எது Toxic Relationship? காதலர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

Toxic Relationship Tips in Tamil : நச்சு உறவு என்றால் என்ன? இது போன்ற சந்தேகங்களுக்கு மருத்துவர் சித்ரா கூறும் விளக்கங்களைக் கீழே பார்க்கலாம்.

Jul 22, 2024 - 12:43
Jul 22, 2024 - 13:31
 0
எது Toxic Relationship? காதலர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்
What is Toxic Relationship?

Toxic Relationship Tips in Tamil : இந்த காலத்து Gen Z தலைமுறையினர் மத்தியில் “Toxic Relationship”, “Toxic Marriage" போன்ற வார்த்தைகள் சர்வ சாதாரனமாக உலாவி வருகின்றன. அதே போல் இன்றைய காலகட்டத்தில் Break Up மற்றும் விவாகரத்து மிகவும் எதார்த்தமாகிவிட்டது. இதற்கு possessiveness-தான் காரணமா? அல்லது தம்பதியினருக்கு நடுவே புரிதல் இல்லாதது காரணமா? Toxic Relationship என்றால் என்ன? போன்ற சந்தேகங்களுக்கு மருத்துவர் சித்ரா கூறும் விளக்கங்களைக் கீழே பார்க்கலாம். 

நமக்கு மிகவும் பிடித்தமான ஒருவர் மீது வைக்கும் அதீத அன்பு நாளடைவில் Possessiveness-ஆக மாறுகிறது. அதன் எல்லை குறித்து விளக்கமளிக்கும் மருத்துவர் சித்ரா, “ஒரு ரிலேஷன்ஷிப்-ல Possessiveness இருக்குறது தப்பில்லை. ஆனால் அது எல்லையை மீறிப் போனால் Break Up மற்றும் விவாகரத்துலதான் கொண்டுபோய் நிறுத்தும். Possessiveness எப்போ அளவை தாண்டி போகுதோ அப்போதான் அது Toxic Relationship-ஆ மாறுது. Honeymoon பீரியட்-னு சொல்ற ஆரம்பக்காலத்துல நமக்கு பிடிச்சவங்க நம்ம மேல Possessive-ஆ இருக்குறது ரொம்பவே நல்லா இருக்கும். ஆனால் அதுவே போக போக நம்ம கழுத்த நெறிக்குற மாதிரி ஆகிரும். அந்த கட்டத்துலதான் தனி மனித சுதந்திரம் கெட்டுப்போகுது” என்கிறார். 

Possessiveness பொதுவாக எல்லோரிடமும் காணப்படும் ஒரு பன்புதான். ஆனாலும் இது அதிகமாக யாரிடத்தில் இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த மருத்துவர் சித்ரா, “தங்கள் மீது தங்களுக்கே நம்பிக்கை இல்லாதவர்கள், தங்களின் Relationship மீது நம்பிக்கை இல்லாதவர்கள், Insecurity உணர்வு உள்ளவர்கள் போன்றோருக்குதான் Possessiveness அதிகமா இருக்கும். எங்க வேற யாராவது அழகா வந்தா நம்ம லவ்வர் நம்மள விட்டு போயிருவாங்களோ? நம்ம கணவர்/ மனைவி-க்கு நம்மள பிடிக்காம போய்விடுமோ? இப்படியெல்லாம் பயத்துல இருக்குறவங்க கிட்ட சீக்கிரமே ஒரு Controlling குணம் வந்துரும். நீ ஏன் அவங்ககிட்ட பேசுற? நீ ஏன் அங்க போற? இப்படியான கேள்விகள் அப்போதான் வரும்” என்கிறார். 

தொடர்ந்து பேசிய அவர், “Possessiveness இல்லாத இடைத்துலதான் ‘Attention seeking’ அதாவது ‘கவனம் ஈர்த்தல்’ என்ற விஷயம் உருவாகும். இது குறிப்பா பெண்கள் கிட்ட அதிகமாவே பார்க்க முடியும். காதலிக்க ஆரம்பித்த நாட்கள் மாதிரி நம்ம காதலன் ஏன் நம்மள பார்க்கல என்ற கேள்விக்கான பதிலை பெண்கள் அதிகமாவே தேடுவாங்க. வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. அடுத்த கட்டத்துக்கு உங்க Relationship நகரும்போது சில மாற்றங்கள் இருக்கத்தான் செய்யும். அதை புரிந்துகொண்டு அதன் போக்கில் போறதுதான் அந்த உறவுக்கும் நல்லது அந்த தம்பதிக்கும் நல்லது. இல்லைனா Break Up அல்லது விவாகரத்துலதான் முடியும். சினிமாவில் வரும் காதல் ஜோடிகளை பார்த்துட்டு நிஜ வாழ்க்கையிலும் அப்படிதான் இருக்கனும்னு எதிர்பார்க்குறது முட்டாள்தனம். ஒரு உறவில் காதல் எப்படி முக்கியமோ அதே மாதிரி பொறுப்பும், சுய வளர்ச்சியும் முக்கியம். அதை புரிந்துகொண்டால் தேவையில்லாத பிரச்சனைகளையும் சந்தேகங்களையும் தவிர்க்கலாம்” என்றார். 


“உங்க உணர்வுகளை உங்க பாட்னரிடம் வெளிக்காட்டாமல் இருக்கும்போதுதான் Possessiveness, சந்தேகம் எல்லாமே வரும். இதை தவிர்த்துட்டாலே உங்க உறவு ரொம்ப அழகானதாவும் ஆரோக்கியமானதாவும் இருக்கும். ஒரு உறவுல வெளிப்படைத்தன்மை ரொம்ப முக்கியம். அப்போதான் உறுதியான நம்பிக்கை உண்டாகும்” என்ற குட்டி அறிவுரையுடன் முடிக்கிறார் மருத்துவர் சித்ரா.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow