ஆனி மாத தேய்பிறை பிரதோஷம்.. அமாவாசை - சதுரகிரி போறீங்களா? இந்த செய்தி உங்களுக்குத்தான்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் செல்ல நான்கு நாட்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.மலைக்கோவிலில் பக்தர்கள் தங்க அனுமதியில்லை எனவும் வனத்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Jul 2, 2024 - 14:34
 0
ஆனி மாத தேய்பிறை பிரதோஷம்.. அமாவாசை - சதுரகிரி போறீங்களா? இந்த செய்தி உங்களுக்குத்தான்!
Sathuragiri Temple


மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் .இந்த கோவிலில் தற்பொழுதும் சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாக கூறப்படுவதாக சித்தர்களின் சொர்க்க பூமி என அழைக்கப்படுகிறது. மேலும் இந்த கோவிலுக்கு சென்றால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பதால் தமிழக மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். 

சதுரகிரி கோவிலுக்கு கடந்த காலங்களில் தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பக்தர்கள் வரை உயிரிழந்தனர். மாதந்தோறும் பிரதோஷம் , அமாவாசை , பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 8 நாட்கள் மட்டுமே மக்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆணி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு நாளை (ஜூலை 3) முதல் ஜூலை 7ஆம் தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது நீரோடைகளில் குளிக்க அனுமதி இல்லை மலைக்கோவிலில் பக்தர்கள் தங்க அனுமதியில்லை எனவும் வனத்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இரவு நேரங்களில் சதுரகிரியில் பக்தர்கள் தங்கி வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. பக்தர்கள் பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்த வகையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மலைப்பாதையில் உள்ள நீரோடைகளில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow