Vaazhai Movie : ‘வாழை’ படம் இல்ல காவியம்... இயக்குநர் பாலாவை கண்கலங்க வைத்த மாரி செல்வராஜ்!
Actor Soori Praised Mari Selvaraj's Vaazhai Movie Making : மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை பார்த்த இயக்குநர் பாலா, நடிகர் சூரி மாரி செல்வராஜ்ஜை கட்டியணைத்து பாராட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

Actor Soori Praised Mari Selvaraj's Vaazhai Movie Making : விக்ரம் நடித்த சேது திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா. சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் தடுமாறி வந்த விக்ரமுக்கு, மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது சேது. அவரை விடவும் தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநர் என்ற அடையாளம் பெற்றார் பாலா. சேதுவை தொடர்ந்து நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, நாச்சியார் என பாலா இயக்கிய ஒவ்வொரு படங்களும் சினிமா ரசிகர்களுக்கான தரமான ட்ரீட்டாக அமைந்தது. தற்போது அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படத்தை இயக்கியுள்ளார் பாலா.
பாலாவின் சேது, நந்தா, பிதாமகன், அவன் இவன் போன்ற படங்களில் காமெடி தூக்கலாக இருந்தாலும், கிளைமேக்ஸில் ரசிகர்களை அழ வைத்துவிடுவார் அவர். அப்படிப்பட்ட பாலவையே கண் கலங்க வைத்துள்ளார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னனை தொடர்ந்து, மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’ திரைப்படம் நாளை வெளியாகிறது. தனது பயோபிக் மூவியாக, அதாவது தன் வாழ்வின் ஒரு ஆண்டில் நடைபெற்ற வாழ்வியல் சம்பவங்களை தொகுத்து படமாக இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ்.
வாழை ட்ரெய்லர் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தது. அதோடு இயக்குநர்கள் வெற்றிமாறன், மணிரத்னம், மிஷ்கின், பாலாஜி சக்திவேல், ராம், தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட பலரும் வாழை படத்தை பார்த்துவிட்டு மாரி செல்வராஜ்ஜை பாராட்டியிருந்தனர். இந்த வரிசையில் இயக்குநர் பாலா, நடிகர் சூரி ஆகியோருக்கும் வாழை படத்தை தனியாக திரையிட்டுக் காட்டியுள்ளார் மாரி செல்வராஜ். இதனையடுத்து வாழை படம் பார்த்துவிட்டு வெளியே வந்த இயக்குநர் பாலா, ரொம்பவே எமோஷனலாக மாரி செல்வராஜ்ஜை கட்டியணைத்தார்.
மேலும் படிக்க - விஜய்யின் அரசியல் அத்தியாயம் தொடங்கியது
அதுமட்டும் இல்லாமல் பேச வார்த்தைகளே இல்லாமல் தடுமாறிய பாலா, மாரி செல்வராஜ்ஜுக்கு முத்தம் கொடுத்து தனது அன்பையும் பாராட்டுகளையும் வெளிப்படுத்தினார். இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள மாரி செல்வராஜ், ”முத்தம், நன்றி பாலா சார்” என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், இயக்குநர் பாலவையே மாரி செல்வராஜ் அழ வைத்துவிட்டாரே என பாராட்டி வருகின்றனர். அதேபோல், நடிகர் சூரியும் வாழை படம் பார்த்துவிட்டு இயக்குநர் மாரி செல்வராஜ்ஜை கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். சில நிமிடங்கள் வரை மாரிசெல்வராஜ்ஜை விட்டு விலகாமல், சூரி அங்கேயே நின்று கண் கலங்கினார்.
சூரி நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படமும் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பிஎஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். கொட்டுக்காளி படத்துக்கும் பிரபலங்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. நாளை திரையரங்குகளில் வெளியாகும் கொட்டுக்காளி, வாழை என இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?






