ஆகஸ்ட் மாத ராசி பலன் 2024: தேடி வரப்போகும் ராஜயோகம்.. ஆகஸ்ட்டில் யாருக்கு ஜாக்பாட் அடிக்கும்?

August Month Rasi Palan 2024 in Tamil : ஆகஸ்ட் மாதத்தில் நவ கிரகங்களின் கூட்டணியால் யாருக்கு ராஜயோகம் தேடி வரப்போகிறது. எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Jul 29, 2024 - 05:00
Jul 29, 2024 - 12:36
 0
ஆகஸ்ட் மாத ராசி பலன் 2024: தேடி வரப்போகும் ராஜயோகம்.. ஆகஸ்ட்டில் யாருக்கு ஜாக்பாட் அடிக்கும்?
August Month Rasi Palan 2024 in Tamil

August Month Rasi Palan 2024 in Tamil : ஆகஸ்ட் மாதத்தில் குரு செவ்வாய் கூட்டணி ரிஷப ராசியில் தொடர்கிறது. சிம்ம ராசியில் சூரியன், புதன், சுக்கிரன் இணைந்து புது யோகத்தை தரப்போகின்றனர். சனி, புதன் வக்ர நிலையால் மேஷம், ரிஷபம், மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன யோகம் கிடைக்கப்போகிறது? வேலை கிடைக்குமா? பண வருமானம் அதிகரிக்குமா என்று பார்க்கலாம். 

மேஷம்: 

குரு செவ்வாய் கூட்டணியால் உங்களுக்கு அற்புதமான யோகம் தேடி வரப்போகிறது.  ராசி அதிபதி 1, 9 கூட்டணி ராஜயோகம், 5ஆம் வீட்டில் புதன், சுக்கிரன் சூரியன் கூட்டணி ராஜயோகத்தை தரப்போகிறது. சுக்கிரன் 6ஆம் வீட்டில் கேது உடன் இணைந்து நீச்சமடையப்போகிறார். சனி வக்ரம் பெற்று லாப வீட்டில் பயணம் செய்கிறார்.

மேஷ ராசி மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். எதையும் தைரியமாக முடிவு செய்யுங்கள். நல்ல நேரம் கைகூடி வந்துள்ளது. சுய ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி உள்ளது என்று பார்க்கவும். புது வேலை தொழில் நன்மையை கொடுக்கும். வக்ர சனி உங்களுக்கு விரைவான லாபத்தை கொடுக்கும். வேலையில் திருப்தியை கொடுக்கும்.

திருமண சுப காரிய முயற்சிகள் கைகூடி வரப்போகிறது. குரு மங்கள யோகம் கை கூடி வந்துள்ளதால் ஆடி போய் ஆவணியில் சேதி சொல்லலாம். வரன் பார்க்க தொடங்கலாம். கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும்.

மாணவர்களுக்கு இது நல்ல மாதம். உயர் கல்வி முயற்சியில் வெற்றி கிடைக்கும். எதையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள். இல்லத்தரசிகளுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நோய்கள் நீங்கும். மாத இறுதியில் சுக்கிரன் 6ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைந்து கேது உடன் இணைந்து பயணம் செய்யப்போகிறார். வயிற்றில் சில பிரச்சினைகள் வரலாம் குருவின் பார்வை சுக்கிரன் கேது மீது விழுவதால் நோய்கள் குணமடையும். மொத்தத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம்(August Month Mesham Rasipalan) அற்புதங்களை ஏற்படுத்தப்போகிறது. 

ரிஷபம் 

ராசியில் குரு செவ்வாய் இணைந்து குரு மங்கல யோகத்தை தரப்போகிறது. நான்காம் வீட்டில் மூன்று கிரகங்கள் இணைவதால் யோகங்கள் கைகூடி வந்துள்ளன. மதன கோபால யோகம், ராஜயோகம், லட்சுமி நாராயண யோகம்.  நினைத்த காரியம் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் லாபத்தை தரும்.  சனி, புதன் வக்ர நிலையில் பயணம் செய்வது உங்களுக்கு பாதகமில்லை. தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்யும் சனி வக்ரமடைவதால் வேலை தொழிலில் புதிய உற்சாகத்தை தரப்போகிறது. 

சுக்கிரன் உங்கள் ராசி நாதன், உங்களுக்கு அழகு ஆரோக்கியத்தை தரப்போகிறார். மாத இறுதியில் சுக்கிரன் கேது உடன் இணைந்து நீச்சமடைந்தாலும் பாதகமில்லை. உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டின் மீது குரு, செவ்வாய் பார்வை விழுகிறது. திருமண சுப காரியத்திற்கு முயற்சி செய்யலாம். 

கணவன் மனைவி இடையே கோபதாபதங்கள் வந்து நீங்கும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. காதல் கை வரப்போகிறது. உங்கள் மனதிற்கு பிடித்தவரை சந்திக்கப்போகிறீர்கள். வித்தைகளை கற்றுக்கொள்ளப்போகிறீர்கள். பிடித்த கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஆகஸ்ட் மாதம்(August Month Rishabam Rasipalan) சுகமும் சந்தோஷமும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. 

மிதுனம்:

குரு செவ்வாய் இணைந்து 12ஆம் வீட்டில் பயணம் செய்கின்றனர். மூன்றாம் வீட்டில் கிரகங்கள் இணையப்போகின்றன. புதிய முயற்சிகளை செய்வதை தள்ளிப்போடுவது நல்லது. சனி 9ஆம் வீட்டில் வக்ர நிலையில் பயணம் செய்கிறார். வேலை விசயமாக செய்யும் முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. இருக்கும் வேலையை காப்பாற்றிக்கொள்வது நல்லது. பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் எதுவும் வேண்டாம். செலவுகள் அதிகரிக்கும்.          

குடும்பத்தில் கார சார விவாதங்கள் வந்து போகும். மனதிற்குள் சில மாற்றங்கள் ஏற்படும். மன குழப்பங்கள் வந்து போகும். எதையும் யோசித்து தெளிவாக முடிவு எடுங்கள் அவசரப்பட்டு முடிவு செய்யாதீர்கள் ஆபத்தாகிவிடும். திருமணத்திற்கு வரன் தேடுபவர்கள் கவனமாகவும் நிதானமாகவும் முடிவு செய்வது நல்லது. மாணவர்கள் உயர்கல்விக்காக முயற்சி செய்பவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் சொல்வதை கேட்டு முடிவு செய்வது நல்லது. 

புதன், சுக்கிரன் சேர்க்கையால் யோகங்கள் வந்தாலும் கோவில்களுக்கு சென்று ஆலய தரிசனம் செய்வது இல்லத்தரசிகளுக்கு மன அமைதியை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையும் காட்டுவது நல்லது. கேது உடன் சுக்கிரன் இணையும் போது மருத்துவ செலவுகள் வர வாய்ப்பு உள்ளது. நான்காம் வீட்டில் சுக்கிரன் கேது சேர்க்கையால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். காரமான எண்ணெய் பலகாரங்களை அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow