புதன் பெயர்ச்சி பலன் 2024: ஆடியில் சிம்மத்தில் குடியேறும் புத்தி நாதன் புதன்.. ஜாக்பாட் யாருக்கு?

Budhan Peyarchi Palangal 2024 : புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருக்கும் இவர், அறிவு, ஆற்றல், கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குவதால்தான் வித்தைக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்.

Jul 18, 2024 - 15:29
Jul 19, 2024 - 10:05
 0
புதன் பெயர்ச்சி பலன் 2024: ஆடியில் சிம்மத்தில் குடியேறும் புத்தி நாதன் புதன்.. ஜாக்பாட் யாருக்கு?
Budhan Peyarchi Palangal 2024

Budhan Peyarchi Palangal 2024 : நவக்கிரகங்கள் ஒவ்வொரு ராசிக்கும் இடம் பெயரும் போது ஒவ்வொரு ராசிக்கும் வெவ்வேறு விதமான பலன்கள் ஏற்படும். புத்திக்கு அதிபதியான புதன் பகவான் வரும் நாளை வெள்ளிக்கிழமை 19ஆம் தேதி முதல் சிம்ம ராசியில் பயணம் செய்யப்போகிறார். ஆடி மாதத்தில் நெருப்பு ராசியான சூரியன் வீடான சிம்ம ராசியில் குடியேறப்போகும் புதனால் எந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்:  

புதன் பகவான் ஐந்தாவது வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். உங்கள் எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு இது சிறந்த நேரமாகும். ஷேர் மார்க்கெட் முதலீடுகள் மூலம் திடீர் ஜாக்பாட் அடிக்கப்போகிறது.

ரிஷபம்:

 புதன் நான்காவது வீட்டில் பயணம் செய்யப்போவதால் உங்கள் மனதில் அமைதி நிலைத்திருக்கும். திருமணமான தம்பதியினருக்கு நெருக்கம் கூடும். மனைவிக்கு பொன் நகைகளை வாங்கி பரிசளிப்பீர்கள். இந்த நேரத்தில் புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகமும் கை கூடி வருகிறது. உங்கள் உடல் நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். காய்ச்சல், சளி போன்ற சின்னச் சின்ன தொந்தரவுகள் வந்து நீங்கும்.

மிதுனம்:

புதன் பகவான் உங்களுடைய ராசிக்கு மூன்றாவது வீட்டில் பயணம் செய்வதால் உங்களுடைய தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.  வேலை செய்யும் இடத்தில் கவனமும் விழிப்புணர்வும் தேவை. தொழில் வியாபாரத்தில் அதிக அளவில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். 

கடகம்:

புதன் பகவான் உங்கள் ராசியில் இருந்து இரண்டாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போவதால் உங்களுடைய பேச்சிற்கு மதிப்பு கூடும்.  உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். உங்களுக்கு வேலையில் பளு கூடும். இதனால் மன அழுத்தப் பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உறவினர்களுடன் பேச்சு வார்த்தையில் விட்டுக்கொடுத்து செல்லவும். எதையும் தைரியமாக எதிர்கொண்டால் பிரச்சினைகளை எளிதில் கையாளலாம்.

சிம்மம்:

சூரிய பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்குள் புதன் குடியேறப்போகிறார். உயர்கல்வி தொடர்பான முயற்சிகளை வெற்றியைத் தரும். கலைத்துறையில் இருப்பவர்களின் படைப்பாற்றல் திறன் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். உங்களின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பண வருமானம் அதிகரிக்கும். 

கன்னி:

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 12வது வீடான விரைய ஸ்தானத்தில் ராசிநாதன் புதன் பயணம் செய்கிறார். பேச்சில் கவனமும் நிதானமும் தேவை. வெளிநாடு தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நல்ல செய்தி தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையும் தேவைப்படும்.

துலாம்:

புதன் பகவான் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் குடியேறப்போவதால் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உங்கள் விருப்பங்கள் எளிதில் நிறைவேறும். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை தரும்.  நெருங்கிய நண்பர்கள் உறவினர்களிடம்  கவனம் தேவை. பணத்தையும் விலை உயர்ந்த பொருட்களையும் பத்திரப்படுத்தவும். 

விருச்சிகம்:

வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வேலைப்பளு அதிகரித்தாலும் பாராட்டு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

தனுசு:

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானமான 9 வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்கிறார். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். பெற்றோர்களின் உதவி கிடைக்கும்.   கமிஷன், புரோக்கரேஜ் வழியில் பணம் வரும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு திடீர் புரமோசன் கிடைக்கும். 

மகரம்:

எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்யும் புதன் பகவானால் வேலை செய்யும் இடத்தில் கவனமும் நிதானமும் தேவை. பெண்களுக்கு  ஆடை ஆபரணம் சேர்க்கை அதிகரிக்கும்.  குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பண விசயங்களில் கவனம் தேவை. யாருக்கும் பணம் கடனாகக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். 

கும்பம்:

புதன் பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். புதனின் பார்வை உங்கள் ராசிக்கு நேரடியாக கிடைப்பதால் தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.  கூட்டுத்தொழிலில் பங்குதாரா்களிடம் எச்சாிக்கையாக இருக்கவும். பணப்பிரச்னை நீங்கி பொருளாதார வளம் அதிகரிக்கும். உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். நண்பா்கள் எதிரிகளாகும் நேரம் இது. கூட்டுத்தொழிலில் கவனமும் நிதானமும் தேவை. 

மீனம்:

ஆறாவது வீட்டில் புதன் பகவான் அமரப்போவதால் கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பங்குச்சந்தை முதலீடுகளை தவிர்க்கவும்.  தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. அரசாங்க தேர்வுகளுக்குத் தயாராகும் போட்டியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் நல்ல காலம். புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வழிபடுவது நன்மையை தரும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow