கோடீஸ்வர யோகம் தரும் பிரம்ம முகூர்த்தம்.. அதிகாலை எழுவதால் என்னென்ன நன்மைகள்

Brahma Muhurtham Wake Up Benefits in Tamil : உங்கள் வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த நினைத்த காரியங்களை நிறைவேற்ற, லட்சுமி கடாட்சம் நிறைந்த பிரம்ம முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்தலாம். பிரம்ம முகூர்த்த ரகசியத்தைப் பற்றி சாஸ்திரங்கள் என்ன கூறுகின்றன என்று பார்க்கலாம்.

Jul 22, 2024 - 12:15
Jul 22, 2024 - 13:11
 0
கோடீஸ்வர யோகம் தரும் பிரம்ம முகூர்த்தம்.. அதிகாலை எழுவதால் என்னென்ன நன்மைகள்
Brahma Muhurtham Wake Up Benefits in Tamil

Brahma Muhurtham Wake Up Benefits in Tamil : இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் இணைந்து மறுபிறவிதானே எனவே ஒவ்வொரு நாளும் காலையில் மறுபிறவி பெறுவதை சிருஷ்டி படைத்தல் என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா எனவே, இவரது பெயரால் விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள்! அதிகாலையில் எழுந்து தினசரி சூரிய நமஸ்காரம் செய்வதால் ஆரோக்கியம் அதிகரிப்பதோடு கோடீஸ்வர யோகமும் தேடி வரும் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. 

வெற்றி தரும் பிரம்ம முகூர்த்தம்: 

பிரம்ம முகூர்த்தம்(What is Brahma Muhurtham) என்பது, பிரம்மா எனப்படும் நான்முகனை குறிக்கின்றது. படைக்கும் தொழில் புரியும் நான்முகன் தன்னுடைய நாவில் சரஸ்வதி அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார். பிரம்ம முகூர்த்தத்தில் திதி வார நட்சத்திர யோக தோஷங்கள் கிடையாது. அந்த நேரம் எப்போதுமே சுபவேளைதான் இந்நேரத்தில் எழுந்து குளித்து இறை வழிபாட்டைச் செய்து நமது வேலையை செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான். எனவேதான் பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் மற்றும் வீடு கிரகபிரவேசம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது!


தோஷமில்லாத நேரம்: 

பிரம்ம முகூர்த்தத்தில் திதி வார நட்சத்திர யோக தோஷங்கள் கிடையாது. அந்த நேரம் எப்போதுமே சுபவேளைதான் இந்நேரத்தில் எழுந்து குளித்து இறை வழிபாட்டைச் செய்து நமது வேலையை செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான். பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம், சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது ஐதீகம்! கோடீஸ்வரர்களை உருவாக்கிய நேரம் பிரம்ம முகூர்த்த நேரம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். 

உஷத் காலம்: 

அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.  உஷத் என்னும் பெண் தேவதையைப் பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.  அந்த தேவதை தோன்றிய பின்பே சூரியன் உதயமாகின்றதாம். இதனாலேயே விடியற்காலை உஷத் காலம் எனப்படுகிறது. இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கி சாய்வதால், அந்த வேளையில் குளித்து விட்டு இறைவனை வணங்குவது  விசேஷமாக சொல்லப்படுகிறது. இதனால்தான் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாக காணப்படுகிறது.  இந்த காலத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வானமண்டலத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் கண்டிப்பாக தூங்கக்கூடாது. தியானம், வழிபாடு போன்ற பயனுள்ள பணிகளைச் செய்யவேண்டும். இந்த நேரத்தில் செய்யும் வழிபாடு பலமடங்கு புண்ணியத்தை தரும். 


வெற்றி கிடைக்கும்: 

உங்கள் வாழ்வில் மாற்றத்தை சரி செய்ய லட்சுமி கடாக்ஷத்துடன், நினைத்த காரியங்களை நிறைவேற்ற, நீங்கள் இந்த பிரம்ம முகூர்த்தத்தைப் பயன்படுத்தலாம்! நீங்கள் எதை அடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை மீண்டும், மீண்டும் நினைப்பதற்கும்  நல்ல நேரம் பிரம்மமுகூர்த்தம். அதுபோல் நமது மனதில் இருக்கும் எண்ணங்களை வைப்பதற்கான நேரம் தான் இந்த பிரம்மம் உங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பிரம்ம முகூர்த்த தினம் தினமும் காலையில் தொடர்ந்து எந்த விஷயங்களை செய்கிறோமோ அதில் நாம் மாபெரும் வெற்றியை அடைய முடியும்.

கோடீஸ்வரர்கள் நேரம்: 

எந்த ஒரு நல்ல காரியத்திலும் தொடக்கம் சரியாக இருந்தால் முடிவும் சரியாக இருக்கும். ஆரம்பிக்கும் நேரம் நேரம் பிரம்ம முகூர்த்தம் ஆக இருந்தால், நம் வாழ்வில் வெற்றி இடம்பெறும். ஆகையால் சூரியனுக்கு முன் எழுந்து, சூரியனை விட உயர்ந்த வாழ்க்கையை நீங்கள் நிச்சயம் அடைய முடியும். இன்றைக்கு வாழ்க்கையில் வெற்றி பெற்ற அனைவருமே அதிகாலையில் எழுந்தவர்கள்தான். பெரிய சாதனை படைத்த  மிகப் பெரும் கோடீஸ்வரர்கள் அனைவருமே இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் எழுந்து செயல்பட ஆரம்பிக்கிறார்கள்.  நீங்களும் உங்கள் தினத்தை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து தொடங்குங்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும் ஆயுள் அதிகரிக்கும் கோடி கோடியாக செல்வம் தேடி வரும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow