TVK Vijay Astrology : தவெக தலைவர் விஜய்க்கு முதல்வர் நாற்காலியில் அமரும் யோகம் இருக்கா? - ஜாதக கட்டங்கள் சொல்வதென்ன?

TVK Vijay Astrology Predictions : சினிமா நடிகர்களாக இருந்து அரசியலில் வெற்றி பெற்றவர்கள் ஒரு சிலர்தான். எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் தவிர யாராலும் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் ஜாதகத்தில் உள்ள யோகங்கள் அவரை முதல்வர் நாற்காலியில் அமர வைக்குமா பார்க்கலாம்.

Aug 22, 2024 - 14:33
Aug 22, 2024 - 18:13
 0
TVK Vijay Astrology : தவெக தலைவர் விஜய்க்கு முதல்வர் நாற்காலியில் அமரும் யோகம் இருக்கா? - ஜாதக கட்டங்கள் சொல்வதென்ன?
vijay tvk flag function

TVK Vijay Astrology Predictions : குரு மங்கள யோகத்தோடு குருவின் ஆசி நிறைந்த வியாழக்கிழமை நாளில் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை அறிமுகம் செய்துள்ளார் நடிகர் விஜய்.கையில் வாளேந்தி நின்ற விஜய் தனது நெஞ்சில் கை வைத்து தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்போம் என உளமாற உறுதிமொழி எடுத்துள்ளார்.  தமிழ்நாட்டில் நடிகர்கள் பலரும் அரசியல் கட்சி ஆரம்பித்தாலும் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் போல யாராலும் ஜெயிக்க முடியவில்லை. நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் பயணம் அவரை  முதல்வர் நாற்காலியில் அமர வைக்குமா என்று பார்க்கலாம். ஜாதகத்தில் உள்ள யோகங்கள் சொல்வதென்ன என்று பார்க்கலாம். 


விஜய் ஜாதகத்தில் உள்ள யோகங்கள்:

நடிகர் விஜய் கடக ராசியில் பூசம் நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார். அவரது ராசியில் சந்திரன் உடன் செவ்வாய் அமர்ந்திருக்கிறார். செவ்வாய் நீச்சம் பெற்றிருந்தாலும் ஆட்சி பெற்ற சந்திரன் உடன் அமர்ந்திருப்பதால் நீச்ச பங்க ராஜயோக அமைப்பு நடிகர் விஜய்க்கு உள்ளது. ராஜ கிரகங்களான சூரியன், சனி சேர்ந்திருப்பது அரச பதவியை தேடித்தரும். கன்னி லக்னத்திற்கு பத்தாம் வீட்டில்  சூரியன், சனி ஆட்சி பெற்ற புதனுடன் இணைந்திருக்கின்றனர். ரிஷப ராசியில் ஆட்சி பெற்ற சுக்கிரன் உடன் கேது இணைந்திருப்பதும் யோகமான அமைப்பு. கலைத்துறையில் பிரபலமான நடிகராக வருவதற்கு இதுவே காரணமாக அமைந்திருக்கிறது. 


அரசாளும் யோகம்: 

ஆசை இருக்கு தாசில் பண்ண அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க என்று ஊர் பக்கம் ஒரு பழமொழி சொல்வார்கள். பணக்காரனாகவோ, அரசியல் தலைவராகவோ, புகழ் பெற்ற நடிகராக வருவதற்கோ ஒரு யோகம் வேண்டும். ஜாதக கட்டத்தில் கிரகங்களின் கூட்டணி பார்வை, சேர்க்கை, இருக்கும் இடத்தைப் பொறுத்து அந்த யோகங்கள் அமையும்.  ஒரு கிரகம் நீச்சம் பெற்றிருந்து அந்த நீசம் பெற்ற கிரகம் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பது ஆட்சி பெற்று அல்லது உச்சம் பெற்ற கிரகத்துடன் நீசம் பெற்ற கிரகம் இணைந்திருப்பது நீச பங்க ராஜயோக அமைப்பை தரும். இந்த யோகம் பெற்றவர்களுக்கு திடீர் அரசாளும் யோகம் தேடி வரும்.


சுக்கிர திசை: 

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சனி நல்ல வலிமையோடு இருப்பது அவசியம். சனி பலமாக இருப்பதால் ஜன வசியம் இருக்கும். விஜய் ஜாதகப்படி 2014ஆம் ஆண்டு முதல் சுக்கிர திசை நடைபெறுகிறது. இப்போது சுக்கிர திசை ராகு புத்தி நடந்து கொண்டிருக்கிறது. தலைவா படத்தின் போது நிறைய நெருக்கடியை சந்தித்தார் விஜய். அரசியல் ரீதியான பிரச்சினைகளை சந்தித்தார். சுக்கிரதிசை ஆரம்பித்த பிறகுதான் தொடங்கியது. காரணம் சுக்கிரன் உடன் தடைகளை ஏற்படுத்தும் கேது இருக்கிறார். இவருடைய பல திரைப்படங்கள் சர்ச்சைகளை சந்தித்துதான் வெற்றி கிடைத்துள்ளது. 2026ஆம் ஆண்டு இவர் அரசியலில் அடி எடுத்து வைத்தாலும் தனது இருப்பை தக்க வைக்க முடியும். 


விஜய் பேச்சு:

அரசியல்வாதிகள் என்றாலே நன்றாக பேசத்தெரிந்திருக்க வேண்டும். நடிகர் விஜய் தற்போது நிறைய பேச ஆரம்பித்திருக்கிறார்.விஜய் ஜாதகத்தில் 10ஆம் வீட்டில் சனியுடன் புதன் சேர்ந்திருப்பதால் நகைச்சுவையாக பேசுவார். நடிகர் விஜய் ஜாதகத்தில் சந்திரன் கடக ராசியில் செவ்வாய் நீச்சம் பெற்றிருந்தாலும் நீச்ச பங்க ராஜயோகம். இவருக்கு பெண்களின் ஆசி தாய்மார்களின் ஆசி நிச்சயம் கிடைக்கும். மூன்றெழுத்து பற்றி பேசியிருப்பதால் எம்ஜிஆர் போல இவரை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். சனி பகவான் சுப வலிமையுடன் இருந்தால் தொண்டர்களின் ஆசி கிடைக்கும் என விஜய் ஜாதகம் சொல்கிறது.

முதல்வர் நாற்காலி கிடைக்குமா?:

நடிகர் விஜய் இளைய தளபதியாக இருந்து தளபதியாக மாறியிருக்கிறார். அவரது ராசி லக்னப்படி கும்ப ராசியில் சனி கோச்சாரத்தில் சஞ்சரிக்கும்  இந்த நேரத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியிருக்கிறார். நடிகர் விஜய் முழுமையான அரசியல்வாதியாக மாற இன்னும் 2 ஆண்டுகள் ஆகும். இப்போது விஜய்க்கு 50 வயதாகிறது. அவரது 52வது வயதில் இருந்து முழு நேர அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வார். 2031ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் என்று கணித்துள்ளனர் ஜோதிடர்கள். சினிமா வேறு அரசியல் களம் வேறு. நடிகர் விஜய்க்கு முதல்வர் நாற்காலி கிடைக்குமா? காலம்தான் பதில் சொல்லும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow