாதகத்தில் சனியுடன் ராகு அல்லது கேது ஒரே வீட்டில் இருந்தால், அத்தகைய ராசிக்காரர்கள், நிலையான வருமானம் என்று வாழ்வில் சிரமப்படுவார்கள்.

மேஷ லக்கினத்தில் பிறந்தவர்கள், எந்தச் சூழ்நிலையிலும், பங்குச் சந்தை, ஊக வணிகம், பரிசுச் சீட்டு போன்றவற்றில் முதலீடு செய்யக் கூடாது. அதாவது நிலையற்ற தன்மை கொண்ட எந்த தொழிலை அல்லது முதலீட்டை மேற்கொள்ள கூடாது. அதாவது, மேஷ இலக்னத்தில் பிறந்தவர்கள்  நிலையான மற்றும் தெளிவான முதலீடுகளை மட்டுமே செய்ய வேண்டும். ஏமாற்றுக்காரர்கள் சொல்வதைக் கேட்டு சம்பாதித்த பணத்தை நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து விடாதீர்கள். பணம் திரும்ப கிடைக்கவே கிடைக்காது கவனம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow