Rahu Ketu Peyarchi Palan 2024 : கோடி கோடியாக அள்ளித்தரப்போகும் ராகு.. பண மழை யாருக்கு?

மீன ராசியில் சனியின் நட்சத்திரத்தில் பயணம் செய்யும் ராகு சில ராசிக்காரர்களுக்கு கோடி கோடியாக செல்வத்தை அள்ளித்தரப்போகிறார். குரு பகவானைப் போல பயணம் செய்யும் ராகு யாருக்கு விபரீத ராஜயோகத்தை அள்ளித்தரப்போகிறார் என்று பார்க்கலாம்.

Aug 24, 2024 - 18:01
Aug 25, 2024 - 09:33
 0
Rahu Ketu Peyarchi Palan 2024 : கோடி கோடியாக அள்ளித்தரப்போகும் ராகு.. பண மழை யாருக்கு?
rahu ketu peyarchi palan 2024

சென்னை: குருவின் வீடான மீன ராசியில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார் ராகு. ராகுவின் நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். 

துலாம்:  

எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு,ஆகிய ஸ்தானத்தில் ராகு பயணம் செய்வதால் கடன்கள் அடைப்படும் தீராத நோய் தீரும். தொழில் முயற்சிகள் கை கூடும். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். திருமணம் கை கூடி வரும் சந்தான யோகம் தேடி வரும். நீண்ட நாள் பட்ட கடன்களும் அடைபடும். உங்களை இதுநாள் வரைக்கும் வாட்டி வதைத்த பிரச்சினைகள்  தீரப்போகிறது.

விருச்சிகம்:

ராகு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி அன்பும் பாசமும் அதிகரிக்கும். சிலருக்கு இட மாறுதல்கள் ஏற்படும்.  வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். 

தனுசு: 

ராகு பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் பயணம் செய்வதால் பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார். வருமானம் அதிகரிக்கும். பழைய கடன்கள் அடைப்படும். வங்கி சேமிப்புகள் உயரும். தொழில் நிலை முன்னேற்றத்தை தரும். தடைப்பட்ட சுபகாரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.

மகரம்: 

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர  ராசிக்காரர்களே. சனியில் வீட்டில் பயணம் செய்யும் ராகு பகவான் உங்களுக்கு யோகத்தை வாரி வழங்க போகிறார். இனி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும்.  வீட்டுத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டீர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள். 

கும்பம்:

வாக்கு ஸ்தானத்தில் ராகு பயணம் செய்வதால் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம்.  நிதானமாக பேசுங்கள் கோபத்தை தவிருங்கள். பண விசயத்தில் யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். பணவருமானம் அதிகமாகும். சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் அகலும். சொல்லிலும் செயலிலும் வேகம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். 

மீனம்:

உங்கள்  ராசிக்குள் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ராகு பயணம் செய்வதால் பண வரவு அதிகரிக்கும் . குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.   குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிலருக்கு திருமண யோகம் கைகூடும். வரவுக்கு மீறி செலவு செய்வதை தவிர்க்கவும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow