Viduthalai 2: இறுதிக்கட்டத்தில் விடுதலை 2... தரமான அப்டேட்டை வெளியிட்ட படக்குழு... அடுத்து என்ன..?

விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை 2ம் பாகம் டிசம்பர் மாதம் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் இருந்து சூப்பரான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

Oct 10, 2024 - 23:30
Oct 10, 2024 - 23:31
 0
Viduthalai 2: இறுதிக்கட்டத்தில் விடுதலை 2... தரமான அப்டேட்டை வெளியிட்ட படக்குழு... அடுத்து என்ன..?
விடுதலை 2 டப்பிங் தொடங்கியது

சென்னை: வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு மார்ச் 31ம் தேதி வெளியானது. சூரி கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதி லீடிங் ரோலிலும் நடித்திருந்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அதேபோல், கெளதம் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன் ஆகியோரும் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தனர். 1980களில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து உருவான விடுதலை முதல் பாகம், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேநேரம் இந்தப் படத்தின் கதையில் சில வரலாற்றுப் பிழைகள் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

இதனால் விடுதலை 2ம் பாகத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்த வெற்றிமாறன், மீண்டும் படப்பிடிப்பு நடத்தினார். முன்னதாக விடுதலை முதல் பாகத்துடன், 2ம் பாகத்திற்கான காட்சிகளையும் வெற்றிமாறன் படமாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், விடுதலை முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்தில் மேலும் பல புதிய நடிகர்கள் கமிட்டாகினர். அதன்படி, கிஷோர், மஞ்சு வாரியர், கென் கருணாஸ் ஆகியோரும் விடுதலை 2ம் பாகத்தில் நடித்துள்ளனர். முதல் பாகத்துக்கு கிடைத்த நெகட்டிவான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, விடுதலை 2 இருக்கும் எனத் தெரிகிறது.

விடுதலை 2ம் பாகத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதன்படி இத்திரைப்படம் டிசம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து விடுதலை 2ம் பாகத்தின் இறுதிக்கட்ட பணிகளில் வேகம் காட்டி வரும் படக்குழு, ஆயுத பூஜையை முன்னிட்டு சூப்பரான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது விடுதலை 2ம் பாகத்தின் டப்பிங் வேலைகள் தொடங்கிவிட்டதாக புகைப்படங்களுடன் அறிவித்துள்ளது. இதில், விஜய் சேதுபதி, சூரி, போஸ் வெங்கட் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 

இதனால் இன்னும் ஓரிரு வாரங்களில் விடுதலை 2ம் பாகத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அல்லது டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் விடுதலை 2, இரண்டு பாகங்களாக வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி சில தினங்களுக்கு முன்னர் பேசியிருந்த சூரி, மீண்டும் வெற்றிமாறன் கூட்டணியில் இணைந்துள்ளேன், இது மிகப் பெரிய அப்டேட்டாக இருக்கும் எனக் கூறியிருந்தார். அதன்படி சூரி கூறியது விடுதலை 3ம் பாகம் பற்றியதாக இருக்கலாம் எனத் தெரிகிறது. விடுதலை 2ம் பாகத்துக்காக ஷூட் செய்யப்பட்ட ஃபுட்டேஜ் அதிகம் இருந்ததால், அதனை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய வெற்றிமாறன் முடிவு செய்துள்ளாராம். ஆனாலும் இதுபற்றி படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே விடுதலை 2 முடிந்துவிட்டதால் சீக்கிரமே வாடிவாசல் படம் பற்றிய அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கவுள்ள வாடிவாசல், கடந்தாண்டே தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால், விடுதலை 2ம் பாகம் காரணமாக வாடிவாசல் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow