Today Horoscope: இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 19 - ஆவணி பவுர்ணமி நாளில் அதிர்ஷ்டம் யாருக்கு?

Today Horoscope Predictions in Tamil: சந்திர பகவானின் அருள் நிறைந்த திங்கட்கிழமையான இன்றைய தினம் சந்திரன் மகர ராசியிலும் கும்ப ராசியிலும் பயணம் செய்கிறார். சந்திரன் பயணத்தாலும் பார்வையாலும் எந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டம் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

Aug 19, 2024 - 07:16
 0
Today Horoscope: இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 19 - ஆவணி பவுர்ணமி நாளில் அதிர்ஷ்டம் யாருக்கு?
Today Rasi Palan 2024

Today Horoscope Predictions in Tamil: நிகழும் மங்களகரமான குரோதி வருடம் ஆவணி மாதம் 03ஆம் நாள் ஆகஸ்ட் 19ஆம் தேதி திங்கட்கிழமை பவுர்ணமி திதி இரவு  11.55 மணி வரை அதன் பின் பிரதமை. திருவோணம்  நட்சத்திரம் காலை 08.10 மணி வரை அதன் பின் அவிட்டம் நட்சத்திரம். சந்திரன் பயணத்தால் மேஷம் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். ஆவணி அவிட்டம் இன்றைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டம்?கவனமாக இருக்க வேண்டியது யார் என்று பார்க்கலாம். 


மேஷம்

சந்திரன் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமானம் பெருகும்.  வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் விலகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.  குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி தேடி வரும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் மறையும்.


ரிஷபம்

சந்திரன் பத்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும்.  உடல் ஆரோக்கியம் சீராக அமையும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்களின் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

மிதுனம்

சந்திரன் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பதால் இன்று உங்களுக்கு உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.  வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு நல்ல முன்னேற்றத்தை தரும். இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு மன நிம்மதி ஏற்படும்

கடகம்

சந்திரன் எட்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். எதிலும் நிதானம் தேவை. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் நிதானமாக நடப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.


சிம்மம்

சந்திரன் ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் செயல்படுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். உறவினர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும். இன்று குடும்பத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் இன்று கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டால் லாபம் அடையலாம். வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேரும்.


கன்னி

சந்திரன் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்று குடும்பத்தில் தாராள தனவரவும், சுபிட்சமும் உண்டாகும். பிள்ளைகள் கல்வி விஷயமாக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும். வியாபாரத்தில் தேக்க நிலை நீங்கி சற்று முன்னேற்றம் ஏற்படும். இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நற்பலன் கிட்டும்.


துலாம்

சந்திரன் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். வெளி நபர்களால் வீண் பிரச்சினைகள் தோன்றும். தொழில் வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல செய்திகள் தேடி வரும். இன்று உங்களுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

விருச்சிகம்

சந்திரன் நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிசுமை கூடும். வியாபாரத்தில் ஏற்படும் எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். பொறுப்புடனும், சிக்கனத்துடனும் செயல்பட்டால் பண நெருக்கடிகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஓரளவு சாதகமாக இருப்பார்கள். இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு

சந்திரன் மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக வெளிநாட்டு நபர்கள் அறிமுகம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும்.

மகரம்

சந்திரன் இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று உங்களுக்கு பயணங்களால் வீண் அலைச்சலும் உடல் சோர்வும் ஏற்படும். ஆடம்பர செலவுகள் மூலம் சேமிப்பு குறையும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் அனுகூலப் பலனை அடையலாம். இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வெளியூர் பயணங்களில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளால் செலவுகள் ஏற்பட்டாலும் சுப செய்தி கிடைக்கும்.

கும்பம்

சந்திரன் உங்க ராசியில் சஞ்சரிப்பதால்  நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். இன்று  விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலங்கள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்

சந்திரன் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். குடும்பத்தில் பெரியவர்களுடன் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow