Today Horoscope: இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 14 - புதன் அருளால் யாருக்கு புகழ் கிடைக்கும்?

Today Horoscope Predictions in Tamil: புதன் பகவானின் அருள் நிறைந்த புதன்கிழமையான இன்றைய தினம் சந்திரன் விருச்சிகம் ராசியில் பயணம் செய்கிறார். சந்திரன் பயணத்தாலும் பார்வையாலும் எந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டம் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

Aug 14, 2024 - 05:31
Aug 15, 2024 - 09:59
 0
Today Horoscope: இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 14 - புதன் அருளால் யாருக்கு புகழ் கிடைக்கும்?
இன்றைய ராசி பலன்

Today Horoscope Predictions in Tamil: நிகழும் மங்களகரமான குரோதி வருடம் ஆடி மாதம் 29ஆம் நாள் ஆகஸ்ட் 14ஆம் தேதி புதன்கிழமை நவமி திதி பகல் 10.24 மணி வரை அதன் பின் தசமி திதி. அனுஷம் நட்சத்திரம் பிற்பகல் 12.12 மணி வரை அதன் பின் கேட்டை நட்சத்திரம். சந்திரன் பயணத்தால் மேஷம் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். இன்றைக்கு யாருக்கு சந்திராஷ்டமம் கவனமாக இருக்க வேண்டியது யார் என்று பார்க்கலாம். 


மேஷம்

சந்திரன் இன்றைய தினம் எட்டாம் வீட்டில் பயணம் செய்வதால் வீண் பேச்சுக்களை பேச வேண்டாம். பணம் விவகாரங்களில் கவனமாக இருங்க. இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் வேலைகளில் தடங்கல்கள் ஏற்படும். வியாபார ரீதியாக பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளில் இறங்காதீர்கள். உங்க வேலையில் கவனமாக இருங்க. எந்த சூழ்நிலையிலும் வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம்.

ரிஷபம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் நன்மை ஏற்படும். இன்று நீங்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கணவன் மனைவி இடையே பிரச்சினை அதிகரிக்கும்.  ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம்

சந்திரன் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் இன்று வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன்  கிடைக்கும்.  விஐபிக்கள் அறிமுகம் கிடைக்கும். தங்க நகைகள் வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க.

கடகம்

சந்திரன் இன்றைய தினம் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலை செய்யும் இடங்களில் சக தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து போங்க. வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

சிம்மம்

சந்திரன் உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று நீங்கள் மந்த நிலையில் இருப்பீர்கள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் ஏற்படும். சம்பள பணம் வரும் வரைக்கும் பணத்தை சிக்கனமாக செலவழிங்க பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கலாம்.  

கன்னி

சந்திரன் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று உங்களின்  உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்ப உறவுகளுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். இன்றைய தினம் நீங்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திடீர் பணவரவு வரும். வீட்டில் கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

துலாம்

சந்திரன் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்களுடைய உடல் நிலையில் சோர்வும், மந்தநிலையும் அதிகரிக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.  பணவரவும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு சற்று குறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். பேச்சில் கவனமாக இருக்கவும். ஆன்மீக பயணம் செல்வீர்கள்.

விருச்சிகம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்குள் சஞ்சரிக்கிறார். மன கலக்கம் அதிகரிக்கும். நீங்கள் சுப செலவுகள் செய்வீர்கள். செய்யும் தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.  வேலைபளு சற்று குறையும். பிள்ளைகளால் பெருமை அதிகரிக்கும். இன்றைய தினம் செய்யும் வேலைகளில் கவனம் தேவை. 

தனுசு

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். நெருங்கியவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். விரைய செலவுகளை தவிர்த்து சிக்கனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

மகரம்

சந்திரன் உங்க ராசிக்கு லாப வீட்டில் பயணம் செய்வதால் மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் தேடி வரும். வீட்டின் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். பிரச்சினைகள் தீர உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். 

கும்பம்

சந்திரன் உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார்.  நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் கூடும்.

மீனம்

சந்திரன் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் வீண் பிரச்சினைகளை வரலாம் வேலையில் கவனம் தேவை. உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow